Thursday, July 27, 2006

ஒரு ஜென் கதையின் வெளிச்சத்தில் கற்பு பற்றி படிக்கலாமா?

முதலில் கதை:
ஜென் துறவிகளாகிய தான்சான் மற்றும் எகிடோ ஒரு மாலை நேரத்தில், காட்டிற்குள் இருக்கும் தங்கள் ஆசிரமத்தை நோக்கி நடந்துகொண்டிருந்தார்கள். கடுமையான மழை பெய்து ஓய்ந்திருந்தது. எங்கு பார்த்தாலும் சேறு. இடையே குறுக்காக ஓடிக்கொண்டிருக்கும் நதியில் இன்று வெள்ளம் வேறு.
நதியைக்கடப்பதற்கு முன், அங்கே ஒரு பெண் அமர்ந்து, நதியைக்கடக்க முடியாமல் தவித்துக்கொண்டிருப்பதை இருவரும் கவனிக்கின்றனர். எகிடோ முகத்தைத் திருப்பிக்கொண்டு, நதியில் இறங்கி நடக்கிறார். ஆனால், கொஞ்சம் கூட யோசிக்காமல், தான்சான் அந்த பெண்ணைத் தன் தோளில் ஏற்றிக்கொண்டு நதியைக் கடந்து மறுகரையில் விட்டுவிட்டு மீண்டும், எகிடோவுடன் சேர்ந்து நடக்கிறார். இந்த் நிகழ்ச்சி எகிடோவை மிகவும் கடுப்பேற்றியிருந்தது. ஒன்றுமே பேசாமல் இருவரும் வெகு நேரம் நடந்தனர். அவர்கள் ஆசிரமத்தை நெருங்கிய போது நன்றாக இருட்டியிருந்தது. அதற்கு மேலும், தன் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாத, எகிடோ தான்சானைப் பார்த்து கேட்கிறார் "நீ எப்படி இன்று மாலை அவ்வாறாகச் செய்யக்கூடும். நமது ஒழுக்கங்களின் படி, நாம் பெண்கள் அருகே போவதே மிகப்பாவம். அதோடு அழகான் பெண்கள் இன்னும் ஆபத்தானவர்கள். நீயோ, அவள் அருகில் சென்று, அவளைத் தொட்டு தூக்கியிருக்கிறாய்? இது நாம் வாழும் வாழ்க்கை முறைக்கு எதிரானது. ஏன் நீ அப்படிச் செய்தாய்?". அதற்கு தான்சான்," நான் அந்த பெண்ணை எப்பொழுதோ கரையில் இறக்கிவிட்டு வந்துவிட்டேன். நீ தான் அவளை இன்னும் சுமந்து கொண்டிருக்கிறாய்", என்று சொல்கிறார்.
(கதை முடிந்துவிட்டது. மீதிக்கதை எங்கே என்று தயவு செய்து கேட்டு வைக்காதீர்கள்)


இப்பொழுது பெரும்பாலான இந்தியர்களின் மன நிலை எகிடோவின் மன நிலையை ஒத்துத்தான்
இருக்கிறது. வேலிகளை உடைக்கவும் பயம்; அதே நேரம் மனதளவில் ஆசைகளை சுமந்து திரிவதே இவர்களின் வாழ்க்கை முறையாய் இருக்கிறது. அதே நேரத்தில், மேற்கத்திய மனிதனின் மன நிலையை தான்சானுவின் மன நிலையோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியும். கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் மதம் தனிமனிதன் மீதாக விதித்திருக்கிற கட்டுப்பாடுகளின் முற்கள் தன்னைக் காயப்படுத்திவிடாமல், மனதிற்கு சரியென்று படுவதை துணிந்து செய்துவிட்டு வாழும் வாழ்க்கை முறை ஒரு மேற்கத்திய மனிதனுடையது. இப்படியான கல்யாணத்திற்கு முன்னான பல பெண்களுடனான கலவி வாழ்க்கையால், அவன் இழந்ததென்ன? நமது கற்பு வாழ்க்கையால் நாம் சாதித்ததென்ன? நாம் உண்மையில் ஒரு போலித்தனமான வாழ்க்கை ஒன்றைத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.


