Monday, July 31, 2006

திசைகள் ஆகஸ்டு இதழ்: சில விளக்கங்கள் சில கேள்விகள்

தனிமனித உரிமைகள் எல்லோருக்கும் அவசியமா?

இந்த திசைகள் இதழில், தனி மனித உரிமைகள், சுதந்திரம் பற்றி எல்லோரும் பேசியிருந்தாலும், இதற்குள் பதுங்கிக்கிடக்கிற இதன் கோர உருவத்தைப் பற்றியும் யாராவது கொஞ்சம் சொல்லியிருக்கலாம். இப்பொழுது இருக்கிற சூழ் நிலையில் எந்த ஒரு ஆரோக்கியமான, அல்லது முன்னேற்றத்துக்கு எதிரான கருத்துக்கள் வந்தாலும், அதை ஆதரிக்க அல்லது எதிர்க்க குழுக்கள்/அமைப்புகள் இருக்கின்றன. இது எந்த ஒரு கருத்துக்கும் பொதுவானது. கருத்தைப் பொறுத்து, ஆதரவளிக்கிற அல்லது எதிர்க்கிறவர்களின் எண்ணிக்கை வித்தியாசப்படுகிறதே தவிர இந்த இருபட்ட நிலைமையின் இருப்பு உண்மையானது. உரிமைகள் என்ற பேரில், எதிரணி போராட்டம் நடத்துவதும், உண்ணாவிரதம் இருப்பதும் இப்பொழுது மிகமிக சாதாரணமாகிவிட்ட ஒன்று. ஒரு நடிகை சொன்ன கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தும் அளவிற்கு (ஒரு நாளைக்கு 24 மணி நேரத்துக்கும் அதிகமாக) எக்கச்சக்க நேரம் படைத்த ஒரே சமூகம், நம் தமிழ் சமூகம் தான் (சந்தோசப்படுவோமாக! தலை நிமிர்ந்து நிற்போமாக!!). இதனால், எல்லா முன்னேற்ற பணிகளும் தடைபடுகின்றன. அல்லது தாமதப்படுகின்றன. இந்த சூழ்நிலையில், ஒரு அமைப்பின் தலைமையில் இருந்துகொண்டு, புகழுக்காகவும், பத்திரிக்கைகளில் பெயர் வரவேண்டும் என்பதற்காகவும் பொறுப்பில்லாத
கருத்துக்களை வெளியிடுவதும், போராட்டங்களை திட்டமிடுவதுமாகவும் இருக்கிற மனிதர்களுக்கு, இந்த (எழுத்து மற்றும் பேச்சு) சுதந்திரம் வழங்கப்படுவது அவசியமானது தானா? இவர்களின் இந்த உரிமைகள், ஒரு மன நோயாளியின் கையில் இருக்கிற கூர்ந்த ஆயுதங்களாக அல்லவா தெரிகின்றன! அப்படியென்றால், இவர்களின் உரிமைகளைப் பிடுங்குவதில் தப்பென்ன? இந்த தனி நபர் உரிமைகளை அனுபவிக்க, குறைந்த பட்ச தகுதிகள் என்று எதையாவது அறிமுகப்படுத்தலாமா?



மதங்களை வம்புக்கிழுக்க வேண்டாமே!!


(இது தங்கமணியின் பதிவிற்காக எழுதப்பட்டது.)

