மரணத்தின் மரணம்
எல்லோரும் ஆழ்ந்து உறங்கிய நடுநிசியில்
சத்தமில்லாமல் ஆழ்கடலில்
இறந்துபோனது 'மரணம்'.
மாமிச நாற்றமெடுக்கும்
பொக்கை வாயோடு
கால் கைகளை திசைக்கொன்றாய்ப் பரப்பி
பார்க்கவே கோரமாய்
இறந்துகிடந்தது மரணம்.
இறப்பதற்கு முன்
கண்கள் மூடி
அது திறந்தவெளியில் கொஞ்சம்
தியானம் செய்திருக்கலாம்.
எல்லார் சாவிற்கும் தவறாமல்
சென்றுவந்தாலும் அனாதையாய்
அது கிடந்தது..
விடிந்து பார்க்கும் போது அது
உயிரைக்காணாமல் தேடும்
அவலம் இன்னும் மிச்சம் இருக்கிறது.
2 Comments:
பெயரைப்போலவே உங்கள் பதிவும், போட்டிக்கான வாழ்த்துக்கள்
உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி இளா அவர்களே.
Post a Comment
<< Home