Thursday, August 17, 2006

ராம கிருஷ்ண பரமஹம்சர், ஓஷோ - Are these spiritual masters schizophrenic?

ராம கிருஷ்ண பரமஹம்சர், ஓஷோ - Are these spiritual masters schizophrenic? இந்த கேள்வியோடு நான் இன்று வந்திருப்பது, யாரின் மனதையும் சத்தியமாய் காயப்படுத்துவதற்காக அல்ல. என்னைப் பொருத்தவரை எந்த கேள்விகளும் ஆபத்தானவை அல்ல. நமது, கணித அறிவு மற்றும் கோள்கள் பற்றிய, மருந்துகள் பற்றிய, இசை, மொழி பற்றிய அறிவு 2000 வருடங்களுக்கும் மேலான பழமையானது. நாம் மிகவும் பாரம்பரியம் மிக்க, பழமையான வாழ்வியல் முறையை, கலாச்சாரத்தை கொண்டிருந்தவர்களாய் இருந்தாலும், அறிவியல் தொழில் நுட்பத்தில் நாம் பின் தள்ளப்பட்டு மேற்கத்திய நாடுகள் முன்னேறிப் போனதற்கு, நாம் கேள்வி கேட்காமல் விட்டதே முக்கியமான காரணம் என்பேன். இதனால் தானோ என்னவோ, சில நுணுக்கமான, விலை மதிக்கமுடியாத தகவல்கள் நம்மை அடையாமலேயே புதைந்து போய்விட்டன. தலைப்பு சம்பந்தப்பட்ட பத்திக்குப்போவதற்கு முன், எனது சுய வரலாறிலிருந்து ஒரு பகுதி.


எனது தாத்தாவை ஊரில் உள்ள எல்லோரும் வைத்தியர் என்றே அழைப்பார்கள். எந்த பூச்சிக்கடி என்றாலும், எலும்பு முறிவு என்றாலும், தோல் வியாதி என்றாலும் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்த எனது தாத்தாவைப் பார்க்க வருவார்கள்.அவர் கொஞ்சம் மஞ்சள், மற்றும் சில வஸ்துகள் வைத்து கட்டிவிட்டு, கொஞ்சம் வேப்பிலை ஒடித்து கட்டின் மீது வைத்து ஏதோ முனகிக்கொண்டிருப்பார் (ஓம் ... ரீம் ... மந்திரகாளி..!!!!). இது மாதிரி சில நாட்கள் செய்தவுடன், வந்தவர்களின் நோய் சரியாகி இருக்கிறது. இப்பொழுது, அவர் இறந்து பல வருடங்கள் ஆகின்றன. ஆனால், அவர் செய்த மருத்துவம் என்ன? எப்படி நோயை சரியாக்கினார் என்பது எனக்கு இன்றுவரை பிடிபடாத ஆச்சரியங்களில் ஒன்று. அதைக் கேட்டுத்தெரிந்து கொள்ளாமல் விட்டதற்கு இன்றளவும், என் வீட்டில் உள்ளவர்களை நான் வைவதுன்டு.



இப்பொழுது தலைப்பிற்கு வருவோம்.

முதலில் ராமகிருஷ்ணர் பற்றி ஒரு சிறு குறிப்பு.
ராமகிருஷ்ணர் 19 ம் நூற்றாண்டில், மேற்கு வங்காளத்தில் உள்ள கமர்புகுர் என்ற கிராமத்தில் பிறந்தார். சிறு வயதில் பள்ளிப்படிப்பில் அக்கறை இல்லாவிட்டாலும், கலைகளில் ஆர்வமுடையவராய்த் திகழ்ந்தார். பணம் சேர்ப்பதில் ஆர்வமில்லாதவறாய்த் திகழ்ந்தார். பிற்காலத்தில் கல்கத்தாவில் ஒரு காளி கோவிலில், இவர் அர்ச்சகரானார். அந்த கால கட்டங்களில், அவரிடம் கடவுள் பற்றிய நிறைய கேள்விகள் எழ ஆரம்பித்தன. தான் வணங்குவது, ஆராதனை செய்வது எல்லாம் வெறும் கற்சிலை தானா? அல்லது அதற்குள் அரூவமாய் கடவுள் என்ற சக்தி இருக்கிறதா? இது மாதிரியான கேள்விகளுக்கு விடை தெரியாமல் தடுமாறினார். வழிபாட்டின் போது பல நேரங்களில் அவர் சத்தமாக அழுதிருக்கிறார். இரவு நேரங்களில் அருகிலுள்ள காட்டிற்குச் சென்று, இரவு முழுவதும் வழிபாடு செய்திருக்கிறார். தனது கேள்விகளூக்கு விடை கிடைக்காமல் அதிருப்தியால், ஒரு நான் தன் வாழ்வினை முடித்துக்கொள்ளும் பொருட்டு, வாள் ஒன்றை எடுத்து தன் கழுத்தை வெட்டிக்கொள்ள துணிந்த போது, காளியின் உடம்பிலிருந்து ஒளி வெள்ளம் இவரை நோக்கி பாயத்தொடங்கியது. அதன் சக்தியின், வலிமை தாங்காமல், அவர் அங்கேயே மயங்கி விழுகிறார். அதன் பின்னும் காளியிடம் மதங்கள் சொல்கிற உன்னத நிலையை வேண்டி பிரார்த்தனை செய்தார். பல மத சன்னியாசிகளுடன் கருத்துப் பறிமாற்றம் செய்யும் வாய்ப்புகள் அவருக்கு அமைந்தன. அதோடு, இந்து மதத்தின் பல கடினமான சாதகங்களை, பல மாதங்கள் பயிற்சி செய்து வெற்றியும் பெற்றார். அதிகப்படியான இந்துமத சாதகத்தினால், அவரின் மன நிலை பிறழ்ந்துவிட்டதாக ஊரில் வதந்திகள் பரவ ஆரம்பித்தன. அவரது அன்னையார் உடனடியாக, இவருக்கு திருமணம் செய்து வைப்பதென்று முடிவு செய்தார். ராமகிருஷ்னரும், ஏதும் எதிர்ப்பு தெரிவிக்காமல், ஆறு வயது சாரதாவை மனைவியாக ஏற்றுக்கொண்டார். அவர், சாரதாவை காளியின் வடிவமாகவே பார்க்க ஆரம்பித்தார். அவருக்கு மற்ற சன்னியாசிகளிடம் தான் கற்ற பாடங்களை சொல்லித்தர ஆரம்பித்தார். அவர் விரைவில், கடவுளைத் தேடும் அனைவருக்கும் ஒரு வழிகாட்டியானார். அவர் தொண்டைப் புற்று நோயால் பாதிக்கப்பட்டு, மகாசமாதி நிலையில் இருந்து உயிர் விடும் வரையில், இந்து மதக்கருத்துக்களையும், தனது அனுபவத்தையும் அவரது சீடர்களோடு பகிர்ந்துகொண்டிருந்தார்.


இப்பொழுது, இந்த கட்டுரையின் முக்கியமான பகுதிக்கு வருவோம். இராமகிருஷ்
ரின் இறைதேடல் அநுபவங்களை (spiritual experiences) உற்று நோக்கினோமானால், அவரின் பிதற்றல்கள், திடீர் அழுகை, அவர் கேட்ட அசரீரிச் சத்தம், காளியுடன் உறவாடியது எல்லாமே, schizophrenia என்ற மன நோய் உள்ளவருக்கு இருக்கும் அநுபவங்களைப் போன்றதாகும். இராமகிருஷ்ரின் அசரீரி கேட்டலை auditory hallucination என்ற குறைபாட்டுடனும், காளியுடன் பேசுவதை visual hallucination என்ற schizophreniaவின் குறைபாட்டுடனும் நேரடியாக தொடர்பு படுத்திவிடலாம்.

(இடைக்குறிப்பு: நான் பாட்டிற்கு,
schizophrenia என்றால் என்னவென்று உங்களுக்கு தெரிந்திருக்கும் என்ற எண்ணத்தில் பாதிக்கட்டுரை வரை வந்துவிட்டேன். இருந்தாலும் திடீரென்று ஒரு சந்தேகம். இது பற்றி தெரியாதவர்களுக்கு இடையில் ஒரு சிறு விளக்கம். இது ஒரு மன நோய். தொடர்ந்த மன அழுத்தத்தாலும், திடீரென்று நிறுத்திவிடுகிற போதை, மதுப் பழக்கங்களாலும் வருகிறது. இதைப் பற்றி தெரிந்துகொள்ள நீங்கள் ஆளவந்தான் படத்தையும், குடைக்குள் மழை படத்தையும் இன்னொரு முறை பார்க்கலாம்.)

இதே மாதிரியாக பெரும்பாலான spiritual masterகளின் அனுபவங்களுக்கும், ஒரு schizophrenia நோயாளியின் அனுபவங்களுக்கும் அதிகம் வித்தியாசம் இல்லை என்றே சொல்லிவிடலாம். இந்த கருத்தைத் தவறென்று சொல்ல வரும் இந்த ஆன்மிகவாதிகளின் ஆதரவாளர்கள், இவ்விருவரின் அனுபவத்தில்/உணர்தலில் உள்ள அடிப்படை வித்தியாசம் என்ன என்று சொல்ல கடமைப்பட்டிருக்கிறார்கள்.


தாங்கள் மன நோயாளிகள் என்பது தெரியாமலேயே இந்த ஆன்மிகவாதிகள் இறந்து போய்விட்டார்களா என்பது மிகப்பெரிய கேள்வியாகவே எனக்கு தொக்கி நிற்கிறது.



ஓஷோவின்
என் இளமைக்கால நினைவுகள் என்ற புத்தகத்தையும் சென்ற வருடம் எனக்கு படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஓசோவை சிறு வயதில் புத்தர், தன் வயப்படுத்த அல்லது ஆக்கிரமிப்பு செய்ய விரும்புவதும், அதை ஓசோ மறுத்து தன் கலப்பற்ற இருப்பை நிறுவுவதுமான நிகழ்ச்சியை, ஓசோ அந்த புத்தகத்தில் சொல்லியிருப்பார். என்னை இது ஓசோவின் ஆரோக்கியமான மன நிலையைச் சந்தேகப்படவைத்தது. இந்த ஒன்றும் கூட மேல் குறிப்பிட்ட எ
ன் எண்ணத்தை வலுப்படுத்தியது. இதே கேள்விகள் உங்களில் சிலருக்கும் இருக்கலாம். சிலர் இதற்கு பதிலும் கண்டுபிடித்து வைத்திருப்பீர்கள். கொஞ்சம் எனக்கும் சொல்லுங்களேன்.

89 Comments:

Blogger புதுமை விரும்பி said...

testing this page ....

12:10 AM  
Blogger வஜ்ரா said...

புதுமை விரும்பி,

கேள்வி கேட்பதறு முதலில் தகுதிகள் வளர்த்துக் கொள்ளவேண்டும்...அப்பொழுதுதான் மனதில் கேள்வி தோன்றும்...

இன்று நீங்கள் பரமஹம்சர் schizophrenic என்று சொல்வதை எப்படிப் பயன் படுத்திக் கொள்வார்கள் என்று நான் உங்களுக்கு விளக்கவேண்டியது இல்லை.

Politics apart..., கடவுள் பரமஹம்சருக்கு Schizophrenia மூலம் காட்சி தந்திருக்கலாம் இல்லையா? கடவுளும் அறிவியில் விதிகளுக்குக் கட்டுப்பட்டவர் தானே...?

12:25 AM  
Blogger திருவடியான் said...

நல்ல ஆராய்ச்சி....