குளியலறைக்குள் எட்டிப்பார்ப்பதில் தொடங்கி பலான இணையங்களில் படங்கள் பார்ப்பது, கல்லூரி விடுதிகளில் கூட்டமாய் அமர்ந்து நீலப்படங்கள் பார்ப்பது, ஊரெல்லைத் திரையரங்குகளில் பயந்து பயந்து படம் பார்ப்பது என்று ஒரு இளைஞனின் வாழ்க்கையில் வெகு நேரம் இந்த பலான விசயங்களில் தானே செலவிடப்படுகிறது. (எனக்கும் இந்த விசயங்களில் நேரடி அநுபவம் உண்டு என்று நீங்கள் நினைத்துக்கொண்டால், நான் பொறுப்பல்ல.) பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேர்பவர்களுக்கு மற்றும் வெற்றிகரமாக படித்து வெளியேறுபவர்களுக்குமான எண்ணிக்கை வித்தியாசம் அதிகமாயிருப்பதற்கு இதுவே காரணம். ஒரு மனிதனை முழு சக்தியுடன் செயல்படவிடாமல், சங்கிலியிட்டுப் பிணைத்து வைத்திருக்கும், இந்த உணர்வுகளின் விலங்கிலிருந்து அவனை எப்படி காப்பாற்றுவது? ஒரு மனிதனின் இயற்கையான இந்த உணர்வுகளுக்கு வடிகாலாக என்ன செய்யலாம்? ஒன்று குறிப்பிட்ட வயதில் கட்டாய திருமணம். அல்லது பாதுகாப்பான விபச்சார மையங்களில் அனுமதி. எல்லா மனவியல் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகளும், மனிதனின் நிறைய வன்முறைகளுக்கு அவனது கலவியில் திருப்தியின்மையே (sexual frustration) முழுக்காரணம் என்று தெரியப்படுத்துகின்றன. இந்தியா, பாலியல் குற்றங்கள் அதிகம் நடக்கும் இடங்களில் ஒன்றாக இருப்பதற்கு, இதுவே காரணமாகும். இனியும் கற்பு, கத்திரிக்காய் என்று, மனிதனின் கலவி உணர்வுகளுக்கு திரையிடுவது மேலும் மேலும் வன்முறைகளுக்கே வழிவகை செய்யும்.



இன்றைய இந்தியாவில் கலவியில் திருப்தியின்மையினால் உண்டான, மன அழுத்தமும், மன உளைச்சலும் உள்ள மனிதர்களின் எண்ணிக்கை பெருமளவில் உள்ளது. இதை நீங்கள் இந்தியாவின் எந்த மூளை முடுக்கிலும் பார்க்கலாம். கடுமையாய் எறிந்து விழும் ஆசிரியர்கள், பொறிந்து தள்ளும் அரசு ஊழியர்கள், காட்டுத்தனமாய் கத்தும் காவல் அதிகாரிகள், பலான விசயங்களுக்கு வெளிச்சம் பிடிப்பதில் திருப்தியடைகிற பத்திரிக்காசிரியர்கள், பெண்களின் அருகாமைக்கு ஏங்கும் இளைஞர்கள் எல்லாமே இந்த பாதிக்கப்பட்ட சமுதாயத்தின் கோரத்தோற்றங்களே!
மனதளவில் சாந்தமான, திருப்தியடைந்த இந்தியர்களாலேயே, நவீன இந்தியாவை உருவாக்க முடியும்.



எனது கடைசி தத்துவம்: யாருடன் வேண்டுமென்றாலும், அவர்களின் விருப்பத்துடன் படுத்திருங்கள். ஆனால், நீங்கள் எழுதுகின்ற code மிகச் சரியாக, அந்த ராக்கெட்டை அதற்குறிய வட்டத்தில் (orbital) சேர்க்க வேண்டும். நீங்கள் கற்புடன் இல்லாவிட்டால் கூட பரவாயில்லை. ராக்கெட் கடலில் விழுந்துவிடக் கூடாது என்பதே என் கரிசனம். (அப்பாடா, மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் என்னால் முடிந்த ஒரு முடிச்சு!)

25 Comments:

Blogger G.Ragavan said...

நல்லா இருக்குது ஜென் கதை.....

பாடப் பாடத்தான் ராகம்..மூட மூடத்தான் ரோகம்னு சொல்வாங்க.

10:59 PM  
Blogger ரவி said...