கீழை மற்றும் மேலை உலகத்து மனிதர்களின் (தனிமனித) விடுதலை பற்றிய அறியாமைக்கு அல்லது விழிப்புணர்வுக்கு, மதங்களைக் காரணம் காட்டுவதை விட இரு இடங்களிலும் உள்ள சமூக கட்டமைப்பின் அடிப்படையில் இந்த விஷயத்தை அனுகுவதே மிகச்சரி. மேலை நாடுகளில் 16 அல்லது 18 வயதில் கிடைக்கிற சுதந்திரம் (பெற்றோர்களிடமிருந்தான விடுதலை) அவர்களின், பொறுப்புகள், கடமைகள், உரிமைகள் பற்றிய அறிவைக் கொடுக்க போதுமானதாயிருக்கிறது. அவரவர்களின் உணவை அவர்களே தேட வேண்டியிருக்கிறது. இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கான கட்டாய சமூக அல்லது இராணுவ சேவை அங்குள்ள இளைஞர்களைப் பொறுப்புள்ளவர்கள் ஆக்குகின்றன என்றால் அது மிகையாகாது. அதோடு, மேலை நாட்டு முறையின் குழந்தை வளர்ப்பு முறையும், இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உதாரணமாக, குழந்தைகளின் மீதான வன்முறை சட்டத்தால் மிகக்கடுமையாக கண்டிக்கப்படுகிறது. மேலும் தண்டிக்கப்படுகிறது. இந்திய சமூகத்தில் நிலைமை இப்படியில்லை. எத்தனை வயதான போதும், மகன் அல்லது மகளை காப்பாற்றும் கடமை இன்னும் பேற்றோர் மீதே படிந்து கிடக்கிறது. அது மட்டுமல்லாமல், பெற்றோரிடமிருந்தும் ஆசிரியர்களிடமிருந்தும் குழந்தைகள் மீதான வன்முறைகளுக்கு அளவேயில்லை. சிறுவயதில் ஆழப்படிந்து விடுகிற இந்த வன்முறை மீண்டும் நமது பிள்ளைகளின் மீது வேர்பிடித்து வளர்கிறது. வன்முறைக்கு ஆழாக்கப்பட்டவர்களும், அதை தலைமுறை தலைமுறையாய் நடத்திக்கொண்டிருப்பவர்களும் இருக்கும் சமுதாயத்தில், தனி நபர் விடுதலை, உரிமைகள் பற்றிய எண்ணம் எப்படி வரும்? அதனால், நமது சமூக கட்டமைப்பை சீர்திருத்தம் செய்தாலே போதுமானது. நமது சமுதாயம் பொறுப்புள்ள, நாட்டின் அக்கறையில் விருப்பம் உள்ள ஒன்றாக மாறிவிடும். மதங்களால் சமூகம் பாதிக்கப்படுவது என்பது என்னால் நம்பமுடியாத விசயம். பெற்றோர்களைத் தாண்டி, ஆசிரியர்களைத் தாண்டி, மனைவிகளைத் தாண்டி மற்றும் குழந்தைகளைத் தாண்டித் தான் மதம், ஒரு மனிதனை சந்திக்க வேண்டியிருக்கிறது. பெரும்பாலானோர் வாழ்க்கையில் அது கடைசி வாசலுக்கு வெளியே நின்று மெலிந்த சத்தத்துடன் பிச்சையெடுக்கும் பிச்சைக்காரன் போலத்தான் இருக்கிறது. பாவம் மதங்கள்! அவைகளை வம்புக்கிழுக்க வேண்டாமே!!

மழை விடுமா என்ன?

எனக்கே தெரியும் இது அப்படியொன்றும்
பிரமாதமான கவிதை இல்லையென்று..

இருந்தாலும் அனுப்பி வைக்கிறேன் -
நீ அப்படியொன்றும்
பிரமாதமான ரசிகன் இல்லையென்பதால்.

*

மேகம் ஒவ்வொரு முறையும்
கொட்டுகொட்டென்று மழை
பெய்துவிடுகின்றதா என்ன?

சில நேரம் குளிர்ந்த காற்றை மட்டும்
காதோரம் அனுப்பி வைக்கும் ...

இன்னும் சில நேரம்
மனிதர்கள்
குடை விறிக்கிற வரை அல்லது
ஏதோ கூரைக்கடியே பதுங்குகிற வரை
பாதையில் நீர்த்துளி தெளித்து வைக்கும்..

ஆனால், குடையில்லாமல் தனியாய்
பொட்டல்காட்டில் யாராவது
பயணிக்கும் போது
நிச்சயம்
முழுவதுமாய் தரையிறங்கும்.

விளையாட தனியாய் ஆள் கிடைத்தால்
மழை விடுமா என்ன?

* *

Thursday, July 27, 2006

ஒரு ஜென் கதையின் வெளிச்சத்தில் கற்பு பற்றி படிக்கலாமா?

முதலில் கதை:
ஜென் துறவிகளாகிய தான்சான் மற்றும் எகிடோ ஒரு மாலை நேரத்தில், காட்டிற்குள் இருக்கும் தங்கள் ஆசிரமத்தை நோக்கி நடந்துகொண்டிருந்தார்கள். கடுமையான மழை பெய்து ஓய்ந்திருந்தது. எங்கு பார்த்தாலும் சேறு. இடையே குறுக்காக ஓடிக்கொண்டிருக்கும் நதியில் இன்று வெள்ளம் வேறு.
நதியைக்கடப்பதற்கு முன், அங்கே ஒரு பெண் அமர்ந்து, நதியைக்கடக்க முடியாமல் தவித்துக்கொண்டிருப்பதை இருவரும் கவனிக்கின்றனர். எகிடோ முகத்தைத் திருப்பிக்கொண்டு, நதியில் இறங்கி நடக்கிறார். ஆனால், கொஞ்சம் கூட யோசிக்காமல், தான்சான் அந்த பெண்ணைத் தன் தோளில் ஏற்றிக்கொண்டு நதியைக் கடந்து மறுகரையில் விட்டுவிட்டு மீண்டும், எகிடோவுடன் சேர்ந்து நடக்கிறார். இந்த் நிகழ்ச்சி எகிடோவை மிகவும் கடுப்பேற்றியிருந்தது. ஒன்றுமே பேசாமல் இருவரும் வெகு நேரம் நடந்தனர். அவர்கள் ஆசிரமத்தை நெருங்கிய போது நன்றாக இருட்டியிருந்தது. அதற்கு மேலும், தன் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாத, எகிடோ தான்சானைப் பார்த்து கேட்கிறார் "நீ எப்படி இன்று மாலை அவ்வாறாகச் செய்யக்கூடும். நமது ஒழுக்கங்களின் படி, நாம் பெண்கள் அருகே போவதே மிகப்பாவம். அதோடு அழகான் பெண்கள் இன்னும் ஆபத்தானவர்கள். நீயோ, அவள் அருகில் சென்று, அவளைத் தொட்டு தூக்கியிருக்கிறாய்? இது நாம் வாழும் வாழ்க்கை முறைக்கு எதிரானது. ஏன் நீ அப்படிச் செய்தாய்?". அதற்கு தான்சான்," நான் அந்த பெண்ணை எப்பொழுதோ கரையில் இறக்கிவிட்டு வந்துவிட்டேன். நீ தான் அவளை இன்னும் சுமந்து கொண்டிருக்கிறாய்", என்று சொல்கிறார்.
(கதை முடிந்துவிட்டது. மீதிக்கதை எங்கே என்று தயவு செய்து கேட்டு வைக்காதீர்கள்)