இதை பின் தொடர்ந்து போனால் எல்லா மதப்பெரியோர்களையும் அவ்வாறே சந்தேகமுற நேரிடும். சுஜாதா தனது கதைகளில் இந்த மாதிரியான மனக்குழப்பங்களை விவரித்திருப்பார். தான் காணுகிறோம் என்பதும் அதை உணரமுடியாமல் இருப்பதும் பிற்பாடு சாதாரண நிலைவரும்போது அவற்றையெல்லாம் மறந்திருப்பதும், இந்நோயின் அறிகுறிகளாகக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. ஆனால் மதப்பெரியோர்கள் எல்லாம் (மதப்பாகுபாடின்றி எல்லோரையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்) அப்படி இருந்ததாகத் தெரியவில்லை. ஆதலால் உங்களின் வாதத்திற்கு வலு இருப்பதாக நான் ஏற்கவில்லை.

தற்காலத்தில், கஞ்சா அடித்துக்கொண்டு திரியும் சில சாமியார்கள் வேண்டுமானால் அப்படி ஒரு கடவுள் தரிசனம் பெறக்கூடும்.

3:36 AM  
Blogger புதுமை விரும்பி said...

வருகைக்கு நன்றி வஜ்ரா,

//கேள்வி கேட்பதறு முதலில் தகுதிகள் வளர்த்துக் கொள்ளவேண்டும்//

நான் மாறுபட்ட கருத்து உள்ளவன். கேள்விகளே மனிதனை தகுதியுள்ளவன் ஆக்குகின்றன.

மதத்தில் நெருடுகிற விசயங்களை மூடிமறைத்து, என்ன சாதித்துவிடப்போகிறோம். மதங்கள் நாம் கேட்கிற கேள்விகளில் காயம்பட்டு விழும் அளவிற்கு, தங்களைக் காத்துக்கொள்ள வலிமையற்றவைகளா? அப்படி மதங்கள் வலிமையற்றவைகள் என்றால், அவைகள் நம்மை எப்படி காப்பாற்றப் போகின்றன.

ராம கிருஷ்ணர், ஓசோ பற்றி அறியாத ஒரு மனவியல், மன நோய்கள் பற்றி ஆராய்ச்சி செய்யும் ஒருவரிடம் இவர்களின் அநுபவம், வாழ்க்கை பற்றி சொல்வோமானால், அவருக்கு எழுகிற மிக இயல்பான கேள்வியைத் தான் நான் எழுப்பியிருக்கிறேன். அப்படிப்பட்ட ஒருவரின் கேள்விக்கு, நம்மைத் தயார் செய்வது நமக்கு அவசியமாகிறது.

3:42 AM  
Blogger வஜ்ரா said...

புதுமை விரும்பி,

கேள்விகளே மனிதனை தகுதியுள்ளவன் ஆக்குகின்றன.

நிச்சயமாக...இதில் எனக்கு எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை. சரி அவரவர் Schizophrenic ஆகவே இருந்துவிட்டுப் போகட்டும்...அவர் சொல்லிய கருத்துக்கள் வலைமை குறைந்துவிடவா போகிறது அதனால்..?

மேலும் அவரை முழுமையாக நாம் பார்க்கவில்லை, அவர் சொல்லிய கருத்துக்கள் மூலமே நாம் அவரை அறிகின்றோம்...Schizophrenia அவருக்கு இருந்திருக்கலாம் என்பது ஒரு ஊகமாகவே இதில் இருக்கவேண்டும்...அது தான் என்று அருதியிட்டுச் சொல்ல முடியாது...இன்று அறிவியலில் Schizophrenia என்று சொல்லும் நாம் நாளை மேலும் தகவல் கிடைத்தால் Para psychology பிரிவில் சேர்த்து விடுவோம்...!!

..
அப்படி மதங்கள் வலிமையற்றவைகள் என்றால், அவைகள் நம்மை எப்படி காப்பாற்றப் போகின்றன.
..

இன்று மதங்கள் மனிதர்களைக் காப்பாற்றுவதை விடுத்து, மனிதன் தான் மதங்களைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறான்...ஒரு விதமான சிந்தனை முறையும் விதிகளும் வரையரை செய்ய மதங்கள் தேவை.. விதிகளும் சிந்தனை முறைகளும் மாற்றத்திற்கு உரியதே...

இன்று உங்கள் மதத்தை நீங்கள் துரந்தால் நாளை வேற்று மதத்தவர் உங்கள் சந்ததியினரை கவர்ந்து கொள்வர். ஆன்மா அருவடை செய்யக் காத்திருக்கும் மதங்களுக்கு இடையே மாற்றங்களை ஏற்றுக் கொண்டு செல்லும் நம் சிந்தனை முறையை காப்பாற்றிக் கொள்ளவேண்டிய அவசியம் உண்டு என்பதே என்கருத்து...ஏன் என்றால் சிந்தனை முறையில் மாற்றத்தை அனுமதிக்காத சிந்தனைகளியும் சித்தாந்தங்களையும் ஏற்றுக் கொண்டால் நாளை சிந்திக்கும் திரனையே நாம் இழந்து விடுவோம்...

முதலில் இருப்பதைக் காப்பாற்றுவோம், பிறகு பரப்பதைப் பிடிப்போம்..

4:19 AM  
Blogger புதுமை விரும்பி said...

நன்றி மாசிலா அவர்களே,

//ஒரே பொய்யை, திரும்ப திரும்ப நூறு முறை சொன்னால் அல்லது சொல்லக் கேட்டால், நம்பினால் கடைசியில் அப்பொய்யே உண்மை மாதிரி தென் படும். தொழில் அதிபராக ஆக வேண்டுமெண்றால், அவரைப் போல் பேச, உடுத்த, நடக்க, பழக, உழைக்க கற்றுக் கொள்ள வேண்டும். அதையே ஒரே குறிக்கோளாக கொண்டு செயல்படவேண்டும். இதன்படி, நமக்குள் புதைந்து கிடைக்கும் சில அரிய தகுதிள் வெளி வருவதை கண்டுகொள்ள முடியும்.//

காப்மேயர் எழுதி, குமுதத்தில் தொடராய் வெளிவந்த நீங்களும் லட்சாதிபதி ஆகலாம் என்ற அல்லது நீ விரும்புவது எதுவானாலும் அடைவது எப்படி? என்ற தொடரை நினைவுபடுத்துகின்றன இந்த வரிகள்.

4:55 AM  
Blogger புதுமை விரும்பி said...

நன்றி திருவடியான்,

//நல்ல ஆராய்ச்சி.... //
மீண்டும் நன்றி.

//இதை பின் தொடர்ந்து போனால் எல்லா மதப்பெரியோர்களையும் அவ்வாறே சந்தேகமுற நேரிடும். சுஜாதா தனது கதைகளில் இந்த மாதிரியான மனக்குழப்பங்களை விவரித்திருப்பார். தான் காணுகிறோம் என்பதும் அதை உணரமுடியாமல் இருப்பதும் பிற்பாடு சாதாரண நிலைவரும்போது அவற்றையெல்லாம் மறந்திருப்பதும், இந்நோயின் அறிகுறிகளாகக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. ஆனால் மதப்பெரியோர்கள் எல்லாம் (மதப்பாகுபாடின்றி எல்லோரையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்) அப்படி இருந்ததாகத் தெரியவில்லை. ஆதலால் உங்களின் வாதத்திற்கு வலு இருப்பதாக நான் ஏற்கவில்லை.//

நீங்கள் சொல்வது உண்மை தான். யோசிக்கிறேன்.

5:02 AM  
Blogger Muse (# 01429798200730556938) said...

என் அன்பிற்கும், பிரியத்திற்குமுரிய புதுமை விரும்பி அவர்களே,

பாராட்டுக்கள். ஒரு சரியான கேள்வியை கேட்டுள்ளீர்கள்.

இதைப் பற்றி தெரிந்துகொள்ள நீங்கள் ஆளவந்தான் படத்தையும், குடைக்குள் மழை படத்தையும் இன்னொரு முறை பார்க்கலாம்.

இந்தப் படங்களைப் பார்த்தவுடன் நான் மனநோய் வந்தவன் ஆகிவிடுவேனா? :-)) !!

வேடிக்கை இருக்கட்டும். முதலில் பஹவான் ராமக்ருஷ்ணரைப் பற்றி.

ராமக்ருஷ்ணர் உயிருடன் இருந்தபோதே அவரை பெரும்பாலான மக்கள் பைத்தியமாகத்தான் கருதினர். பரமஹம்ஸ நிலையை எட்டியிருந்த அவரை பெரிய வாத்து என்று கேலி செய்தவர்களும் உண்டு. அது ஏன்? மேலை நாட்டு சாத்திரங்களில் நுணுக்கமான அறிவு பெற்றிருந்த ஒருவர் அவரிடமே நீங்கள் ஒரு பைத்தியமாக இருக்க வாய்ப்பு உள்ளது என்று கூறினார். அது வேறு யாருமில்லை: பிற்காலத்தில் ராமக்ருஷ்ணரின் எண்ணங்களுக்காக உயிர்வாழ்ந்த, உழைத்த விவேகானந்தர்தான்.

அதே சந்தேகம் தங்களுக்கும் வந்துள்ளது. காரணம் மேலை நாட்டு மனவியல் பற்றிய கருத்துக்கள்.

மேலை நாட்டு மனோதத்துவம் பொதுப்படையாக சாதாரண மனிதர்களிடம் காண்கின்ற அடையாளங்களை வைத்து ஒருவரை இந்த மன நோய் உள்ளவர் என்று கூறுகின்றது.

இந்த மேலை நாட்டு மனோதத்துவ நிபுணர்களிலும் முழு ஒற்றுமையானது இந்த விஷயத்தில் இல்லை என்பதுதான் உண்மை. சிலர் இறை அனுபவங்களை தற்கால அறிவியல் முழுமையும் புரிந்துகொள்ள இயலவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். சிலர் இதெல்லாம் மனப்பிறழ்ச்சியே என்று பொத்தாம் பொதுவாகக் கூறிவிடுகின்றனர். மேலும் சிலர் இவை எல்லாம் மனத்தின் அதிமன ஆற்றலின் விளைவு என்றும், அதிஉணர்வு தொடர்பானவை என்றும்; அந்த வகையிலேயே இது அராயப்படவேண்டும் என்றும் கூறுகின்றனர் (உதாரணம் ஜங்க்).

இப்படி ஒரு ஒத்த முடிவிற்கு வரமுடியாமல் அறிவியல் தவித்துக்கொண்டிருக்கும்போது அது பற்றி அதிகம் தெரியாதவர்களாகிய நாம் (இதில் நீங்கள் சேர்த்தியில்லை) இதை ஆராயப் புகுந்துள்ளோம் என்பதை நினைவில் கொண்டு இந்த விஷயத்தைப் பற்றி கருத்துப் பரிமாறுவோம்.

ராமக்ருஷ்ணரை ஒரு பெரிய ஏமாற்றுக்காரன் என்று கூறிய "இந்திய நாடக உலகின் தந்தை" பிற்காலத்தில் அவரே இறுதி தெய்வம் என்று கூற ஆரம்பித்தார்.

அவரை பைத்தியம் என்று அழைத்தவர்களுக்கும், தெய்வம் என்று அழைத்தவர்களுக்கும் ஒரு முக்கிய வித்யாசம் உள்ளது. அது என்னவென்றால், தெய்வம் என்று அழைத்தவர்கள் பெரும்பாலானோர் அவருடன் இரவும், பகலும் உடனிருந்தவர்கள். உணவு உண்டவர்கள். அவரோடு சண்டை போட்டுக்கொண்டவர்கள். பாட்டுப் பாடியவர்கள். நாடகங்களுக்குச் சென்றவர்கள். கோபித்துக் கொண்டவர்கள். சக மனிதனாய் பழகியவர்கள். பைத்தியம் என்று அழைத்தவர்கள் எல்லாரும் அவருடன் அதிகம் பழகியிராதவர்கள்.