////மனதளவில் சாந்தமான, திருப்தியடைந்த இந்தியர்களாலேயே, நவீன இந்தியாவை உருவாக்க முடியும்.////

நல்லா சொன்னீங்க..

12:33 AM  
Blogger புதுமை விரும்பி said...

வருகைக்கு நன்றி ராகவன் மற்றும் செந்தழல் ரவி அவர்களே.

மற்ற ஜென் கதைகளுக்கான சுட்டிகள் இதோ:
http://www.rider.edu/suler/zenstory/zenstory.html
http://www.101zenstories.com/

4:45 AM  
Blogger Muse (# 01429798200730556938) said...

அன்பிற்குரிய புதுமை விரும்பி,

இங்கே வேஷம் போடுபவர்கள் அதிகம். கலாச்சாரத்தின் காவலர்களாகத் தங்களைக் காட்டிக்கொள்ளும் இவர்கள் உண்மையை உடைத்து சொன்னதற்காக உங்களைத் தாக்க வரப்போகிறார்கள்.

9:18 AM  
Blogger Sivabalan said...

// இனியும் கற்பு, கத்திரிக்காய் என்று, மனிதனின் கலவி உணர்வுகளுக்கு திரையிடுவது மேலும் மேலும் வன்முறைகளுக்கே வழிவகை செய்யும். //

மிக அருமையாக சொன்னீர்கள்..

நல்லதொரு பதிவு.

நன்றி..

10:05 AM  
Blogger கால்கரி சிவா said...

புதுமைவிரும்பி, மிகப் புதுமை உங்கள் விளக்கம்

10:08 AM  
Blogger சிறில் அலெக்ஸ் said...

நல்ல கருத்துக்கள். உண்மையில் கலவி இன்பம் சரியாகப் பெறாதவர்களால் பிரச்சனைகள் உலகமெங்கும் இருக்கின்றன. கத்தோலிக்க பாதிரியார்கள் திருமணம் செய்துகொல்ளாததால்தான் உலக வரலாற்றில் பல கெட்ட சம்பவங்கள் நடந்திருக்கின்ரன என எங்கோ படித்திருக்கிறேன். இதில் உண்மையில்லை எனச் சொல்வதற்கில்லை. ஒரு காலத்தில் கத்தோலிக்கம் உலகளவிய அரசாங்கங்களை கட்டுப்படுத்தும் அமைப்பாக இருந்தது.

பாலியல் சுதந்திரம் இருக்கும் நாட்டிலெல்லாம் பாலியல் குற்றங்கள் இல்லை அல்லது குறைவு என்பது எவ்வளவு தூரம் உண்மையெனத் தெரியவில்லை. அமெரிக்காவில் கள்ளக்காதல் எல்லாம் பெரிய விஷயம்தான்.

இன்னும் இதை விவாதிக்கலாம்..

:)

1:33 PM  
Blogger கால்கரி சிவா said...

சிறில், பாலியல் சுதந்திரம் உள்ள நாடுகளில் பாலியல் குற்றங்கள் குறைவுதான் என்பது என் எண்ணம்.
ஏனென்றால் நம் நாட்டில் நிறையக் குற்றங்கள் வெளிவராமல் அடங்கி விடுகின்றன்.

பாலியல் குற்றங்கள் அதிகம் புரிபவர் (நம் நாட்டில்) பள்ளி ஆசிரியர்கள், போலி சாமியார்கள், தொழிலதிபர்கள், சினிமாக்காரர்கள். ஏனென்றால் வ் அதிக வல்னெரபில் பெண்கள் இவர்களிடம் வருகிறார்கள்.

எல்லாரும் பலவந்தமாக பாலியல் குற்றம் செய்யவிட்டாலும் பெண்களை சூழ்நிலை கைதியாக்கி தங்கள் இச்சைகளை தணித்துக் கொள்கின்றனர்.

இந்த நிலை நம்நாட்டில் மாற சில நூற்றாண்டுகள் ஆகலாம்

2:33 PM  
Blogger கதிர் said...

இந்த ஜென் கதைய சமீபத்தில எங்கயோ படிச்ச ஞாபகம், ஆனால் எங்கன்னு தெரியலை.

விவாதிக்க கூடிய கருத்துக்கள்.

அன்புடன்
தம்பி

3:11 PM  
Blogger வஜ்ரா said...

என்னுடய favorite புத்தகங்களில் ஒன்று.