இப்பொழுது பெரும்பாலான இந்தியர்களின் மன நிலை எகிடோவின் மன நிலையை ஒத்துத்தான்
இருக்கிறது. வேலிகளை உடைக்கவும் பயம்; அதே நேரம் மனதளவில் ஆசைகளை சுமந்து திரிவதே இவர்களின் வாழ்க்கை முறையாய் இருக்கிறது. அதே நேரத்தில், மேற்கத்திய மனிதனின் மன நிலையை தான்சானுவின் மன நிலையோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியும். கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் மதம் தனிமனிதன் மீதாக விதித்திருக்கிற கட்டுப்பாடுகளின் முற்கள் தன்னைக் காயப்படுத்திவிடாமல், மனதிற்கு சரியென்று படுவதை துணிந்து செய்துவிட்டு வாழும் வாழ்க்கை முறை ஒரு மேற்கத்திய மனிதனுடையது. இப்படியான கல்யாணத்திற்கு முன்னான பல பெண்களுடனான கலவி வாழ்க்கையால், அவன் இழந்ததென்ன? நமது கற்பு வாழ்க்கையால் நாம் சாதித்ததென்ன? நாம் உண்மையில் ஒரு போலித்தனமான வாழ்க்கை ஒன்றைத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.


குளியலறைக்குள் எட்டிப்பார்ப்பதில் தொடங்கி பலான இணையங்களில் படங்கள் பார்ப்பது, கல்லூரி விடுதிகளில் கூட்டமாய் அமர்ந்து நீலப்படங்கள் பார்ப்பது, ஊரெல்லைத் திரையரங்குகளில் பயந்து பயந்து படம் பார்ப்பது என்று ஒரு இளைஞனின் வாழ்க்கையில் வெகு நேரம் இந்த பலான விசயங்களில் தானே செலவிடப்படுகிறது. (எனக்கும் இந்த விசயங்களில் நேரடி அநுபவம் உண்டு என்று நீங்கள் நினைத்துக்கொண்டால், நான் பொறுப்பல்ல.) பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேர்பவர்களுக்கு மற்றும் வெற்றிகரமாக படித்து வெளியேறுபவர்களுக்குமான எண்ணிக்கை வித்தியாசம் அதிகமாயிருப்பதற்கு இதுவே காரணம். ஒரு மனிதனை முழு சக்தியுடன் செயல்படவிடாமல், சங்கிலியிட்டுப் பிணைத்து வைத்திருக்கும், இந்த உணர்வுகளின் விலங்கிலிருந்து அவனை எப்படி காப்பாற்றுவது? ஒரு மனிதனின் இயற்கையான இந்த உணர்வுகளுக்கு வடிகாலாக என்ன செய்யலாம்? ஒன்று குறிப்பிட்ட வயதில் கட்டாய திருமணம். அல்லது பாதுகாப்பான விபச்சார மையங்களில் அனுமதி. எல்லா மனவியல் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகளும், மனிதனின் நிறைய வன்முறைகளுக்கு அவனது கலவியில் திருப்தியின்மையே (sexual frustration) முழுக்காரணம் என்று தெரியப்படுத்துகின்றன. இந்தியா, பாலியல் குற்றங்கள் அதிகம் நடக்கும் இடங்களில் ஒன்றாக இருப்பதற்கு, இதுவே காரணமாகும். இனியும் கற்பு, கத்திரிக்காய் என்று, மனிதனின் கலவி உணர்வுகளுக்கு திரையிடுவது மேலும் மேலும் வன்முறைகளுக்கே வழிவகை செய்யும்.



இன்றைய இந்தியாவில் கலவியில் திருப்தியின்மையினால் உண்டான, மன அழுத்தமும், மன உளைச்சலும் உள்ள மனிதர்களின் எண்ணிக்கை பெருமளவில் உள்ளது. இதை நீங்கள் இந்தியாவின் எந்த மூளை முடுக்கிலும் பார்க்கலாம். கடுமையாய் எறிந்து விழும் ஆசிரியர்கள், பொறிந்து தள்ளும் அரசு ஊழியர்கள், காட்டுத்தனமாய் கத்தும் காவல் அதிகாரிகள், பலான விசயங்களுக்கு வெளிச்சம் பிடிப்பதில் திருப்தியடைகிற பத்திரிக்காசிரியர்கள், பெண்களின் அருகாமைக்கு ஏங்கும் இளைஞர்கள் எல்லாமே இந்த பாதிக்கப்பட்ட சமுதாயத்தின் கோரத்தோற்றங்களே!
மனதளவில் சாந்தமான, திருப்தியடைந்த இந்தியர்களாலேயே, நவீன இந்தியாவை உருவாக்க முடியும்.