ஒரு மனப்பிறழ்ச்சி உள்ளவரின் முதல் அடையாளம் தெளிவின்மை. ஆனால், ராமக்ருஷ்ணர் அதிஉணர்வு நிலைகளில் இல்லாதபோது மிகத் தெளிவான மனநிலையும், புத்திசாலித்தனமும், கருத்துக்களையும் வாதங்களையும் மிக மிக அருமையாக முன்வைப்பதும் என்று கலக்கோ கலக்கு என்று கலக்கிக் கொண்டிருந்தவர்.

ஓஷோவும் அப்படித்தானே.

இவ்வளவு ஏன்? ரமண மஹரிஷியின் மனோ நிலையை தேர்ந்த மன நல மருத்துவர்கள் பரிசோதித்ததாகப் படித்துள்ளேன். அவர்களின் கருத்துப்படி அவர் மற்ற எல்லாரையும்போல ஆரோக்கியமான மனநிலை உள்ளவர். அவரும் அவ்வப்போது உயர்மனநிலையை (அல்லது மனம்தாண்டிய நிலையை) அடைபவர்தான்.

அப்படியானால் வேறு ஒரு குறை சொல்லமுடியும். இவ்வளவு புத்திசாலியான இவர்கள் அதிஉணர்வு நிலையை அடைந்ததெல்லாம் வெறும் நடிப்புத்தானா என்பதே அக்கேள்வி. இது நம்பிக்கையின் பாற்பட்டது. நம்பிக்கைகளோ சுய தேவைகளின் பாற்பட்டது.

இவர்களை தெய்வமாகக் காண்பவர்களுக்கு அந்த நம்பிக்கையின்மூலம் கிடைக்கின்ற மன ஆறுதல், பாதுகாப்பு உணர்வு, பாஸிட்டிவ் உணர்வுகள், பயங்களிலிருந்து தப்புதல் போன்றவை நம்பாதவர்களுக்கு நம்பாமலிருப்பதன் மூலம் ஏற்படுகின்றது. எனவே இரண்டிற்கும் அதிக வித்யாசமில்லை. ஆனால் இந்த விஷயம் இந்த இடத்தில் பொருத்தமானவை அல்ல.

கேட்டுக்கொள்ள வேண்டியவைகளுள் முக்கிய விஷயம் நாம் ஏன் இதை அறிய விரும்புகிறோம் என்பதே.

6:59 AM  
Blogger Muse (# 01429798200730556938) said...

புதுமைவிரும்பி அவர்களே,

என்ன ஆயிற்று இந்த பதிவிற்கு?

யாரும் அதிகம் பின்னூட்டமிடவில்லையே. தமிழ் ப்ளாக்குகளின் உலகத்தில் அரசியல் ஜல்லிக்குத்தான் மதிப்புப் போல.

உருப்படியான விஷயங்கள் பற்றி சொல்வதற்கு ஆட்கள் இல்லை போலும். உருப்படியான விஷயங்களை எழுதும் பத்ரியின் வலைப்பதிவிற்கும் இதே கதிதான்.

வருத்தப்படவேண்டிய விஷயம்தான் இது.

9:14 PM  
Blogger வஜ்ரா said...

//
இவர்களை தெய்வமாகக் காண்பவர்களுக்கு அந்த நம்பிக்கையின்மூலம் கிடைக்கின்ற மன ஆறுதல், பாதுகாப்பு உணர்வு, பாஸிட்டிவ் உணர்வுகள், பயங்களிலிருந்து தப்புதல் போன்றவை நம்பாதவர்களுக்கு நம்பாமலிருப்பதன் மூலம் ஏற்படுகின்றது. எனவே இரண்டிற்கும் அதிக வித்யாசமில்லை.
//

Jesus F christ!! Thats one hell of a statement.

மூசு சார், எங்கேயோ போயிட்டீங்க சார்..(அபூர்வ சகோதரர்கள் ஸ்டைலில் படிக்கவும்)

5:46 AM  
Blogger Thekkikattan|தெகா said...

புதுமை விரும்பி,

நல்ல ஹூம்... என்ன சொல்றது, உங்களுக்கே ஊறிய ஒரு பரிமாணப் (Dimension) புரிதலை இங்கு கொணர்ந்தமைக்கு, நன்றி!

//என்னை இது ஓசோவின் ஆரோக்கியமான மன நிலையைச் சந்தேகப்படவைத்தது. //

சரி இப்பொழுது விசயத்திற்கு போவோம். இப்பொழுது பரமஹாம்சருக்கும், ஒஷோவிற்கும் schizophrenia என்று அழைக்க முற்படுபவர் எந்த அளவுகோலின் படி, அதனை நிறுபிக்க அல்லது புரிந்து கொள்ள எத்தனிக்கிறார் என்று முதலில் பார்க்கலாம்.

யார் யாரை மன நலம் குன்றியவர் என்று நிர்ணயிப்பது. உதாரணத்திற்கு ஒரு 100 பேர் இருக்கும் இடத்தில் 99 பேர் தினமும் காலையில் எழுந்து, என்ன மத்த 99 பேர் செய்கிறார்களோ அதனை தினமும் செய்து வீட்டிற்கு வந்து, கதவை சாத்தியற்கு பிறகு என்ன வேண்டுமானலும் அடுத்தவர்களின் பார்வைக்கு அப்பால் செய்யலாம், ஆனால் அடுத்த நாள் அந்த அரிதிப் பெருபாண்மை 99 பேர்களுடன், இணக்முற்றுப் போனால். மன ஆரோக்கியம் உள்ளவன் இல்லையா (என்று நினைத்துக் கொள்கிறோம்)?

சரி இதனையே இப்படிப் பாருங்கள், அந்த 99 பேரின் மன வளர்ச்சி மற்றுமொரு பரிமாணத்திற்கு (Dimension or Plane of thinking) செல்ல முடியாமல் தேக்க முற்று, மன நலம் குன்றிய நிலையில் ;-) தன்னை யாரும் பைத்தியம் என்று கூப்பிட்டு விடக் கூடாதே என்று சுய சிந்தனைக்கு அணைபோட்டு மூளை மழுங்கி 'மன அழுத்தத்தில்" வாழ நேர்ந்து போனால். இப்பொழுது புரிகிறதா என்ன நடக்கிறதுதென்று. அதுதான் நானும் நீங்களும் அந்த 99 பேரில் ஒருவராக இருந்து கொண்டு அந்த 1 நபருக்கு பெயர் கொடுக்க எத்தனிக்கின்றோம். மன அழுத்தத்தில் மூழ்கிப் போய்.

இங்கு யார் destructive ideaவான சிந்தனைகளை அதிகமாக வெளிக்கொணர்கிறோம், இந்த இரு பாலரில்?

நாம் தானே. இந்த அழிவு சிந்தனை மன நலம் பாதிக்கப் பட்டவர்களுக்கே ஊரிய அறிகுறி அல்லாவா? இப்பொழுது அவ்வாறு மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தன்னைத்தானே வருத்திக்கொள்ளலாம் (Self-wounding, hurting others physically etc.,) அல்லது வெளிப்புறத்தில் அதன் தாக்கத்தை கொணரமுடியும்... இப்பொழுது நம்மிடையே நடக்கும் அனைத்து இயற்கை மற்றும் போர்கள் சார்ந்த அழிவுகளும் இம் மன நிலை குன்றியவர்களால் கொணரப்பட்டதே... அதாவது இந்த 99 பேர்களால்.

இருப்பினும் அது போன்ற மற்றொரு பரிமாணத்திற்கு பயணித்தவர்களால் அல்லவே. எனவே, நாம்தான் முதலில் மன நல மருத்துவரை அணுக வேண்டும் (அப்படின்னு ஒருத்தர் இருக்கிறாரா?), அப்படியெனில் யார் அந்த மன நல மருத்துவராக இருக்க முடியும்? மீண்டும் அந்த பரமஹாம்சரும், ஒஷொவையும் தவிற வேறு யார்... அன்பையும் உலக அமைதியையும் போதிக்கும் "மனித பரிணாமிகள்."

பி.கு: இந்த பின்னூட்டத்தை தனிப்பதிவாக என்னுடைய பக்கத்தில் உங்களுடைய சுட்டியின் இணைப்புடன் இடலமென நினைத்துள்ளேன்.

7:20 AM  
Blogger Thekkikattan|தெகா said...

இதோ என்னுடைய பதிவிற்கான சுட்டி புதுமை விரும்பி...

http://thekkikattan.blogspot.com/2006/08/spiritual-masters-schizophrenic.html

8:00 AM  
Blogger Unknown said...

புதுமை விரும்பி, உங்கள் கேள்வி அவர்கள் கடவுளை கண்டதாக அல்லது கலந்து போனதாக சொன்னதால் ஏற்பட்டதாகவே தோன்றுகிறது. இருவரும் ஆன்மீகம் பற்றி சொல்லியிருக்கிறார்கள், கடவுள் பூதம் சாமி பற்றிய பேசவில்லை. ஆன்மீகம் என்பது கடவுள் இல்லை அது தன்னை உணரும் ஒரு நிலை. அதை உணர்ந்தவர்கள் ஆன்மீகத்தை அடைந்தவர்கள் ஆகிறார்கள், நீங்கள் சொவது போல் பேரானந்த நிலைகளில் இருக்கும் ஒருவரை கண்டால் மனனிலை தவறியவர் போல் தோன்றும் நம்மை போல் சாதாரணமானவர் மனங்கள் அதை கடவுள், மனசு, மனிதம் என மூன்றுடன் குழப்பிக் கொள்வதாலேயே இது நடக்கிறது. ஓஷோ மனிதன் மனிதனாக இருப்பது பற்றி சிந்தித்தவர். மனிதம் மறந்தவர்களுக்கு அது மன நிலை தவரியதாக தோன்றலாம். வாழ்வியலலையும், கடவுளையும் இப்படி குழப்பிக் கொள்ளாதீர்கள், புத்த//புத்தர், தன் வயப்படுத்த அல்லது ஆக்கிரமிப்பு செய்ய விரும்புவதும், அதை// இதில் புத்தரின் தத்துவங்க்ள்தான் சொல்லப் பட்டனவே அன்றி புத்தரில்லை. கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டு படித்துப் பாருங்கள்

8:38 AM  
Blogger புதுமை விரும்பி said...

மகேந்திரன்,
/
/ புத்த//புத்தர், தன் வயப்படுத்த அல்லது ஆக்கிரமிப்பு செய்ய விரும்புவதும், அதை// இதில் புத்தரின் தத்துவங்க்ள்தான் சொல்லப் பட்டனவே அன்றி புத்தரில்லை.//

தங்களின் இந்த கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். என் புரிதல் தவறானதாக இருக்கலாம். இன்னும் ஒரு முறை, ஓசோவின் என் இளமைக் கால நினைவுகள் புத்தகத்தைப் படித்து தெளிவு பெற வேண்டும்

10:25 AM  
Blogger சல்மான் said...