Zen and the Art of Motorcycle Maintenance: AN INQUIRY INTO VALUES

..
அதே நேரத்தில், மேற்கத்திய மனிதனின் மன நிலையை தான்சானுவின் மன நிலையோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியும். கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் மதம் தனிமனிதன் மீதாக விதித்திருக்கிற கட்டுப்பாடுகளின் முற்கள் தன்னைக் காயப்படுத்திவிடாமல், மனதிற்கு சரியென்று படுவதை துணிந்து செய்துவிட்டு வாழும் வாழ்க்கை முறை ஒரு மேற்கத்திய மனிதனுடையது.
..

எதையும் செய்ய ஒரு Insured life வேணும். இந்தியாவில் அது வந்தால் நிச்சயம் இந்தியர்கள் செய்வார்கள், சாதிப்பார்கள்.

அடிக்கடி என் நண்பர்களிடமும் என் பெற்றொரிடமும் சொல்வது, வெள்ளைக்காரனுக்கு கவலைப்பட விஷயங்கள் இல்லை. நம்மாட்களுக்கு கவலைப்பட விஷயம் இல்லை என்பதே ஒரு பெரிய கவலை.!

3:26 PM  
Blogger புதுமை விரும்பி said...

அட என்ன இது அதிசயம்!! முதல் முறையா நமது வலைக்கு வந்து பின்னூட்டமிட்டவர்கள் எண்ணிக்கை இரண்டு இலக்கத்தைத் தாண்டியிருக்கிறது. நன்றி நண்பர்களே. உங்கள் கருத்துக்களுக்கு தனியே பதிலளிக்கிறேன் (இப்படித்தானே பின்னூட்டங்கள் எண்ணிக்கையை அதிகரித்து, பின்னூட்ட கயமைத்தனம் செய்ய முடியும்.)

3:59 AM  
Blogger புதுமை விரும்பி said...

அரையணா

//எதாவது இருக்கும்னு நெனச்சு இங்க வந்து இருந்தா, உங்க சுட்டு விரல மடக்கி முகத்துக்கு நேரா வச்சு " உனக்கு வேணும்ப்டா" அப்படின்னு சொல்லுங்க பார்ப்போம். //

உங்கள் வலையில் இருந்தது மிகவும் ரசித்தேன்.

உங்கள் வருகைக்கும் ஊக்கமூட்டும் வார்த்தைகளுக்கு நன்றி.

6:09 AM  
Blogger புதுமை விரும்பி said...

வருகைக்கு நன்றி ம்யூஸ் அவர்களே!

நான் ஒரு சமுதாய அக்கறையோடு, எனக்கு சரியென்று படுகின்ற விசயங்களை முன் வைக்கிறேன். நிச்சயம், ஆரோக்கியமான எதிர்கருத்துக்களை நான் வரவேற்கிறேன். மற்றபடி, எனது கருத்துக்கள்தவறென்று, ஆதாரமுடன் சுட்டிக்காட்டப்படும்போது, மாற்றத்தை வரவேற்கிறேன்.

// இங்கே வேஷம் போடுபவர்கள் அதிகம்.//

நீங்கள் சொன்னது சத்தியமான வார்த்தை.

11:42 AM  
Blogger பாரதி தம்பி said...

//நமது கற்பு வாழ்க்கையால் நாம் சாதித்ததென்ன? நாம் உண்மையில் ஒரு போலித்தனமான வாழ்க்கை ஒன்றைத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்//

மரபுக்கும் நவீனத்திற்குமான தடுமாற்றத்திலிருக்கும் இன்றைய இளைஞனின் குரலை பதிவு செய்துள்ளீர்கள்.விவாதத்திற்குரிய விஷயம்தான்...

11:32 AM  
Blogger புதுமை விரும்பி said...