எனது கடைசி தத்துவம்: யாருடன் வேண்டுமென்றாலும், அவர்களின் விருப்பத்துடன் படுத்திருங்கள். ஆனால், நீங்கள் எழுதுகின்ற code மிகச் சரியாக, அந்த ராக்கெட்டை அதற்குறிய வட்டத்தில் (orbital) சேர்க்க வேண்டும். நீங்கள் கற்புடன் இல்லாவிட்டால் கூட பரவாயில்லை. ராக்கெட் கடலில் விழுந்துவிடக் கூடாது என்பதே என் கரிசனம். (அப்பாடா, மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் என்னால் முடிந்த ஒரு முடிச்சு!)

Wednesday, July 26, 2006

சாத்தானின் அகராதி (Devil's dictionary)




Ambrose Bierce யுத்தங்கள் பற்றியும், பூதங்கள் பற்றியும் பல புத்தகங்கள் எழுதியிருந்தாலும், அவரின் சாத்தானின் அகராதி மிக பிரசித்திபெற்ற புத்தகமாகும். இது 1881 ம் வருடத்திலிருந்து 1906 ம் ஆண்டு வரை செய்தித்தாளில் ஒரு தொடராக வெளிவந்து கொண்டிருந்தது.
1906 ம் வருடம் அது ஒரு புத்தக வடிவில் வெளியிடப்பட்டது. இந்த புத்தகம், சுருக்கமான, கவித்துவமான நடையில் எழுதப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில் , 19ம் நூற்றாண்டின் கடைசி காலகட்டத்திய மற்றும் 20 நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்திய சமுதாயத்தின் மீதான ஆசிரியரின் கேலியான, பரிகசிக்கும் பார்வை தெறிய வருகிறது. இதில் உள்ள சில பகுதிகளை நான் மொழிபெயர்ப்பு செய்யாமலேயே கீழே கொடுத்திருக்கிறேன். (என் மொழிபெயர்ப்பின் மீதான என் அவ நம்பிக்கையே இதற்குக்காரணம்.) படித்து மகிழுங்கள்.


ECONOMY

Purchasing the barrel of whiskey that you do not need for the price of the cow that you cannot afford


FUTURE

That period of time in which our affairs prosper, our friends are true and our happiness is assured


HISTORIAN

A broad-gauge gossip.


HOMICIDE

The slaying of one human being by another. There are four kinds of homicide: felonious, excusable, justifiable, and praiseworthy, but it makes no great difference to the person slain whether he fell by one kind or another — the classification is for advantage of the lawyers


HOSPITALITY

The virtue which induces us to feed and lodge certain persons who are not in need of food and lodging.


LECTURER

One with his hand in your pocket, his tongue in your ear and his faith in your patience


LOVE

A temporary insanity curable by marriage or by removal of the patient from the influences under which he incurred the disorder. This disease, like caries and many other ailments, is prevalent only among civilized races living under artificial conditions; barbarous nations breathing pure air and eating simple food enjoy immunity from its ravages. It is sometimes fatal, but more frequently to the physician than to the patient


OCCIDENT

The part of the world lying west (or east) of the Orient. It is largely inhabited by Christians, a powerful subtribe of the Hypocrites, whose principal industries are murder and cheating, which they are pleased to call "war" and "commerce." These, also, are the principal industries of the Orient


Cannon
An instrument employed in the rectification of national boundaries.

Cat
A soft indestructible automaton provided by Nature to be kicked when things go wrong in the domestic circle.


Congratulation
The civility of envy.


Philosophy
A route of many roads leading from nowhere to nothing.



இந்த புத்தகத்திற்கான சுட்டி http://www.thedevilsdictionary.com/


எப்பொழுதாவது கவிதைமேயும் என் காலிப்பக்கங்கள்!

எழுதுவது மிக எளிதாகத்தான்
இருந்தது ஒரு காலத்தில்...

சன்னல் வழியே கிளையை அனுப்பி
பூவாசம் தெளித்து
துயிலெழுப்பும் ஒரு செடி.

பார்த்த நாளிலிருந்தே
ஒரே திசையில் முகம் சுழிக்காமல்
பயணித்துக்கொண்டிருக்கும் ஒரு நதி.

தினம்தினம் வந்து நலம் விசாரித்துவிட்டு
மாலையில் கையில் கம்பு ஏந்திக்கொண்டு
தள்ளாடி வெளியேறும் வெளிச்சம்.

நிற்கக்கூட இடமில்லாமல்
மொத்தமாய் பூத்துக்கிடக்கும் நட்சத்திரக்காடு.