// மதத்தில் நெருடுகிற விசயங்களை மூடிமறைத்து, என்ன சாதித்துவிடப்போகிறோம். மதங்கள் நாம் கேட்கிற கேள்விகளில் காயம்பட்டு விழும் அளவிற்கு, தங்களைக் காத்துக்கொள்ள வலிமையற்றவைகளா? அப்படி மதங்கள் வலிமையற்றவைகள் என்றால், அவைகள் நம்மை எப்படி காப்பாற்றப் போகின்றன. //


யதார்த்தமான, ஆனால் சிலருக்கு வலிக்கும் வார்த்தைகள். வலித்ததின் அடையாளம் காண்பிக்கும், 'இருப்பதை காப்பாற்றிக்' கொள்ளும் பின்னூட்டங்கள். கேள்விகள் கேட்பதை பெரும்பாலான தத்துவங்கள் விரும்புவதில்லை என்பதை நிரூபிக்கும் வாதங்கள்.

10:25 AM  
Blogger புதுமை விரும்பி said...

தெகா,

வருகைக்கு நன்றி.

// யார் யாரை மன நலம் குன்றியவர் என்று நிர்ணயிப்பது. உதாரணத்திற்கு ஒரு 100 பேர் இருக்கும் இடத்தில் 99 பேர் தினமும் காலையில் எழுந்து, என்ன மத்த 99 பேர் செய்கிறார்களோ அதனை தினமும் செய்து வீட்டிற்கு வந்து, கதவை சாத்தியற்கு பிறகு என்ன வேண்டுமானலும் அடுத்தவர்களின் பார்வைக்கு அப்பால் செய்யலாம், ஆனால் அடுத்த நாள் அந்த அரிதிப் பெருபாண்மை 99 பேர்களுடன், இணக்முற்றுப் போனால். மன ஆரோக்கியம் உள்ளவன் இல்லையா (என்று நினைத்துக் கொள்கிறோம்)? //


ஒரு அளவிடுதல் செய்யும் பொழுது, அளவுகோலின் முக்கியத்துவம் பற்றி மிகச்சரியாக பேசியிருக்கிறீர்கள்.
அதிகப்படியானோர் சேர்ந்து முடிவு செய்வதே அளவுகோல் என்பது சில விசயங்களுக்கு சரிதான். இந்த
இடங்களில், அளவுகோல் மாறக்கூடியது. The scale is relative. ஆனால், அறிவியல், மருத்துவத் துறைகளில் பயன்படுகிற
அளவுகோல்கள் இப்படியானவை அல்ல. உதாரணமாக, வெப்ப நிலை மானி போன்றவைகளைச் சொல்லலாம். Here, the scales are absolute. அதனால்,
மனவியல் அறிவியலில், ஒரு மனிதன் மன நோயாளி என்றால், அவன் மன நோயாளி தான். எந்த தளத்தில் இருந்து
பார்ததாலும் கூட.

10:44 AM  
Blogger Thekkikattan|தெகா said...

//The scale is relative. ஆனால், அறிவியல், மருத்துவத் துறைகளில் பயன்படுகிற
அளவுகோல்கள் இப்படியானவை அல்ல. உதாரணமாக, வெப்ப நிலை மானி போன்றவைகளைச் சொல்லலாம். //

கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது... அது போன்ற அறிவியல் சார்ந்த விசயங்களுக்கு கிடைப்பது Quantitative Dataவை வைத்து நாம் அறியிட்டு சொல்லிவிடலாம்.

//Here, the scales are absolute. அதனால்,
மனவியல் அறிவியலில், ஒரு மனிதன் மன நோயாளி என்றால், அவன் மன நோயாளி தான். எந்த தளத்தில் இருந்து
பார்ததாலும் கூட.//

ஆனால் நாம் இங்கு பேசிக்கொண்டிருக்கும் விசயம், மனத்தளவில் ஒருவர் எந்த நிலையை எட்டியிருக்கிறார் என்பதனை பொருத்தல்லவா...Qualitative தன்மையைக் கொண்டு... அங்குதான் வருகிறது... இது போன்ற கேள்விகளும், இதனையும் செக் அவுட் செய்து பாருங்கள்... http://orani-sittingby.blogspot.com/2006/06/does-soul-has-evolution.html

அப்படியே கஷ்டம் பார்க்கமல் என்னுடைய பதிவிளும் உங்களுடைய எண்ணங்களை பதிந்து விடுங்கள் பின்னால் உதவும் எனக்கு.... ப்ளீஸ்!

10:55 AM  
Blogger புதுமை விரும்பி said...

மகேந்திரன்,

//நீங்கள் சொவது போல் பேரானந்த நிலைகளில் இருக்கும் ஒருவரை கண்டால் மனனிலை தவறியவர் போல் தோன்றும் நம்மை போல் சாதாரணமானவர் மனங்கள் அதை கடவுள், மனசு, மனிதம் என மூன்றுடன் குழப்பிக் கொள்வதாலேயே இது நடக்கிறது.//

வஜ்ராவிற்கு சொன்ன விளக்கத்தையே இந்த இடத்தில் தருகிறேன்.

ராம கிருஷ்ணர், ஓசோ பற்றி அறியாத ஒரு மனவியல், மன நோய்கள் பற்றி ஆராய்ச்சி செய்யும் ஒருவரிடம் இவர்களின் அநுபவம், வாழ்க்கை பற்றி சொல்வோமானால், அவருக்கு எழுகிற மிக இயல்பான கேள்வியைத் தான் நான் எழுப்பியிருக்கிறேன். அப்படிப்பட்ட ஒருவரின் கேள்விக்கு, நம்மைத் தயார் செய்வது நமக்கு அவசியமாகிறது.

எனது கேள்வியே, நீங்கள் பேரானந்த நிலை என்பதை எப்படி வரையறுக்கிறீர்கள் என்பதே. நிறைய
சாமியார்கள், தாங்கள் எப்பொழுதும் பேரானந்த நிலையில் இருப்பதாகவும், சமாதி நிலையில் இருப்பதாகவும்
சொல்வது எந்த அளவிற்கு உண்மை?

ஒரு எண்டமூரி வீரேந்திர நாத்தின் புதினத்தில், கதா நாயகன், தன்னை ஒரு எதிர்காலத்தை அறிதல்(foresight)
என்ற சக்தியுள்ள மனிதனாக,
வெளி உலகத்திற்கு காட்டிக்கொள்வான். இந்த அநுபவம் நிலழும் போது, நடக்கும் நிகழ்வுகளுக்கு
தான் பொருப்பல்ல என்பது போன்ற ஒரு தோற்றத்தை பொதுமக்கள் மத்தியில் உருவாக்குவான். இந்த தோற்றத்தை
உருவாக்கிய பின், சில கொலைகளைச் செய்துவிட்டு, அதற்கும் தனக்கும் தொடர்பில்லை என்று சட்டத்தின்
ஒத்துழைப்போடு, வெளியில் சுதந்திரமாய்த் திரிவான். இந்த சாமியார்கள், எண்டமூரியின் கதையில் வரும், கதா நாயகர்கள் போன்றவர்கள் என்று கூறுவதற்கு எது தடையாக
இருக்கிறது?


இங்கே இன்னொரு விசயத்தையும் பதிவு செய்ய வேண்டும். தங்களை கடவுளின் அவதாரங்களாகவும், தேவ
தூதர்களாவும் அறிவித்துக்கொண்டு திரியும் எத்தனை சாமியார்களைச் சந்திக்கிறோம். நிச்சயம் ம்யூஸ் அவர்கள்
இங்கெ சிலரின் பெயர்களைக் கொடுக்கக்கூடும். இப்படி மனப்பிறழ்ச்சி அடைந்தவர்களுக்கு, தக்க வைத்தியம்
செய்து, தெளிவடைய வைப்பது அவசியமல்லவா?

//தாங்கள் மன நோயாளிகள் என்பது தெரியாமலேயே இந்த ஆன்மிகவாதிகள் இறந்து போய்விட்டார்களா என்பது மிகப்பெரிய கேள்வியாகவே எனக்கு தொக்கி நிற்கிறது.//

இன்னும் கனமாகிறது எனது இந்த கேள்வி.

1:45 PM  
Blogger புதுமை விரும்பி said...

மகேந்திரன்,
// புத்த//புத்தர், தன் வயப்படுத்த அல்லது ஆக்கிரமிப்பு செய்ய விரும்புவதும், அதை// இதில் புத்தரின் தத்துவங்க்ள்தான் சொல்லப் பட்டனவே அன்றி புத்தரில்லை.//

மகேந்திரனின்
விளக்கம் தொடர்பான செய்தி, இணையத்தில் கிடைத்தது. எல்லோரின் பார்வைக்காக...

"If you meet the Buddha on the way, kill him"
Osho on a much-misunderstood Buddhist saying
This is a zen way of saying something of immense value. It is a zen saying: "If you meet the Buddha on the way, kill him!" But Buddha is dead, has been dead for twenty-five centuries. Where can you meet him, on what way? And how can you...can you kill one who has been dead for twenty-five centuries?

It has a totally different meaning: it is a message to the disciple who loves Buddha, who loves Buddha so much that there is a possibility that Buddha may become his last barrier - because of his love, because he is a disciple, because he is a sannyasin, because he meditates, goes deeper and deeper into his being and will feel more and more grateful towards Buddha. And at the last moment even the master has to be left behind...at the last moment. At the very last you have to say good-bye to the master too. This is something inner, remember, it has nothing to do with the outer. This is something inner. All thoughts disapper, then only one thought remains - the thought of your master.

And it is very difficult to say good-bye. You owe so much to the master - he has been your source, your transformation; he has been your nourishment, your life; he has brought you along the long way. And now to say good-bye to the person who has been your guide, your friend? An now to say good-bye to him who has been a constant companion in the dark night of the soul; when the dawn is coming to say good-bye to him? It seems impossible! And the disciple, at the last moment, starts clinging to the idea of the master.

But that becomes the barrier. The master will himself give him a push, and if you don't listen to the push then he will give you a kick in the pants! - because you have to go, you have to go into the unknown.

The master himself says - i say to you - 'If you meet me on the way, kill me!' But what way is implied? You will not meet me on M.G.Road! What way? If you go inwards, on the inner way, on the inward journey, at the last check-post i am waiting for you.

And it will be difficult to say good-bye, it has always been difficult to say good-bye. Hence the statement to just kill the master, so there is no need even to say good-bye; kill the master so there is no need to look back; kill the master so you can now be left totally alone, with not even the shadow of the master with you. And this is done in great gratefulness, in great gratitude.

First become a sannyasin, a disciple, start moving inwards, only then can you meet me. You have not yet even met me outwardly, how can you meet me inwardly? You have not yet come closer to me, how can you be in a state of clinging to me? You are far away, you are distant, you are avoiding. You have not even said good morning so what is the point of saying good-bye?

First become a disciple. Move on the inward way, let me help you to the ultimate point, and then certainly if you meet me on the inner way, kill me.

But it happens that people understand only according to their own idea. You have not understood this Zen koan. And remember again, it is not that the disciple kills the master in anger. He kills him in gratitude. In fact he kills him because the master orders him to kill him; he simply followed the commandment - crying, weeping, with tears in his eyes. And even when he was killed, the gratitude remains.
[......]
The masters who were telling their disciples, 'if you meet the buddha on the way, kill him!' were worshipping Buddha every day, morning, afternoon, evening. They were prostrating themselves before the Buddha. And many times it had been asked by the disciples: 'Sir, you say 'if you meet the Buddha on the way, kill him!' -then why do you worship?'

And he would say: 'Because he is the only master in the world...Buddha is the only master in the world who helps you to get rid of him too, hence the gratitude.'

You have not understood the statement. These statements have a very different meaning than is apparent. To understand these statements you will have to become a little grown-up. As far as these statements are concerned, you are like children.