வருகைக்கு நன்றி சிறில் அலெக்ஸ்,

// பாலியல் சுதந்திரம் இருக்கும் நாட்டிலெல்லாம் பாலியல் குற்றங்கள் இல்லை அல்லது குறைவு என்பது எவ்வளவு தூரம் உண்மையெனத் தெரியவில்லை.//

எனக்கென்னவோ, இந்த கருத்து முற்றிலும் உண்மை என்றே படுகிறது. உதாரணமாக, பெண்களை (கணவனுடன், தந்தை, தாயுடன், சகோதரனுடன்) இருக்கும்போது கூட சீண்டிப்பார்க்கும், ஒரு உதவாக்கரை இளைஞர்
சமூகமே இந்தியாவில் நிறைந்திருக்கிறது. இந்த சீண்டிப்பார்த்தல், நிச்சயம் மேற்கு உலகில் இல்லை என்று
சொல்லிவிட முடியும். குறைந்த பட்சம் ஐரோப்பாவில் இல்லை, என்று என்னால் சத்தியம்செய்யமுடியும். பெண்களின்
மனப்பிராந்தியத்தில், இளைஞர் சமுதாயம் நடத்துகிற இந்த அத்துமீறலும், ஆக்கிரமிப்பும் ஒருவித
பாலியல் வன்முறை தான்.

1:40 PM  
Blogger dondu(#11168674346665545885) said...

இப்பதிவு ஆண்களை மட்டும் குறிவைத்து, அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று மட்டும் கூறுவதாக எனக்குப் படுகிறது.

பெண்களுக்கு நீங்கள் கூறும் ஆலோசனை என்ன?

அன்புடன்,
டோண்டு ராகவன்

5:48 PM  
Blogger புதுமை விரும்பி said...

கருத்துக்கு நன்றி சிவா, வஜ்ரா, தம்பி, ஆழியூரான் மற்றும் டோண்டு சார் அவர்களே,

வஜ்ரா, நானும் அந்த புத்தகத்தைப் படித்திருக்கிறேன்.

டோண்டு சார், உங்களின் முக்கியமான அதே நேரத்தில் ஆபத்தான கேள்விக்கு, அவசர குடுக்கைத் தனமாய் ஏதாவது பதில் சொல்லிவிட்டு மாட்டிக்கொண்டு முழிக்க நான் விரும்பவில்லை. கொஞ்சம் ஆராய்ந்துவிட்டு விடை சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

12:08 AM  
Blogger புதுமை விரும்பி said...

டோண்டு சார்,

எனக்கென்னவோ பெண்கள் பாலியல் திருப்திக்காக, வரம்பை உடைக்கிற, மீறவேண்டிய கட்டாயத்தில் இல்லை என்றே தோன்றுகிறது. என் எண்ணத்திற்கான அடிப்படை காரணங்கள் பின் வருகின்றன.

பொதுவாக பெண்களுக்கு காமத்தின் பால் வருகிற ஈர்ப்பு, மிக மிக குறைவு. இதற்கு, அவர்கள் வாழ்கிற குடும்ப சூழ்நிலை ஒரு காரணமாகும். அதாவது, தனியே ஆபாச படங்கள் பார்க்க, மஞ்சள் பத்திரிக்கைகள் படிக்க என்ற வாய்ப்புகள் மிகக்குறைவு. ஆனால், ஆண்களுக்கு அப்படியில்லை. இதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம். கல்லூரிக்கு வருகிற, ஒரு மிகச் சாதாரண கிராமத்து இளைஞனுக்குக் கூட, நீலப்படங்கள் என்றால் என்ன என்று அவனது முதல் ஆண்டிலேயே தெரிந்துவிடுகிறது. அந்த உணர்வுகளுக்கு வடிகால் இல்லாமல், ஒரு கால கட்டத்தில் வரம்புகளை அவன் உடைக்க நேருகிறது. அது ஒரு சாதாரண, அப்பாவியான பெண்ணின் மீதான பாலியல் தாக்கமாகவோ, அல்லது ஒரு விபச்சாரியுடனான ஒரு இரவாகவோ முடிவில் வெளிப்படுகிறது.

இன்னொரு விசயத்தையும் இயற்கையில் கவனிக்கலாம். ஆண் மிருகங்களும், பறவைகளும், பெண் மிருகங்களை, பறவைகளை விரட்டி, விரட்டி கலவி கொள்ள விரும்புவதும், அதை அசட்டையே செய்யாமல், பெண் ஐந்துக்கள் இரை தேடிக்கொண்டிருப்பதும் நாம் பார்க்கிற ஒன்று தான். இந்த மாதிரியான கலவியில் விருப்பமின்மை, பெண்களிடமும் (in human beings) இருப்பது ஒரு சாதாரணமானதாகவே படுகிறது.