அத்தனை காட்டிற்கும்
ஒரே காவல்காரனாய் வெளிச்சமேந்தி நிலா.

அகத்தி மரத்தின் நிழல்கள்
சத்தமில்லாமல் படுத்து உருளும் மொட்டைமாடி.

இரவு முழுதும் வெளிச்சம் போட்டு
எதையோ தெடிக்கொண்டிருந்த மின்மினிக்கூட்டம்.

விடியல் முதல் இரவு வரை
'இதுகளின்' சகவாசம் இருந்த ஒருகாலத்தில்
எழுதுவது மிக
எளிதாகத்தான் இருந்தது.

'இதுகளின்' உறவுகள்
தொலைந்த இப்போதெல்லாம்
பசியோடு தானிருக்கின்றன
என் கவிதைப்புத்தகத்தின் பக்கங்கள்.

இருந்தாலும், எப்பொழுதோ நடுஇரவில்
தப்பித்தவறி காற்றி விலக்கிய திரை வழியே
நுழைந்து விடுவதுண்டு நிலவொளி!

சந்தோசப்படுத்துவதற்குப் பதில்,
அவசரத்தில் எடுத்து வைத்த
காலடியில் சிக்கிக்கொண்ட மலராய்
அது என் முகம் சுழிக்க வைப்பதுண்டு.

நிர்வாணமாய் குளித்துக்கொண்டிருந்தவனின்
அறைக்குள் தவறி நுழைந்த தடுமாற்றத்தில்
அதுவும் திகைத்து நிற்பதுண்டு.

கொஞ்ச நேரத்தில், சுதாரித்துக்கொண்டு
சங்கோசத்தில் திரையை மூடிவிட்டு
பதில் சொல்லாமலேயே அது வெளியேறுவதுண்டு.

அந்த நேரங்களில் மட்டுமே
அவசர அவசரமாய்
கவிதை மேய்கின்றன என் காலிப்பக்கங்கள்.

Thursday, July 20, 2006

முதல் உலக மென்புத்தகப்பன்னை

மென்புத்தகங்களின் அவசியம்
உலகம் ஒரு விடியற்காலைப் பனித்துளியைப்போல் மிகமிக சுருங்கிவிட்டது. தொலைதொடர்பு, தகவல் தொழில் நுட்ப மற்றும் போக்குவரத்தில் நடந்திருக்கும் அபரிமிதமான வளர்ச்சி இதற்கு காரணமாகும். மனிதர்களின் வாழ்க்கையில் இப்பொழுது ஓட்டம் அதிகரித்துள்ளது. இன்று மதுரையில் இருக்கும் மனிதன், நாளை ஸ்ட்ராஸ்பர்க்கில் இருக்க வேண்டியிருக்கிறது. மறு நாள் நியூயார்க்கில் இருக்க வேண்டியிருக்கிறது. அதே நேரத்தில், வளர்ந்துவரும் தகவல் தொழில் நுட்பம் பற்றிய தன் அறிவை அப்பொழுதுக்கப்பொழுது விஸ்தாரப்படுத்திக்கொள்வது அவசியமாகிறது. இல்லையென்றால், புறம் தள்ளப்பட்டு மூலையில் முடக்கப்படும் அளவிற்கு, போட்டி நிலவுகிறது. இப்பொழுது இருக்கும் ஏகப்பட்ட இணைய தளங்கள் செய்திகளை ஒலி-ஒளி நாடா வடிவில் தரும் அளவிற்கு, தகவல் தொழில் நுட்பம் வளர்ந்திருக்கிறது. அதோடு ejournals மற்றும் e-books புலக்கத்தில் வந்து இப்பொழுது எல்லோரும் பயன்படுத்தும் அளவிற்கு முக்கியத்துவம் படைத்தனவாக ஆகியிருக்கின்றன.

இந்த மென்புத்தகங்கள் வரும் தலைமுறையிடம் வெகுவாய் பிரசித்தம் அடையப்போவதை நாம் இப்பொழுதே ஓர்குட் (Orkut) உலகில் தெரிந்துகொள்ளலாம். ஒவ்வொருவரும் தங்களிடம் உள்ள புத்தகங்களின் அளவை GB (Gigabytes) யில் பட்டியலிடுவதை (copyright உள்ள புத்தகங்களா என்பது வேறு விஷயம்) அடிக்கடி பார்க்கலாம். இப்பொழுது 700 GB அளவிற்கு சேமிக்கக்கூடிய harddiskகள் விற்பனைக்கு வர ஆரம்பித்திருக்கின்றன. சாதாரனமாக ஒருபுத்தகத்தின் அளவு 0.1 லிருந்து 0.5 MB வரையில் அமையலாம். அப்படியென்றால் இது மாதிரியான ஒரு harddiskல் 2800000 (28 லட்சம்) புத்தகங்கள் வரை சேமித்து வைக்கலாம். ஆனால், கன்னிமர நூலகத்தில் உள்ள மொத்த புத்தகங்களின் எண்ணிக்கையே ஆறு லட்சம் தான என்பது இங்கே நினைவு கூறத்தக்கது்! இந்த மென்புத்தகங்களின், அடுத்த தலைமுறைக்கான அவசியத்தை உணர்ந்து தானோ என்னவோ ஏற்கனவே, நிறைய தனியார் அமைப்புகள் புத்தகங்களை மென்புத்தக வடிவமாக்க ஆரம்பித்திருக்கின்றன. இப்படிபட்ட அமைப்புகளின் முன்னோடியான Project Gutenberg 35வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில், பத்துக்கும் மேற்பட்ட மென் நூலகங்கள் (Digital library) இணைந்து "முதல் உலக மென்புத்தகப்பன்னை"யை நடத்திவருகின்றன.