If you meet me on the way, kill me. But first please, be on the way - where i am waiting for you, to be killed by you. But you don't know another thing which is not really ever said. This statement is only half of it; the other half, the first half is missing. Before you can ever kill me, i will kill you. That's how you will enter the way!

1:54 PM  
Blogger புதுமை விரும்பி said...

தெகா,

உறங்கும் நேரம் வந்துவிட்டது. உங்கள் கேள்விகளுக்கு, கூடிய விரைவில் பதிலளிக்கிறேன். நிச்சயம் உங்கள்
பதிவிலும், எனது விளக்கத்தைச் சேர்ப்பிக்கிறேன்.

2:01 PM  
Blogger புதுமை விரும்பி said...

பிரியமான ம்யூஸ்,

வழக்கம்போல, தலைப்பிற்கு பொருத்தமான, புதிய தகவல்களோடு வந்திருக்கிறீர்கள். நன்றி.

1994 ம் ஆண்டிற்கான, நோபெல் பரிசு பெற்ற நாஷ் கூட, paranoid schizophrenia என்ற நோயால் பாதிக்கப்பட்டவர் என்பது
ஆச்சரியகரமான உண்மை. அதோடு, மனப்பிறழ்ச்சி உள்ளவர், எல்லா நேரங்களிலும், அசாதரணமாக நடந்து
கொள்வார் என்ற அவசியமில்லை. மற்ற நேரங்களில் மிகத் தெளிவான பார்வையுடையவராய் இருப்பது
சாதாரணமானதே.

இருந்தபோதிலும், உங்கள் கருத்துக்கள் என்னை நிறைய home-work செய்யும் நிலைக்குத் தள்ளியிருக்கின்றன. மீண்டும்
அதிகப்படியான விசயங்களோடு உங்களைச் சந்திக்கின்றேன்

11:09 PM  
Blogger Muse (# 01429798200730556938) said...

அன்பிற்குரிய புதுமை விரும்பி அவர்களே,

சரியான தடத்தில் விவாதம் போகின்றது. ஸந்தோஷம்.

இது சம்பந்தமாக நானும் சில விஷயங்களைப் படித்துக்கொண்டு (நேரம் கிடைக்கும்போது) வருகிறேன்.

11:29 PM  
Blogger புதுமை விரும்பி said...

// சரி அவரவர் Schizophrenic ஆகவே இருந்துவிட்டுப் போகட்டும்...அவர் சொல்லிய கருத்துக்கள் வலைமை குறைந்துவிடவா போகிறது அதனால்..?//

நிச்சயமாக.

ஒரு கருத்தை நான் சொல்வதற்கும், தேவதூதன் என்ற பெயரில் வந்து ஒருவர் சொல்வதற்கும் நிச்சயமாக அதிக
வித்தியாசங்கள் இருக்கின்றன. நமது ஈகோ, நமக்குச் சமமான தகுதியுடையவர் சொல்லும் சரியான
கருத்துக்களைக் கூட வெளிப்படையாக ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. நீங்கள் சொல்வது சரி தான்; ஆனால், ....
என்று பூசி மெழுகும் தனமே எப்பொழுதும் வெளிப்படுகிறது. அதனால், நிச்சயம் சொல்பவரைப் பொருத்து
ஒரேமாதிரியான கருத்துக்கள் வலிமையடைவதும், கண்டுகொள்ளப்படாமல் விடுவதும் நடக்கின்றன.

12:03 AM  
Blogger Thekkikattan|தெகா said...

புதுமை விரும்பி, தாங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா? அதிலிருந்து பேரனந்த நிலை எப்படி இருக்கலாம் என்பதனை அறிந்து கொள்ளவே (ஒரு சாமனியனுக்கு அது மட்டுமே சாத்தியம் - அதனையும் அனுபவித்து பார்த்திருந்தால் தான் அதனைப் பற்றியும் பேசமுடியும்), இப்படி ஒரு கேள்வியை கேட்டு வைத்திருக்கிறேன். தவறாக எண்ண வேண்டாம்.

12:34 PM  
Blogger Thekkikattan|தெகா said...

//எனது கேள்வியே, நீங்கள் பேரானந்த நிலை என்பதை எப்படி வரையறுக்கிறீர்கள் என்பதே. நிறைய
சாமியார்கள், தாங்கள் எப்பொழுதும் பேரானந்த நிலையில் இருப்பதாகவும், சமாதி நிலையில் இருப்பதாகவும்
சொல்வது எந்த அளவிற்கு உண்மை? //

புதுமை விரும்பி, தாங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா? அதிலிருந்து பேரனந்த நிலை எப்படி இருக்கலாம் என்பதனை அறிந்து கொள்ளவே (ஒரு சாமனியனுக்கு அது மட்டுமே சாத்தியம் - அதனையும் அனுபவித்து பார்த்திருந்தால் தான் அதனைப் பற்றியும் பேசமுடியும்), இப்படி ஒரு கேள்வியை கேட்டு வைத்திருக்கிறேன். தவறாக எண்ண வேண்டாம்.

அப்படி இல்லையெனில் ஏதாவது ஒரு நல்ல மனத்தை தொட்ட பாடல் கேக்கும் பொழுது தாங்களை அறியாமல் மயிர் கூச்சொரிந்ததுண்டா...? ஏதாவது ஒரு சூழல் தன்னை மறந்த நிலையில் அத்துடனே லயித்து இருந்த அனுபவமாவது பெற்றீரிக்கிறீர்களா, இல்லையெனில்... ஹும்... வாழ்வை ஈசியாக எடுத்துக் கொண்டு மீண்டும் ஒரு முறை நட்சத்திரம் நிரம்பிய இரவு வானத்தை படித்ததை நினைவுக்கு கொண்டுவர முயற்சிக்கமால், Just be there and be it! Without any thoughts mixing in. Can you experience a momentum without any thought?

Before we question anyone about the fact, at least we should try to walk the path and experience what they were trying to say. Do you practice meditation at any point of your life? Do you calm down your body with regular stretches of Yoga? Are you experiencing any of it in everyday life? Let us do it, for X number of years before we diagnose someone with western terminology throguh an psycho-analysis.

In fact, calming down our mind and body is not detrimental to our mental and physical health. Therefore, try to catch up with that experience by walking into that path. Then let us discuss about this complicated subject.

If you are already practicing those, then let me know. And we would not be discussing the importance of those arts of living technique. Anyway, share your thoughts with me. Let me learn, I hope I have not expressed my view points in any harsh way, if I do please take it lightly.

12:48 PM  
Blogger சுவாமி said...

புதுமை விரும்பி,
நீங்கள் யாரையும் காயப்படுத்துவதற்காக இதை கேட்கவில்லை என்பதை நம்புகிறேன். அதே போல், உங்கள் கருத்தை தவறென்று சொல்பவர்க்களுக்கு special ஆக கடமை எதுவும் இருப்பதாகவும் நினைக்கவில்லை! ஓஷொ பற்றி எதுவும் தெரியாது, ஆனால் இராமகிருஷ்ணரை பற்றி படித்திருக்கிறேன். I wish I was born in his times, just to take a look at him to see if he really was the saint he was made out to be. My guess; he was. சில காரணங்களுக்காக. முதலாவது, his dedication to the concept of God. கடவுளிடம் எவ்வளவு பாசம் இருந்தால், ஒரு முஸ்லீமாகவும் கிருஸ்த்துவனாகவும் அந்த காலத்தில், ஒரு பிராமணனால், practise செய்ய மனது வரும்? இரண்டு; இராமகிருஷ்ணர் அவர் மற்றும் தனியாக பிதற்றிக் கொண்டிருந்தால், maybe a schizophrenic. அவரை சந்தேகித்து, பின் அவரை முழுதாக ஏற்ற சீடர்களின் தரத்தை பாருங்கள் (விவேகானந்தர், M, Keshab); hardly qualifies for a schizophrenic. Incarnation or not, he was inspiring, and he made a difference. இப்போது யாரும் அப்படி இல்லை என்பது நமக்குதான் குறை.

10:37 PM  
Blogger புதுமை விரும்பி said...

வருகைக்கு நன்றி சல்மான் அவர்களே,

//கேள்விகள் கேட்பதை பெரும்பாலான தத்துவங்கள் விரும்புவதில்லை என்பதை நிரூபிக்கும் வாதங்கள்.//

மிக உண்மையான வார்ததைகள்.

12:37 AM  
Blogger புதுமை விரும்பி said...

ஸ்வாமி,

// I wish I was born in his times, just to take a look at him to see if he really was the saint he was made out to be.//


இதே கருத்துக்கள் எனக்கும் இருந்தன. எனக்கு நன்றாக விபரம் தெரியும் முன்னரே, சிறந்த ஆன்மிக வாதிகள் பலரை இந்தியா இழந்துவிட்டிருந்தது. உதாராணமாக, ஓசோ, ரமண மகரிசி, ஜி. கிருஷ்ணமூர்த்தி போன்றவர்களைக் குறிப்பிடலாம். அடடா! தவறான நேரத்தில் பிறந்து விட்டோமே இனி நம்மை கரை சேர்ப்பது யார்? என்று நொந்து போனது கூட உண்டு. எல்லோமே U. G. கிருஷ்ண மூர்த்தியின் அறிமுகம் கிடைக்கும் வரை தான். அவரின் அறிமுகம் தான் இந்த ஆன்மிக அநுபவங்கள் பற்றிய இன்னொரு பார்வையை எனக்குக் கொடுத்தது. தெகாவிற்கான பதிலில், இது பற்றி விரிவாக எழுத உள்ளேன். மறுபடியும் வந்து பாருங்கள். உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

4:51 AM  
Blogger Muse (# 01429798200730556938) said...

என் அன்பு புதுமைவிரும்பி,

இங்கே பின்னூட்டமிட்டவர்கள் (ம்யூஸையும் சேர்த்து) யாரும் இதுவரை மனப்பிறழ்ச்சி இவர்களுக்கு இருந்திருக்கலாம் என்பதற்கான கருத்துக்களை, ஆதாரங்களை முன்வைக்காமல் இருக்கிறார்கள்.

என் கைவசம் தற்போது இவர்கள் எல்லாம் இப்படி இல்லை என்பதற்குத்தான் கருத்துக்கள் உள்ளன.

நேசக்குமார் வஹி பற்றிய ஒரு மானுடப்பார்வை என்கிற மொழிபெயர்ப்பில் சில கருத்துக்களை தெரிவித்திருந்தார். அதையாவது யாராவது பயன்படுத்தலாம்.

4:56 AM  
Blogger புதுமை விரும்பி said...

அன்பு ம்யூஸ்,

//இங்கே பின்னூட்டமிட்டவர்கள் (ம்யூஸையும் சேர்த்து) யாரும் இதுவரை மனப்பிறழ்ச்சி இவர்களுக்கு இருந்திருக்கலாம் என்பதற்கான கருத்துக்களை, ஆதாரங்களை முன்வைக்காமல் இருக்கிறார்கள்.//

தெகாவும் இதே கருத்துள்ள இடுகை ஒன்றை சமீபத்தில் பதிந்துள்ளார் என்பதை தாங்கள் அறிவீர்கள் என்று நினைக்கிறேன். கூடிய விரைவில் மாற்றுக்கருத்துக்கள் கிடைக்கும் என்று நினைக்கிறேன். யு. ஜி. கிருஷ்ண மூர்த்தியின் கருத்துக்கள், enlightenment பற்றிய இன்னொரு கோரமான பக்கத்தைக் காட்டுகின்றன. அவரது Mystique of Enlightenment என்ற படைப்பைப் படித்துக்கொண்டிருக்கிறேன். கூடிய விரைவில், இந்த விசயங்கள் பற்றிய புரிதல் நடக்கும் என்று நம்புகின்றேன். முடிந்தால், உங்கள் யு. ஜி. கிருஷ்ண மூர்த்தி பற்றிய கருத்துக்களைப் பதிவு செய்யுங்களேன். மீண்டும் வருகைக்கு நன்றி.