அடுத்ததான காரணம் இரு பாலருக்குமான திருமண வயதின் அடிப்படையிலானது. ஒரு ஆணிற்கு, திருமணம் என்பது அவன் வேலையில் அமர்ந்த பிறகே நடக்கிற விசயமாக மாறிவிட்டது. எனது நண்பர்கள் பலர் 32 வயதைத் தாண்டியும், வேலையில்லாததால் அல்லது நல்ல வேலையில்லாததால் திருமணமாகாமல் இருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு அப்படியில்லை. வேலை இருக்கிறதோ இல்லையோ கல்யாண சந்தையில் விலை போய்விடுகிறார்கள். அதாவது, பெண்பாலர்கள் பாலியல் உணர்வுத் தீக்கு, பலியாவதற்கு முன்னரே, அவர்களுக்கு திருமணம் நடந்து விடுகிறது. இந்த காரணத்தினாலும் கூட, நீங்கள் கேட்கிற கேள்வி ஒரு அவசியமில்லாதது போலத் தோன்றுகிறது. இந்த 32 வயது தாண்டிய, முதிர் இளைஞர்கள் என்ன செய்வார்கள்? இவர்கள் வேலி உடைத்து விபச்சாரிகளை பார்க்காமல் என்ன செய்வார்கள்? கூடிய விரைவில் கற்பு ஒரு சங்க கால வார்த்தையாய் மாறிப்போனால் வியப்பொன்றுமில்லை.

7:06 AM  
Blogger பொன்ஸ்~~Poorna said...

// இந்தியா, பாலியல் குற்றங்கள் அதிகம் நடக்கும் இடங்களில் ஒன்றாக இருப்பதற்கு, இதுவே காரணமாகும்//

ஒன்றாக?.. இங்க வேற மாதிரி சொல்றாங்க..

மனதளவில் திருப்தி என்பது மனிதனுக்கு ஏற்படுவதே கஷ்டம் தான்.. எல்லா விதத்திலும் நீங்க சொல்லும் சுதந்திரம் இருக்கும் அமெரிக்காவில், சைக்கோ கேஸ்கள் அதிகம்.

//வெற்றிகரமாக படித்து வெளியேறுபவர்களுக்குமான எண்ணிக்கை வித்தியாசம் அதிகமாயிருப்பதற்கு இதுவே காரணம்.//
இந்த வித்தியாசம், மேற்கத்திய உலகிலும் இருக்கிறதே..

"ஒரு விதத்தில், திருமணம், குழந்தை எல்லாம் எதற்கு?" என்னும் மனநிலைக்கு உங்கள் இந்தப் பதிவு சொல்லும் தீர்வு வழி வகுக்கும்.. அந்தக் கேள்வியில் சிக்கிக் கொள்வதைத் தவிர்க்க, மேற்கத்திய உலகத்தவரே ஒரு மனைவி, ஒரு குடும்பம் என்று இப்போது வாழத் தொடங்குகிறார்கள் என்று நினைக்கிறேன்..

7:28 AM  
Blogger பொன்ஸ்~~Poorna said...

//எல்லாரும் பலவந்தமாக பாலியல் குற்றம் செய்யவிட்டாலும் பெண்களை சூழ்நிலை கைதியாக்கி //
இந்த விஷயத்தை எப்படிச் சரி செய்வது, எவ்வாறு awareness-ஐப் பெருக்குவது என்பதில் தான் நம் நேரம் செலவிடப்பட வேண்டும்..

7:30 AM  
Blogger புதுமை விரும்பி said...

பொன்ஸ்,

முதல் வருகைக்கு நன்றி.

//ஒன்றாக?.. இங்க வேற மாதிரி சொல்றாங்க.. //

இந்தியாவில் நடக்கும் பெரும்பாலான குற்றங்கள் சரியாக கோப்புப்படுத்தப்படுவதில்லை. இதற்கு, வன்முறைக்கு ஆளாகப்பட்ட பெண்ணின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகிவிடும் என்ற அக்கறை ஒரு காரணம். தாங்கள் சுட்டிக்காட்டியிருக்கிற தகவல், நிச்சயம் கோப்புப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையிலானது.

//மனதளவில் திருப்தி என்பது மனிதனுக்கு ஏற்படுவதே கஷ்டம் தான்.. எல்லா விதத்திலும் நீங்க சொல்லும் சுதந்திரம் இருக்கும் அமெரிக்காவில், சைக்கோ கேஸ்கள் அதிகம்.//

இது பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்ள முயற்சிக்கிறேன்.