இதன் இணைய முகவரி.
http://worldebookfair.com/Collections.htm

இது ஜூலை 4லிருந்து ஆகஸ்ட் 4 வரை, இதில் கலந்துகொள்ளும் மென் நூலகங்களின் புத்தகங்களை தரவிறக்கம் செய்ய அனுமதியளிக்கிறது. இந்த கலந்துகொள்ளும் மென் நூலகங்களில் Project Maduraiயும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இது 200க்கும் அதிகமான தமிழ்ப் புத்தகங்களை தரவிறக்கம் செய்ய அனுமதியளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, July 13, 2006

நேசகுமாரின் கவனமின்மை(?)

ஜூலை 11: இந்தியாவின் வரலாற்றுப் பக்கங்களை இரத்தத்தாலும், கண்ணீராலும், மரண ஓலத்தாலும் எழுதி முடித்த தினம் இது.

இது மாதிரியான கால கட்டங்களில், உணர்வு வயப்பட்டு இருக்கும் மனிதர்களிடையே, மத அடிப்படையிலான விரோதத்தை வளர்த்து, சிறு பான்மை மதத்தினர் மீதான தாக்குதல்களை ஆரம்பிப்பதற்கு ஒரு தருணமாக பயன்படுத்திக்கொள்ள நிறைய சக்திகள் இருக்கின்றன. அப்பாவி மனிதர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவராயிருந்தாலும், பாதுகாக்கப்பட வேண்டும். நம் நாட்டின் மத, இன மற்றும் மொழி ஒற்றுமையை குழைக்கும் எந்த சக்தியும் இரும்புக்கரம் கொண்டு நசுக்கப்பட வேண்டும்.

இப்பொழுது ஆரம்பித்த இடத்திற்கு வருவோம். இந்த பதிவு மும்பை குண்டுவெடிப்புகள் பற்றி " மும்பை குண்டு வெடிப்புகள் B. இராமன்" என்ற தலைப்பிலான நேசகுமாரின் பதிவைப்பற்றியது.

நேசகுமாரின் கட்டுரையில், "Rediff"ல் B. ராமன் கூறியதாக இருக்கும் வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. (http://nesakumar.blogspot.com/2006/07/b.html)

"Indian Muslims were responsible for the serial blasts of March 12, 1993 and February 14, 1998. One should not be surprised if there is an involvement of Indian Muslims in the blasts of July 11, 2006, too.

நானும் உண்மை நிலவரங்களைத் தெரிந்துகொள்ள விரும்பி, rediff சென்று பார்த்தால், அங்கே வரிகள் இப்படியாக இருக்கின்றன.

Some Indian Muslims were responsible for the serial blasts of March 12, 1993 and February 14, 1998. One should not be surprised if there is an involvement of some Indian Muslims in the blasts of July 11, 2006, too.

(சுட்டி இருக்குமிடம்: http://www.rediff.com/news/2006/jul/12raman.htm)

"some" என்ற வார்த்தை இரண்டு இடங்களில் தொலைந்து போயிருப்பதைக் கண்டேன். இந்த தொலைதல் (தொலைத்தல்) மிகப்பெரிய அர்த்த வித்தியாசத்தைக் கொடுத்துவிடுகிறது. ஒரு சிலர் செய்யும் குற்றத்திற்காக ஒரு சமுதாயத்தையே குறை சொல்வது எந்த விதத்திலும் சரியாகாது.

ஒன்று, இது கவனக்குறைவால் நடந்திருக்க வேண்டும். அல்லது, ஒரு மதத்தைச் சார்ந்த மக்களின் மீது காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்கு, அரங்கேறிக்கொண்டிருக்கும் தவறான முயற்சிகளின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். இது பற்றிய விளக்கம் கேட்ட என் பின்னூட்டத்திற்கு எந்த பதிலும் இதுவரை இல்லை. அவர் விரைவில் இது பற்றிய தன்னிலை விளக்கம் அளிப்பார் என்று நம்புகின்றேன். முடிக்குமுன் இந்த சில வார்த்தைகளை சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.