5:14 AM  
Blogger புதுமை விரும்பி said...

தெகா அவர்களே,

நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு இதோ விரிவான பதில்.

நான் சிறு வயதிலிருந்தே ஆன்மிக விசயங்களில் மிகுந்த ஈடுபாட்டோடு இருந்தேன். அதற்கு முக்கிய
காரணம், நான் என் 18ம் வயதில் முழுவதுமாய் படித்திருந்த மூர்த்தியின் மனோசக்தி என்ற புத்தகமாகும்.
எனது பழைய புத்தகங்களின் நடுவே இந்த புத்தகத்திலிருந்து நான் எடுத்த குறிப்புகள் இன்னும்
இருக்கின்றன. அப்பொழுதே எனக்கு, கிபனடிசம், மெஸ்மெரிசம் போன்ற விசயங்கள் மிகவும் புரிந்துபோன
விசயங்கள். அதன் பின், நான் படித்த ஆன்மிகவாதிகளாக,இராமகிருஷ்ண பரமகம்சர், விவேகானந்தர்,
ரமண மகரிஷி, ஓசோ, கிருஷ்ணமூர்த்தி ஆகியவர்களைச் சொல்லலாம். நான் கடைசியாக, சந்தித்த
ஆன்மிகவாதியாக யு. ஜி. கிருஷ்ண மூர்த்தியைச் சொல்லலாம். இவரது, சில கருத்துக்கள், ஆன்மிக
அனுபவங்கள் பற்றிய எனது எண்ணங்களை ஒரு கலக்கு கலக்கியது ஒரு மறுக்க முடியாத உண்மை. அவரது Mystique of Enlightenment என்ற
படைப்பை நீங்களும் ஒரு முறை படித்துப் பாருங்களேன்.

1:25 PM  
Blogger வஜ்ரா said...

//
அந்த காலத்தில், ஒரு பிராமணனால்
//

விவேகானந்தர் ஒரு பிராமணர் அல்ல..! இயர் பெயர் நரேஷ், க்ஷத்திரிய வம்சாவழி வந்தவர்.

1:37 PM  
Blogger Thekkikattan|தெகா said...

//அடுத்த பின்னூட்டத்தில் இன்னும் பதில் தொடர்கிறது.//

தாங்களின் அடுத்தப் பின்னூட்டத்தையும் படித்து விட்டு நமது புரிதல்களை பகிர்ந்து கொள்வோம், புதுமை விரும்பி. காத்திருக்கிறேன், தொடருங்கள்...

1:50 PM  
Blogger புதுமை விரும்பி said...

தெகா, இது யு. ஜி. கிருஷ்ணமூர்த்தியின் ஆன்மிக வாழ்க்கை அநுபவத்தின் சில பகுதிகள்.

T.G.Krishnamurti (U.G.'s grandfather) was meditating one day when his great granddaughter, a little baby, started to cry for some reason. The child's wailing interrupted the old man's meditation. This infuriated him. He came down and thrashed the child brutally. 'There must be something funny about the whole business of meditation,' said U.G. to himself, as he helplessly witnessed his grandfather savaging his own great granddaughter: 'Their lives are shallow and empty. They talk marvelously. But there is a neurotic fear in their lives. Whatever they preach does not seem to operate in their lives. Why?' This was the beginning of his search, a search that lasted till his forty- ninth year.

U.G. had not experienced sex but he says that even then he seemed to know what the sex experience was. Since his aim in those days was to become an ascetic or a monk, he did not entertain the thought of marriage. He saw for himself that though he thought of gods and goddesses he had wet dreams. He questioned why he felt guilty about this when he had no control over it. His meditation, his discipline and his study of holy books had not helped him with this issue. Even his staying away from salt, chillies and all kinds of spices had not worked.

U.G.'s Yoga Master, Sivananda, was startled when U.G. caught him devouring some hot pickles behind closed doors. 'How can this man deceive himself and others, pretending to be one thing, while doing another. He has denied himself everything in the hope of getting something but he cannot control himself. He is a hypocrite. This kind of life is not for me.' So U.G. gave up his Yoga practice and left Sivananda.

Between the ages of fourteen and twenty-one, U.G. undertook all kinds of spiritual exercises. He practiced all the austerities. U.G. recited Shiva mantra three thousand times a day, every day, everywhere he went.


While practicing Yoga and meditation, U.G. had every kind of experience talked about in the sacred books--samadhi, super samadhi, nirvikalpa samadhi. 'Thought can create any experience you want--bliss, beatitude, ecstasy, melting away into nothingness--all those experiences. But this can't be the thing, because I have remained the same person, mechanically doing these things. This is not leading me anywhere,' thought U.G. to himself.


தெகா அவர்களே,

இப்பொழுது சொல்லுங்கள். நீங்கள் சொலவது மாதிரி, நானும் ஆன்மிக அநுபவங்களுக்கான எல்லா முயற்சிகளையும்
செய்துவிட்டு, எனது 40வது வயதில் எல்லாமே பொய் என்று உணர்வேனானால், எனது நிலை எப்படி இருக்கும்?

1:53 PM  
Blogger புதுமை விரும்பி said...

//விவேகானந்தர் ஒரு பிராமணர் அல்ல..! இயர் பெயர் நரேஷ், க்ஷத்திரிய வம்சாவழி வந்தவர். //

தகவலுக்கு நன்றி வஜ்ரா அவர்களே.

2:14 PM  
Blogger Thekkikattan|தெகா said...

//நீங்கள் சொலவது மாதிரி, நானும் ஆன்மிக அநுபவங்களுக்கான எல்லா முயற்சிகளையும்
செய்துவிட்டு, எனது 40வது வயதில் எல்லாமே பொய் என்று உணர்வேனானால், எனது நிலை எப்படி இருக்கும்?//

புதுமை விரும்பி, தாங்கள் கூறுவதில் உண்மைகள் இருந்தாலும், நம்மால் பட்டுணர முடியாத ஒரு மூன்றாவது entity மூலமாக அனுபவ பட்ட கூற்றை ஏன் தாங்கள் உண்மையென பெற்றுக்கொள்ள வேண்டும். அது திரு U.G அவர்களின் உழைப்பால் அவருக்கென எழுந்த கேள்விகளை தேடிக் கிடைத்த விடைதான், புத்தகமாக நானும், நீங்களும் இன்று படிப்பது இல்லையா.

முதலில் நாம் எதுவை காண இந்த யோகா, தியானமெல்லாம் செய்கிறொம்? யாரயாவது உருவமாக காணும் பொருட்டா அல்லது நமக்கு ஒரு அமைதியான வாழ்வுச் சூழல் கிடைக்க வேணும் என்ற ஆவவின் பொருட்டா?

அவ்வாறு தீவிரமாக நாம் எதனையோ அடைய வேண்டும் என்ற உந்துதலில் இல்லாத ஒன்றை கால நிர்ணயப்படுத்தி, அடைய எத்தனிக்கும் பொழுதுதான் இந்த Frustratration and dissappointments வருகிறது, அவ்வாறு வருவதும் இயல்பு தானே. இந்த இரு Emotional Upheavels எதனால் வருகிறது, முதலில், ஏதோ யாரோ எழுதி வைத்த அனுபவத்தை படித்தோ அல்லது கேட்டோ அதன் படி தனக்கும் அனுபவம் கிட்ட வேண்டும்மென்ற ஆசையல்லாவ அந்த இரு இமோஷனல் தாக்கங்களையும் எதிர்கொள்ள வைக்கிறது.

U.Gக்கு குழந்தையின் அழுகையை நிப்பாட்டுவதைக்காட்டிலும் எதனையோ அவசர கதியில் கண்டுபிடிக்க எத்தனித்து தியானத்தில் அமர்ந்திருப்பது போன்ற ஒரு பிரம்மையை எனக்கு ஏற்படுத்தியது. அப்படியெனில் அவர் புரிந்து கொண்ட "சுயமறிதல்" கோட்பாடு எதனையோ முன்னுருத்தி செயல்பட்டதாக அல்லவா அமைகிறது.

சுயத்தேடல் சுவாமி மகரிஷி கூறியபடி, அங்கு தேடுவதற்கு ஒன்றேமெ அற்ற நிலையல்லவா, ஏனெனில் சுயம் என்பது... அன்பின் சொரூபம் தானே, எதனிடத்தும்...

தொடர்வோம்...

2:26 PM  
Blogger Thekkikattan|தெகா said...

//T.G.Krishnamurti (U.G.'s grandfather) was meditating one day when his great granddaughter, a little baby, started to cry for some reason. The child's wailing interrupted the old man's meditation. This infuriated him. //

*******U.Gக்கு குழந்தையின் அழுகையை நிப்பாட்டுவதைக்காட்டிலும் எதனையோ அவசர கதியில்********

அது திரு U.G அவர்களின் தாத்தா திரு TGK - குழந்தையின் மேல் கோபம் காட்டியதை தவறுதலாக திரு U.G காண்பித்தாக எழுதி விட்டேன்... திருத்திப் படிக்கவும்... நன்றி..

2:44 PM  
Blogger புதுமை விரும்பி said...

வஜ்ரா,

ஸ்வாமி அவர்கள், இராமகிருஷ்ணரையே பிராமணர் என்று குறிப்பிடுகிறார். விவேகானந்தரை அல்ல.

வருகைக்கும், விவேகானந்தர் பற்றிய தகவலுக்கும் நன்றி.

2:47 PM  
Blogger புதுமை விரும்பி said...

தெகா,

உங்களின் கருத்துக்களுக்கு நன்றி.

//
*******U.Gக்கு குழந்தையின் அழுகையை நிப்பாட்டுவதைக்காட்டிலும் எதனையோ அவசர கதியில்********

அது திரு U.G அவர்களின் தாத்தா திரு TGK - குழந்தையின் மேல் கோபம் காட்டியதை தவறுதலாக திரு U.G காண்பித்தாக எழுதி விட்டேன்... திருத்திப் படிக்கவும்...//

நானே, இது பற்றி உங்களிடம் சொல்லலாம் என்று இருந்தேன்.

மீண்டும், தொடர்வோம்.

2:51 PM  
Blogger சிறில் அலெக்ஸ் said...

நல்ல விவாதம்.. பல கிறித்துவப் புனிதர்களுக்கும் இந்த நிலமை வந்துள்ளது. கடவுளுக்காக பைத்தியமானேன் என ஒருவர் எழுதியிருக்கிறார்.

பரவசநிலைக்கும் பைத்திய நிலைக்கும் வெளியில் பாக்க நிறைய வித்தியாசம் இருக்காது. இன்றும் ஆடையில்லாமல் சுத்திக்கொண்டிருக்கும் சிலரை ரிஷி என்றும், பைத்தியமென்றும் ஒரே நேரம் கூறக் காணலாம்.

பரமஹம்சரும் ஓஷோவும் முற்றிலும் அந்த பைத்திய நிலையிலேயே இருந்திருந்தால் இந்த சந்தேகத்தை எழுப்ப இன்னும் இடம் இருக்கிறது. ஆனால் அவர்கள் இருவருமே அவர்களின் அந்த 'கிறுக்கத்தனமான' இயல்பையும் தாண்டி உயர்ந்த கருத்துக்களை உலகிற்குத் தந்தார்கள் என்பதை மறுக்க முடியாதே.