///வெற்றிகரமாக படித்து வெளியேறுபவர்களுக்குமான எண்ணிக்கை வித்தியாசம் அதிகமாயிருப்பதற்கு இதுவே காரணம்.//
இந்த வித்தியாசம், மேற்கத்திய உலகிலும் இருக்கிறதே..//

நிச்சயமாக இல்லை.

தங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

7:49 AM  
Blogger புதுமை விரும்பி said...

இன்னொரு பதிவிற்காக படித்துக்கொண்டிருந்த போது, கண்ணில் சிக்கிய விசயங்கள். ஒரு பிரச்னைக்கான தீர்வைக்
காண விரும்பும்போது, அந்த பிரச்னையின் பல பரிமாணங்கள் பற்றிய புரிதல் அவசியம். இந்த செய்தி,
அப்படிப்பட்ட புரிதலைத் தரும் ஒரு செய்தி. பெண்களின் அருகாமை இல்லாமல் குரு குலத்தில் அல்லது ஆண்கள்
பள்ளியில் வளர்ந்த ஒருவனுக்கு, காமம் பற்றிய உணர்வு எழுவதற்கு, வாய்ப்புகள் இல்லை என்று இதுவரை
நினைத்திருந்தேன். எனது எண்ணங்கள், யு. ஜி. கிருஷ்ணமூர்த்தி சொல்கின்ற இந்த கருத்துக்களுக்கு
முரண்படுகின்றன.

How am I able to form these sexual images? I have never gone to a movie or seen anything of a sexual nature. How is it that these sexual images exist inside of me and are not put in me from outside? All stimulation apparently comes from outside. But there is another kind of stimulation which comes from within. I can cut out all external stimulation. But how can I eliminate what is inside of me?

2:33 PM  
Blogger Muse (# 01429798200730556938) said...

காமம் என்பது உடலின் கற்பனை.

தங்களை உடம்பாக எண்ணிக்கொள்பவர்களுக்கு காமம் நிஜம்.

4:24 AM  
Blogger புதுமை விரும்பி said...

அன்பான ம்யூஸ் அவர்களே,

// காமம் என்பது உடலின் கற்பனை.//

மனமில்லாத, உடம்பு எப்படி கற்பனை செய்ய முடியும்.

//தங்களை உடம்பாக எண்ணிக்கொள்பவர்களுக்கு காமம் நிஜம்.//

தங்களை உடம்பாக எண்ணிக்கொள்பவர்கள்?

புரியவில்லை எனக்கு. கொஞ்சம் விளக்குங்களேன்.

4:43 AM  
Blogger Muse (# 01429798200730556938) said...

தங்களை உடம்பாக எண்ணிக்கொள்பவர்கள்?

புரியவில்லை எனக்கு. கொஞ்சம் விளக்குங்களேன்.



நீங்கள் உடம்பா, மனமா, ஆத்மாவா என்கிற கேள்விக்கு ஒவ்வொருவரும் சொல்லிக்கொள்வது.

வேறு வகையில் கேட்பதானால் அதே வழக்கமான "நான் யார்" கேள்விதான்.

உடம்பை உணர்பவர்களுக்கு (ரொம்ப ஈஸி. எல்லாருக்கும் நடப்பது) உடம்பே நான். மனமாய் உணர்பவர்களுக்கு (ரொம்ப கஷ்டம். பெரும்பாலானோருக்கு நடக்காது) மனமே நான். ஆத்மாவாய் உணர்பவர்களுக்கு (சான்ஸே இல்லை.) ஆத்மாவே நான்.

என்போன்று புத்தகம் படிப்பவர்களுக்கு எல்லாம் ப்ரம்மம். பசிக்கிறது. போய் நல்ல சாப்பாட்டை சாப்பிட்டு, வாசனை சோப்பில் கையலம்பி, அழகான பெண்களிடம் பேசிவிட்டு, உயர் அதிகாரியாய் வேலை பார்ப்பவரிடம் குழைந்துவிட்டு, கீழே வேலைபார்ப்பவர்களை அதட்டிவிட்டு வந்து மற்றதை சொல்லுகிறேன்.

5:05 AM  

Post a Comment

<< Home

Free Hit Counter
Google PageRank

Your Ad Here