வலைப்பூக்களில், நமது கருத்துக்களை பதிவதற்கு, நமக்கு சுதந்திரம் இருந்தாலும், நமது கருத்துக்கள் இந்த சமுதாயத்தில் நேரடியாய் ஏற்படுத்துகிற பாதிப்புகளை, தாக்கங்களைக் கருத்தில் கொண்டு, கவனமுடன் இருப்பது அவசியமாகிறது. தவறான செய்திகளை, கருத்துக்களை, இன, மத, மொழி வாரியான விரோதங்களை நம் கருத்துச்சுதந்திரத்தின் மூலம் வளர்த்துவிடுவதற்கும், நாட்டில் கண்ணிவெடிகளைப் புதைத்துவைப்பதற்கும், அதிக வித்தியாசமில்லை.

(பிற்சேர்க்கை)
எனது கேள்வியினையும், அதற்கான நேசகுமாரின் விளக்கத்தையும், இங்கே இணைத்து, இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.

At 7:51 PM, புதுமை விரும்பி said...

Nesakumar,
//"Indian Muslims were responsible for the serial blasts of March 12, 1993 and February 14, 1998. One should not be surprised if there is an involvement of Indian Muslims in the blasts of July 11, 2006, too.//

Why did you miss the word "some" in the above sentences of the article. Is it your carelessness? Or is it a part of spreading faulty memes with in the public? I personally feel that the removal has made a lot of difference in the meaning.


At 5:47 PM, நேச குமார் said...

Pudumai Virumbi,

//Why did you miss the word "some" in the above sentences of the article. Is it your carelessness? Or is it a part of spreading faulty memes with in the public? I personally feel that the removal has made a lot of difference in the meaning. //


I haven’t tampered the article. I have merely reproduced a portion of the article to circumvent any possible copyright issues. And, I didn't delete the word 'some'. Perhaps, as an after thought or to be politically correct, Mr.B.Raman has added the word.

You can see his original article in google cache:

http://216.239.59.104/search?q=cache:PdkC41444E4J:www.rediff.com/news/2006/jul/12raman.htm+&hl=en&gl=in&ct=clnk&cd=1


Please nore that the word 'some' is not there. Probably Mr.Raman wrote the truth initially and has added the word 'some' as an after thought or after being pointed out by someone.

However, the fact remains for everyone to see. Coimbatore bomb blasts WERE CARRIED OUT BY 'SOME' JEHADI ELEMENTS WITH THE ACTIVE COOPERATION AND SUPPORT OF THE ‘ENTIRE’ MUSLIM COMMUNITY OF COIMBATORE and the leading muslim leaders and organisations of Tamilnadu and probably Kerala.

If you have seen the tamil blogs of our muslim brothers, already you would have known this fact. Otherwise, just see this blog:

http://poyyan.blogspot.com


Mr.Fazlul Ilahi literally accuses everyone, the TMMK, Tawheed Jamaat, Vidiyal Velli, Manitha Neyap Paasarai, IUML, Tamil muslims working in gulf countries and other sundry Islamic organisations of financing the Holy(sic!) operation.

If we remain closing our eyes, nothing would stop. To start with, first let us recognise the fact that the entire community lends active support to these heinous crimes, either directly or indirectly.

Thanks for raising this issue here.



Monday, July 10, 2006

Indian space program - திரும்பிப் பார்ப்போம்

தோல்விகள் ஏற்படும்போது, நாம் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்ப்பது, நம்மில் நம்பிக்கையை துளிர்க்கவைக்கிற ஒரு விஷயமாகும். INSAT 4C ராக்கெட்டும் மற்றும் AGNI-III ஏவுகணை ஏற்றமும், தோல்வியில் முடிந்திருக்கும் இந்த துக்க கரமான வேலையில், காயங்களுக்கு மருந்து போட ஒரு பதிவு.

அது 1960 ன் துவக்கம் - இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் விடியல் என்று சொல்லலாம். உலகம் எல்லாம், நிலவிற்கு ராக்கெட் விடும் நேரத்தில் திருவனந்தபுரத்தின் தும்பா நிலையத்திலிருந்து, ஆரவாரமில்லாமல் விண் நோக்கி கிளம்பியது ஒரு சிறு ராக்கெட் - இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியின் துவக்கத்தை அறிவித்த படியே. மீதிக்கதையைப் படங்கள் சொல்லும்.


































This was how the Rocket Cone was transported to the Launch Pad at Thumba !!










































Try Identifying the person on the left...most probably you wont be able to identify...He is our very own...Dr. A.P J. Abdul Kalam...
















Early days at the Thumba Equatorial Rocket Launching Station. Readying equipment to be carried by a sounding rocket into the atmosphere are Kalam and R. Aravamudan










































































The present day Launch Station at SriHarikota


(பின் குறிப்பு) தவறு நேருதல் இயற்கை. ஆனால், இப்பொழுது நடந்திருக்கும் தோல்விகள், சரியான திட்டமிடுதல் இல்லாமை, குழுவில்லுள்ளவர்களினிடையே சரியான ஒத்துழைப்பின்மை மற்றும் கவனக்குறைவால் நிகழ்ந்திருக்குமென்றால், மிகமிக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. தோல்விக்கான (தொழில் நுட்ப) விளக்கங்களை, வெளிக்கொணர்தல் மற்றும் அறிவித்தலைச் செய்ய DRDO, ISRO அமைப்புகள் கடமைப்பட்டுள்ளன.