3:10 PM  
Blogger Thekkikattan|தெகா said...

//U.G.'s Yoga Master, Sivananda, was startled when U.G. caught him devouring some hot pickles behind closed doors. 'How can this man deceive himself and others, pretending to be one thing, while doing another.//

இங்குதான் புதுமை விரும்பி "நாக்கும், சுவையும்" பெற்ற நம்மை போன்ற மனிதர்களையே ஒரு நிலையில் நிறுத்தி, அவர்கள் கண்டுணர்ந்த ஒரு விசயம் உதாரணமாக அதீக தித்திப்பும், காரமும் நல்ல சிந்தனைக்கு ஓவ்வாது என்று கூறியிருக்கலாம். அதுவும் விஞ்ஞான பூர்வமாக உண்மையாக இருக்கலாம். அப்படி ஒருவர் கூறிவிட்டு அவரே அதனை உண்கிறாரே என்று ஏன் நாம் மனம் வெம்பி போக வேண்டும்.

ஒரு மருத்துவர் புகைபிடிப்பது நலம் பயக்கா என்று நம்மிடம் கூறிவிட்டு அவர் புகைபிடித்தால் நாம் என்ன செய்கிறோம். ஏன், அது போன்று சுவாமி சிவானந்தா (அப்படியே செய்திருந்தாலும்) செய்திருந்தாலும் எடுத்துக் கொள்ள முடிவதில்லை. உடல் என்று வந்து விட்டல் தினமும் நடக்கும் செயல்கள் நடந்து தானே ஆக வேண்டும்.

ஏன் நாம் அவர்களை தெய்வமாக்கி, திரைமறைவிற்கு அனுப்பி இது போன்ற செயல்களை செய்ய நாமே காரணமாக இருக்க வேண்டும். So, what we have is the "conditioned expectation" on those holy people, அப்படித்தானே? இமெஷ் என்று வந்து விட்டால் நம்மால் நார்மலாக இருக்க முடியுமா?

சுவாமி சிவானந்தவுடனான U.G அனுபவம் படிக்கும் பொழுது, அவருக்கே நெருடல் கொடுக்கும்படி புறச் சூழல் எப்பொழுதும் அமைந்திருக்கிறது நம் எல்லோரைச் சுற்றிலும் என்பது விளங்குகிறது. Is that mean less noticed, is lot more closer to ever be blissful and truthful to him/herself?

இது எனக்கு ஒரு நல்ல புரிதல்... :-)

3:14 PM  
Blogger Thekkikattan|தெகா said...

நான் இது போன்ற சிந்தான வாதிகளை "மனிதப் பரிணமிகள்" என்றழைத்ததை இப்படியாக கொண்டால் என்ன புதுமை விரும்பி, நம்மால் எட்ட முடியாத பரிமாணங்கள் கூட அவர்களுக்கு கைப்பெற்று, அது எந்த முறையினாலும் இருக்கலாம். Mindக்கு ஒரு பவர் உண்டு என்பதில் உங்களுக்கு எந்த ஆட்சோபமும் இல்லை என்றே கருதுகிறேன்.

அப்படியெனில், அவர்கள் மனத்தை குவித்து நம்மால் எட்டமுடியாத இலக்கை அடைய வாய்ப்புகள் உண்டல்லவா? அவர்கள் கொடுக்கும் அணுகுமுறை அவர்களுக்கு work out ஆனாது என்பதனால் நமக்கும் ஆக வேண்டுமென்ற கட்டாயம் கிடையாதே.

எனது சிந்தனையில் மனிதர்களின் அடுத்த பரிணாமம் என்றால் அது மூளையின், நமது சிந்தனையின் அதீத வளர்ச்சிதான். அது இயற்கையாகவே வசப்படும், இப்பொழுது சில நம் கூட வாழ்ந்த மனிதர்களுக்கு வசப்பட்டது போலவே... நமக்கு காலப்போக்கில்.

ஆனால், இந்த human proto-types என்பவர்கள் நம்முடன் வாழ்ந்த ஒரு contemporary homo sapiensதானே. அதனால், மற்ற சிறு அவர்களின் திரு விளையாடல்களையெல்லாம் மறந்து விடுவோம். மனத்தின் ஆற்றலை ஆராய்வோம், என்பதே எனது நிலை.

3:34 PM  
Blogger சுவாமி said...

என் சார்பில் விளக்கமளித்தற்கு நன்றி. இராமகிருஷ்ணரைதான் குறிப்பிட்டேன். UG யின் எழுத்தில் அல்லது உங்கள் interpretationல், எனக்கு மாற்றாக தோன்றுவது:
//U.G. had every kind of experience talked about in the sacred books--samadhi, super samadhi, nirvikalpa samadhi// பிறர் அநுபவங்களை schizophrenia வின் விளைவோ என்று பார்க்கும் (தவறில்லை) அதே discriminating mind, UG சமாதி அடைந்தார் என்று எப்படி சொல்ல முடியும். கால்வாசி வந்துவிட்டு இதுதான் சமாதி என்று அவர் நினைத்திருக்கலாமே என்று கேட்காதா? யாருக்கு தெரியும் சமாதி இதுதான் என்று? (அது என்னங்க super samadhi?!!).
//'Thought can create any experience you want// உண்மை. But does it follow that all experiences necessarily come by induced thoughts? Thought can make you feel you are hungry when you are not. Doesn't mean everyone who feels hungry are imagining it, right?

வஜ்ராவிற்க்கு ஒரு correction. விவேகானந்தர் பெயர் நரேஷ் அல்ல. நரேந்திரநாத் தத்தா. You are not doing justice to your label, Vajra!

7:27 PM  
Blogger புதுமை விரும்பி said...

வருகைக்கு நன்றி அலெக்ஸ்,

//பல கிறித்துவப் புனிதர்களுக்கும் இந்த நிலமை வந்துள்ளது. கடவுளுக்காக பைத்தியமானேன் என ஒருவர் எழுதியிருக்கிறார்.//

நிச்சயம் அவரைப் பற்றிய விரிவான குறிப்புகள், இங்கு விவாதங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

//பரமஹம்சரும் ஓஷோவும் முற்றிலும் அந்த பைத்திய நிலையிலேயே இருந்திருந்தால் இந்த சந்தேகத்தை எழுப்ப இன்னும் இடம் இருக்கிறது. ஆனால் அவர்கள் இருவருமே அவர்களின் அந்த 'கிறுக்கத்தனமான' இயல்பையும் தாண்டி உயர்ந்த கருத்துக்களை உலகிற்குத் தந்தார்கள் என்பதை மறுக்க முடியாதே.//

இன்றைய அறிவியலில், இந்த நிலைபற்றி ஏதேனும், விளக்கம் கிடைக்கிறதா என்று தேடிக்கொண்டிருக்கிறேன்.

1:06 AM  
Blogger புதுமை விரும்பி said...

தெகா,

//சுவாமி சிவானந்தவுடனான U.G அனுபவம் படிக்கும் பொழுது, அவருக்கே நெருடல் கொடுக்கும்படி புறச் சூழல் எப்பொழுதும் அமைந்திருக்கிறது நம் எல்லோரைச் சுற்றிலும் என்பது விளங்குகிறது. Is that mean less noticed, is lot more closer to ever be blissful and truthful to him/herself?

இது எனக்கு ஒரு நல்ல புரிதல்... :-)//

அதனால் தானோ என்னவோ, பிரசித்தி பெற்ற மனிதர்கள் சில காலம் இமயமலைக்குள் அல்லது கண்காணாத ஒரு தீவில் வாழ்ந்துவிட்டு வர விரும்புகிறார்கள் போலும்.

1:38 AM  
Blogger Muse (# 01429798200730556938) said...

நானும் ஆன்மிக அநுபவங்களுக்கான எல்லா முயற்சிகளையும்
செய்துவிட்டு, எனது 40வது வயதில் எல்லாமே பொய் என்று உணர்வேனானால், எனது நிலை எப்படி இருக்கும்?


இந்த பயம் எல்லா ஆன்மீகர்களுக்கும் உள்ளதுதான். அபிராமி பட்டரே தனது ஒரு பாடலில் அம்பாளை நோக்கி இதே கேள்வியை முன்வைக்கிறார். "நீ இருக்கிறாய் என்கிற நம்பிக்கையில் உலக சுகங்களை துறந்தேன், நீ உன் இருப்பை உணர்த்தாவிட்டால் இக உலகமும், புற உலகமும் இழந்தவானாவேனே, அதனால் எனக்கு இறை அனுபவம் தா" என்கிற வகையில் அந்த பாடல் போகும்.

இந்த ஆன்மீகப்பாதையில் புகுந்து வாழ்வதற்கு மிகுந்த தைரியம் வேண்டும். ஓஷோ "முதலில் குதி, அப்புறம் யோசிக்கலாம்" என்பார். ஆனால் உண்மையில் எதிர்பார்ப்புகள் பற்றி யோசனை இல்லாதவர்கள்தான் குதிக்கமுடியும். எதிர்பார்ப்புகள் இல்லாதபோது குதித்தல் தானாக நடைபெற்றுவிடும். அந்த ஆரம்பமே முடிவு.

இந்த டேஞ்சரை புரிந்துகொண்டவர்கள் இந்த ஆன்மீகம் என்கிற விஷயத்திலிருந்து முற்றிலுமாக விலகி பொருள்முதல்வாதிகளாகின்றனர். ஏனையோர் குற்ற உணர்வினராகவோ, ஏமாற்றுக்காரராகவோ மாறி விடுகின்றனர். ஒரு சிலர் குதித்து அமுதம் அருந்துகின்றனர்.

இது ஒரு பக்கம் இருந்த போதிலும், ஆன்மீகம் என்பதற்காக முற்றிலுமாக இக சுகங்களை விலக்கவேண்டியதில்லை என்று ஹிந்து மதங்கள் கூறுகின்றன. அதனால்தான் ப்ரஹ்மச்சரியம், க்ரஹஸ்தம், வானப்ரஸ்தம், ஸன்யாஸம் என்று வைத்தார்கள். உலக இன்பங்களை அனுபவித்து, புரிந்து பின் இறுதியாய் ஸன்யாஸம் வந்தடை என்பது நோக்கம். ஆயின் ஒருவர் இந்த படியில் உள்ளவற்றை அப்படியே பின்பற்றித்தான் ஸன்யாஸி ஆகவேண்டிய கட்டாயமும் இல்லை. ஒருவருக்கு ப்ரம்மச்சரியத்திலிருக்கும்போதே துறவிற்கான உந்துதல் இருக்குமானால் அடுத்தபடியாக ஸன்யாஸம் பெறலாம். ஸன்யாஸம் வாங்கிக்கொண்டவர்கள் திருமணம் செய்து மிக உயர்ந்த குழந்தைகளை பெற்ற சம்பவங்களும் பரத கண்டத்தில் உண்டு. எனவே, இந்த நான்கு படிகளையும் ஒரு மனிதனிடத்தில் நடைபெறும் இயற்கையான நடவடிக்கைகள் என்றும், பெரும்பாலான மனிதர்களுக்குப் பொருந்தும் என்றும் கொள்ள வேண்டும். அதே சமயத்தில் எக்ஸப்ஷன்களுக்கும் அனுமதி உண்டு. ஹிந்து மதங்களின் நூல்கள் ஒருவகையில் ஆயிரக்கணக்கான ஆண்டு அப்ஸர்வேஷனினால் இற்றைப்படுத்தப்பட்ட முடிவுகள். அதனாலேயே இவை மிகவும் ஃப்ளெக்ஸிபிளாகத்தோன்றும். எல்லாத்திற்கும் அனுமதியா என்று புரியாதவர்கள் கேட்பதும் இதனால்தான்.

