Monday, July 31, 2006

மழை விடுமா என்ன?

எனக்கே தெரியும் இது அப்படியொன்றும்
பிரமாதமான கவிதை இல்லையென்று..

இருந்தாலும் அனுப்பி வைக்கிறேன் -
நீ அப்படியொன்றும்
பிரமாதமான ரசிகன் இல்லையென்பதால்.

*

மேகம் ஒவ்வொரு முறையும்
கொட்டுகொட்டென்று மழை
பெய்துவிடுகின்றதா என்ன?

சில நேரம் குளிர்ந்த காற்றை மட்டும்
காதோரம் அனுப்பி வைக்கும் ...

இன்னும் சில நேரம்
மனிதர்கள்
குடை விறிக்கிற வரை அல்லது
ஏதோ கூரைக்கடியே பதுங்குகிற வரை
பாதையில் நீர்த்துளி தெளித்து வைக்கும்..

ஆனால், குடையில்லாமல் தனியாய்
பொட்டல்காட்டில் யாராவது
பயணிக்கும் போது
நிச்சயம்
முழுவதுமாய் தரையிறங்கும்.

விளையாட தனியாய் ஆள் கிடைத்தால்
மழை விடுமா என்ன?

* *

4 Comments:

Blogger  வல்லிசிம்ஹன் said...

சொல்வது அத்தனையும் உண்மை.

குடை எடுக்காவிட்டாலும் மழை வரும்.

வீட்டிலிருந்து புறப்படும்போது வெறிச்சிடும். பஸ்ஸை விட்டு இறங்கும் போது ஆரம்பிக்கும்.
பள்ளி நேரம் முடிந்ததும் வரும்.

1:02 AM  
Blogger புதுமை விரும்பி said...

நன்றி வள்ளி அவர்களே,

மழையின், உங்களுடனான கண்ணாமூச்சி விளையாட்டு இன்னும் இரசிக்கக்கூடியதாய் இருக்கிறது.

1:21 AM  
Blogger பாரதி தம்பி said...

\\எனக்கே தெரியும் இது அப்படியொன்றும்
பிரமாதமான கவிதை இல்லையென்று..

இருந்தாலும் அனுப்பி வைக்கிறேன் -
நீ அப்படியொன்றும்
பிரமாதமான ரசிகன் இல்லையென்பதால்\\

நல்ல கவிதை. இதைப் படிக்கும்போது மணமகன் அப்படியொன்றும் நல்லவனில்லையென்றுத் தெரிந்தும், வேறோடு புலம் பெயர்த்து வேறு நிலத்திற்கு அனுப்பப்படும் பரிதாப மங்கைகள் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை-ஒப்பீடு கொஞ்சம் ஒத்து போகவில்லையென்றாலும் கூட..

8:30 AM  
Blogger புதுமை விரும்பி said...

நன்றி ஆழியூரான் அவர்களே. எனது சமீபத்திய கவிதையை (கடவுள் மனிதனின் கடைசி யுத்தம்) படித்துவிட்டீர்களா?

10:59 AM  

Post a Comment

<< Home

Free Hit Counter
Google PageRank

Your Ad Here