Thursday, July 06, 2006

மரணத்தின் மரணம்













எல்லோரும் ஆழ்ந்து உறங்கிய நடுநிசியில்
சத்தமில்லாமல் ஆழ்கடலில்

உதிர்ந்த எரிநட்சத்திரம் போல்
இறந்துபோனது 'மரணம்'.


மாமிச நாற்றமெடுக்கும்
பொக்கை வாயோடு
கால் கைகளை திசைக்கொன்றாய்ப் பரப்பி
பார்க்கவே கோரமாய்
இறந்துகிடந்தது மரணம்.

இறப்பதற்கு முன்
கண்கள் மூடி
அது திறந்தவெளியில் கொஞ்சம்
தியானம் செய்திருக்கலாம்.

எல்லார் சாவிற்கும் தவறாமல்
சென்றுவந்தாலும் அனாதையாய்
அது கிடந்தது..

விடிந்து பார்க்கும் போது அது
உயிரைக்காணாமல் தேடும்
அவலம் இன்னும் மிச்சம் இருக்கிறது.

சத்தியப்பிரமாணம்

என் எண்ணங்களை, பார்வைகளை, விருப்பங்களை, ஆசைகளை, கனவுகளை, உங்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு முன், மொழி, சமூக, இன, மத மற்றும் அரசியல் மீதான என் நிலைப்பாடுகளை உங்களுக்கு அறிவிப்பது அவசியம் என்று நினைக்கிறேன். இது உங்களுக்கு என் எழுத்துக்கள் மீதான நம்பகத்தன்மையை அதிகப்படுத்துவதற்கு உதவியாய் இருக்கும். மொழி, சாதி, மதம், வசதி, அதிகாரம் மற்றும் கல்வி அடிப்படையில், ஒரு மனிதன் (அல்லது சமுதாயம்) இன்னொரு மனிதனை தாழ்மைப்படுத்தவோ, தன் கீழான அடக்கு முறையில் வைத்திருக்கவோ, ஆட்சி செய்யவோ முயற்சி செய்கிறான். இப்பொழுது மொழி, சாதி, மதம் அடிப்படையிலான வகைப்படுத்தல்கள், அடக்குமுறைகள் குறைந்து வந்தாலும், வசதி, அதிகாரம் மற்றும் கல்வி சார்ந்த அடக்குமுறைகள் மனிதர்களுக்கிடையெ அதிகரித்து வருவது கூர்ந்து பார்த்தால் மிகத்தெளிவாக புலப்படுகிற ஒரு விசயம். இன்னும் புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், மனிதர்களின் அடிமைத்தனம் ஒரு ஆயுத்தின் கீழேயிருந்து இன்னொரு ஆயுதத்தின் கீழே இடம்மாறியிருக்கிறது. மேலும் கொடுங்கோலாட்சி மற்றும் ஏகாதிபத்தியத்தின் கோரமுகங்கள் இப்பொழுது தனி(சில) மனித வன்முறையாய் மாறியிருக்கின்றன. இன்னும் சொல்லவேண்டுமென்றால் இப்பொழுது யுத்தங்கள் நாடுகளுக்கும் நாடுகளுக்கும் இடையிலில்லை- மாறாக மனிதனுக்கும், மனிதனுக்கும் தான். இப்படியாக இருக்கிற ஒரு காலகட்டத்தில், பொறுப்புணர்வுள்ள- சமுதாயத்தின் அக்கறையில் நம்பிக்கையுள்ள ஒவ்வொரு மனிதனும் ஒரு சத்திய பிரமாணத்தில் கையெழுத்திடுவது அவசியமாகப்படுகிறது. நானும் என் எழுத்தைத் தொடங்குவதற்கு முன் இப்படியான ஒன்றை செய்துகொள்ள விரும்புகிறேன். எனது அறிவு, வசதி, அதிகாரம் மற்றும் எனது இருப்பு, எந்த ஒரு மனிதனையும் சிறுமைப்படுத்தவோ, அவனது இன, மதம் மற்றும் சமுதாயம் சார்ந்த நம்பிக்கைகளைக் கேலி செய்வதற்கோ பயன்படுத்தப்படமாட்டாது. மேலும் தவறான செய்திகளை, கற்பிதங்களை, "மீம்"(meme)களை இந்த சமுதாயத்தில் உலவவிடுவதற்கு எப்பொழுதும் முயற்சி செய்ய மாட்டேன். மாறாக, சமுதாயத்தில் நிலவிவரும் ஏற்றத்தாழ்வுகளை களைவதற்கும், நல்லிணக்கம் ஏற்படுவதற்கும் என்னாலான முயற்சிகளைச் செய்வேன்.
(பின் குறிப்பு: இந்த Memeகள் பற்றி கூடிய விரைவில் ஒரு கட்டுரை எழுத உள்ளேன்)


Free Hit Counter
Google PageRank

Your Ad Here