Thursday, July 20, 2006

முதல் உலக மென்புத்தகப்பன்னை

மென்புத்தகங்களின் அவசியம்
உலகம் ஒரு விடியற்காலைப் பனித்துளியைப்போல் மிகமிக சுருங்கிவிட்டது. தொலைதொடர்பு, தகவல் தொழில் நுட்ப மற்றும் போக்குவரத்தில் நடந்திருக்கும் அபரிமிதமான வளர்ச்சி இதற்கு காரணமாகும். மனிதர்களின் வாழ்க்கையில் இப்பொழுது ஓட்டம் அதிகரித்துள்ளது. இன்று மதுரையில் இருக்கும் மனிதன், நாளை ஸ்ட்ராஸ்பர்க்கில் இருக்க வேண்டியிருக்கிறது. மறு நாள் நியூயார்க்கில் இருக்க வேண்டியிருக்கிறது. அதே நேரத்தில், வளர்ந்துவரும் தகவல் தொழில் நுட்பம் பற்றிய தன் அறிவை அப்பொழுதுக்கப்பொழுது விஸ்தாரப்படுத்திக்கொள்வது அவசியமாகிறது. இல்லையென்றால், புறம் தள்ளப்பட்டு மூலையில் முடக்கப்படும் அளவிற்கு, போட்டி நிலவுகிறது. இப்பொழுது இருக்கும் ஏகப்பட்ட இணைய தளங்கள் செய்திகளை ஒலி-ஒளி நாடா வடிவில் தரும் அளவிற்கு, தகவல் தொழில் நுட்பம் வளர்ந்திருக்கிறது. அதோடு ejournals மற்றும் e-books புலக்கத்தில் வந்து இப்பொழுது எல்லோரும் பயன்படுத்தும் அளவிற்கு முக்கியத்துவம் படைத்தனவாக ஆகியிருக்கின்றன.

இந்த மென்புத்தகங்கள் வரும் தலைமுறையிடம் வெகுவாய் பிரசித்தம் அடையப்போவதை நாம் இப்பொழுதே ஓர்குட் (Orkut) உலகில் தெரிந்துகொள்ளலாம். ஒவ்வொருவரும் தங்களிடம் உள்ள புத்தகங்களின் அளவை GB (Gigabytes) யில் பட்டியலிடுவதை (copyright உள்ள புத்தகங்களா என்பது வேறு விஷயம்) அடிக்கடி பார்க்கலாம். இப்பொழுது 700 GB அளவிற்கு சேமிக்கக்கூடிய harddiskகள் விற்பனைக்கு வர ஆரம்பித்திருக்கின்றன. சாதாரனமாக ஒருபுத்தகத்தின் அளவு 0.1 லிருந்து 0.5 MB வரையில் அமையலாம். அப்படியென்றால் இது மாதிரியான ஒரு harddiskல் 2800000 (28 லட்சம்) புத்தகங்கள் வரை சேமித்து வைக்கலாம். ஆனால், கன்னிமர நூலகத்தில் உள்ள மொத்த புத்தகங்களின் எண்ணிக்கையே ஆறு லட்சம் தான என்பது இங்கே நினைவு கூறத்தக்கது்! இந்த மென்புத்தகங்களின், அடுத்த தலைமுறைக்கான அவசியத்தை உணர்ந்து தானோ என்னவோ ஏற்கனவே, நிறைய தனியார் அமைப்புகள் புத்தகங்களை மென்புத்தக வடிவமாக்க ஆரம்பித்திருக்கின்றன. இப்படிபட்ட அமைப்புகளின் முன்னோடியான Project Gutenberg 35வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில், பத்துக்கும் மேற்பட்ட மென் நூலகங்கள் (Digital library) இணைந்து "முதல் உலக மென்புத்தகப்பன்னை"யை நடத்திவருகின்றன.

இதன் இணைய முகவரி.
http://worldebookfair.com/Collections.htm

இது ஜூலை 4லிருந்து ஆகஸ்ட் 4 வரை, இதில் கலந்துகொள்ளும் மென் நூலகங்களின் புத்தகங்களை தரவிறக்கம் செய்ய அனுமதியளிக்கிறது. இந்த கலந்துகொள்ளும் மென் நூலகங்களில் Project Maduraiயும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இது 200க்கும் அதிகமான தமிழ்ப் புத்தகங்களை தரவிறக்கம் செய்ய அனுமதியளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

2 Comments:

Blogger மு. மயூரன் said...

நூலகம் மின்னூல் திட்டத்தினை பார்வையிடவும்

www.noolaham.net

10:45 AM  
Blogger புதுமை விரும்பி said...

தகவலுக்கு நன்றி மயூரன் அவர்களே!

1:54 PM  

Post a Comment

<< Home

Free Hit Counter
Google PageRank

Your Ad Here