நீங்கள் எப்போது வேண்டுமானாலும் குதிக்கலாம். அடுத்தமுறை நாம் சந்திக்கும்போது தைரியமாக ரஜினி ஹோட்டல் பதார்த்தங்களை ஒரு கை பார்ப்போம். பயம் வேண்டாம்.

1:46 AM  
Blogger Muse (# 01429798200730556938) said...

புத்த//புத்தர், தன் வயப்படுத்த அல்லது ஆக்கிரமிப்பு செய்ய விரும்புவதும், அதை// இதில் புத்தரின் தத்துவங்க்ள்தான் சொல்லப் பட்டனவே அன்றி புத்தரில்லை.

மகேந்திரன்,

புதுமைவிரும்பியிடமிருந்து அந்த புத்தகத்தை ஓஸி வாங்கிப்படித்தவன் என்கிற உரிமையில் சொல்லுகிறேன்: புதுமைவிரும்பியின் புரிதல் சரியானதுதான். புத்தரால் ஆக்கிரமிக்கப்படுவதற்கும், அவருடைய கருத்துக்களால் ஆக்கிரமிக்கப்படுவதற்கும் வித்யாஸம் இல்லை. புதுமைவிரும்பி சரியாக சொன்னபடி ஓஷோ ஒருவித மனப்பிறழ்வு நிலையிலுள்ளவரோ என்கிற சந்தேகத்தை எழுப்பக்கூடியவகையில்தான் அந்த பகுதி உள்ளது. அதுவுமன்றி ஓஷோவும், பரமஹம்ஸரும் மனப்பிறழ்ச்சி உள்ளவர்கள் என்று சொல்லுகின்ற தகவல்களும் உண்டு. இணையத்திலும் அவை கிடைக்கின்றன.

1:57 AM  
Blogger Muse (# 01429798200730556938) said...

எல்லோமே U. G. கிருஷ்ண மூர்த்தியின் அறிமுகம் கிடைக்கும் வரை தான். அவரின் அறிமுகம் தான் இந்த ஆன்மிக அநுபவங்கள் பற்றிய இன்னொரு பார்வையை எனக்குக் கொடுத்தது.


என் அன்பு புதுமைவிரும்பி,

இது புதிதில்லை. அத்வைதத்தை முழுக்க முழுக்க பின்பற்றுபவர்கள் யு ஜி க்ருஷ்ணமூர்த்தி சொன்னவகையில்தான் பேசுவார்கள். அதைத்தான் இவரும் பின்பற்றியுள்ளார்.

எனக்கென்னவோ ஜே க்ருஷ்ணமூர்த்தி எல்லாவற்றையும் கேள்விகேட்டதால், அவர் கேள்விகேட்ட முறையையும் கேள்விகேட்டு அவரைவிட தான் ஒரு பெரிய ஆள் என்று யு ஜி நிறுவவிரும்பினாரோ என்கிற சந்தேகம் உண்டு.

2:03 AM  
Blogger Muse (# 01429798200730556938) said...

விவேகானந்தர் ஒரு பிராமணர் அல்ல..! இயர் பெயர் நரேஷ், க்ஷத்திரிய வம்சாவழி வந்தவர்

நரேந்திரநாத் தத்தர் பிறந்த குலத்தின் பெயர் "காயஸ்த". இந்த ஜாதி சூத்திர வர்ணத்தை சேர்ந்தது என்று

சொல்பவர்களும் உண்டு. வர்ணம் என்பது மாறக்கூடிய ஒன்றென்பதால் இதற்கும் வாய்ப்புகள் உண்டு. இது

உண்மையாகவும் இருக்கலாம்.

அவருடைய பரிவிராஜக காலத்திலேயே அவரை குருவாய் ஏற்றுக்கொண்டு உதவி செய்துவந்த சென்னை

பார்ப்பனர்களை சூத்திரனை குருவாய் கொண்டவர்கள் என்று கூறி கேலி செய்திருக்கிறார்கள்.

அந்த சூத்திரன் தான் வேதாந்தத்தின் சாரம். அதன் மனித உருவம். அந்த சூத்திரனின் பாதத்தில் பணிந்து

நம் உயர்ஜாதி ஆணவத்தை அகற்றிக்கொள்வோமாக.

2:14 AM  
Blogger Muse (# 01429798200730556938) said...

அதே discriminating mind, UG சமாதி அடைந்தார் என்று எப்படி சொல்ல முடியும்.

அப்படித்தான் யூ ஜி சொல்லுகிறார். இந்த விஷயத்தை நம்பிக்கை என்கிற கண்ணாடிமூலம் பார்க்காமல் ஆராய்ந்தால் மேலும் பல விஷயங்கள் கிடைக்கும்.
*********************************************************

இந்த விஷயத்தில் எது மனப்பிறழ்ச்சி அல்லது சரியான உணர்வு நிலை என்பதை உறுதிசெய்ய உதவும் தோழரைத்தான் குரு என்று கூறுகிறார்கள். இந்த குரு வேறு ஒரு தனிமனிதராக இருக்கலாம், அல்லது இறை அனுபவமாகவும் இருக்கலாம்.

உதாரணமாக, ஸெயிண்ட் ஃப்ரான்ஸிஸ் ஆஃப் அஸிஸிக்கும் இதுபோன்ற ஹலுஸினேஷன்கள் தோன்றின என்பதையும், அதை அவர் இறை அருளால் ஹலுஸினேஷன்கள் என்று தெளிவாகப் புரிந்துகொண்டதையும் குறிப்பிடலாம்.

விவேகானந்தரே தன்னுடைய ஸிஷ்யர்கள் சிலரை தியானப்பயிற்சிகளில் சிலகாலம் ஈடுபடவேண்டாம் என்றும், நல்ல அசைவ உணவை உண்டு, ஓய்வெடுக்கும்படியும் பணித்திருக்கிறார்.

ஒருவர் இறை அனுபவம் பெற்றவரா இல்லையா என்பதை உறுதி செய்வது எப்படி என்கிற கேள்வி ஹிந்து மதங்களில் நெடிது காணப்படும் ஒன்று.

2:29 AM  
Blogger Muse (# 01429798200730556938) said...

இன்றைய அறிவியலில், இந்த நிலைபற்றி ஏதேனும், விளக்கம் கிடைக்கிறதா என்று தேடிக்கொண்டிருக்கிறேன்.

அன்பரே, இணையத்தில் இந்த அனுபவங்கள் எல்லாம் மனப்பிறழ்வே என்று கூறுகின்ற கருத்துக்களை வெளியிடுங்களேன். அது ஆட்டத்தின் போக்கை நமது நோக்கம் குறித்த நேர்க்கோட்டில் வைக்க உதவும்.

2:34 AM  
Blogger புதுமை விரும்பி said...

அன்பான ம்யூஸ் அவர்களே,

//இந்த விஷயத்தில் எது மனப்பிறழ்ச்சி அல்லது சரியான உணர்வு நிலை என்பதை உறுதிசெய்ய உதவும் தோழரைத்தான் குரு என்று கூறுகிறார்கள். இந்த குரு வேறு ஒரு தனிமனிதராக இருக்கலாம், அல்லது இறை அனுபவமாகவும் இருக்கலாம்.

உதாரணமாக, ஸெயிண்ட் ஃப்ரான்ஸிஸ் ஆஃப் அஸிஸிக்கும் இதுபோன்ற ஹலுஸினேஷன்கள் தோன்றின என்பதையும், அதை அவர் இறை அருளால் ஹலுஸினேஷன்கள் என்று தெளிவாகப் புரிந்துகொண்டதையும் குறிப்பிடலாம்.//

மிகவும் உபயோகமான தகவல்களைக் கொடுத்துள்ளீர்கள். இதற்கான, சுட்டிகள் ஏதேனும் தரமுடியுமா?

விவேகானந்தர் பற்றிய நிறைய புதிய, ஆச்சரியமான விசயங்களைச் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி.

4:37 AM  
Blogger Thekkikattan|தெகா said...

//அதனால் தானோ என்னவோ, பிரசித்தி பெற்ற மனிதர்கள் சில காலம் இமயமலைக்குள் அல்லது கண்காணாத ஒரு தீவில் வாழ்ந்துவிட்டு வர விரும்புகிறார்கள் போலும்.//

இமயலத்திற்கு சொல்கிறோம் இல்லை, எதிர்பார்ப்புகளை குறைத்திக்கொண்டலே நிறைய விசயங்களில் தீர்வு காணலாம், நமக்கு நாமே என்று நான் எண்ணுகிறேன்.

ஏதாவது உண்மையான diagnose செய்யப்பட்ட schizophrenic மன நோயாளியுடன் நேரம் செலவழித்ததுண்டா...?

சரி, புதுமை விரும்பி இப்பொழுது நடக்கும் இந்த கருத்துப் பரிமாற்றங்களின் மூலம் தாங்களுக்கு ஏதாவது கிடைத்ததா?

6:49 AM  
Blogger புதுமை விரும்பி said...

தெகா,

//ஏதாவது உண்மையான diagnose செய்யப்பட்ட schizophrenic மன நோயாளியுடன் நேரம் செலவழித்ததுண்டா...?//

எனது மிக நெருங்கிய சொந்தம் ஒருவருக்கு இந்த மன நோய் இருந்தது. அவர், குடிப்பழக்கத்தை திடுமென்று விட்டதனால், இந்த நோய் வந்தது என்று சொன்னார்கள். அவருக்கு, இந்த நோய் இரண்டு வருடங்களுக்கும் மேலாக இருந்தது. அது மறக்கமுடியாத அநுபவம். இப்பொழுது அவர் மிக நன்றாக இருக்கிறார்.

//சரி, புதுமை விரும்பி இப்பொழுது நடக்கும் இந்த கருத்துப் பரிமாற்றங்களின் மூலம் தாங்களுக்கு ஏதாவது கிடைத்ததா?//

முடிவாக, இந்த விவாதத்தை முடித்து வைப்பதற்கு, இது பற்றிய மருத்துவ அறிவியலின் விளக்கம் என்ன என்று பார்க்கவேண்டும். இப்பொழுது பேரானந்த நிலை பற்றி நரம்பியல் (Nueroscience) என்ன சொல்கிறது என்று படித்துக்கொண்டிருக்கிறேன். கொஞ்சம் புரிந்ததும், உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அப்புறம் இந்த பரிமாற்றங்களுக்கு ஒரு முடிவுரை எழுதி விடலாம். சரி தானே?

7:06 AM  
Blogger senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

மிக ஆரோக்கியமான நல்ல விவாதம் ம்யூஸ் அவர்களின் பின்னூட்டங்கள் மிகவும் அருமையாகவும் ரசிக்கத் தக்க வகையில் உள்ளன. மிகவும் ரசித்தேன். இந்த விவாதங்களில் ஒரு பரிமாணம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது. அது இந்த ஞானிகள் வாழ்ந்த காலகட்டம் பற்றி அப்பொழுது இருந்த சிந்தனைகள், அறிவியல் வளர்ச்சி போன்றவை கணக்கில் எடுத்துக் கொள்ளப் படவில்லையோ என்று தோன்றுகிறது. இது பற்றி என் சிந்தனைகளை நான் நாளை இங்கு பதிகிறேன்.

7:34 AM  
Blogger Thekkikattan|தெகா said...

//எனது மிக நெருங்கிய சொந்தம் ஒருவருக்கு இந்த மன நோய் இருந்தது. அவர், குடிப்பழக்கத்தை திடுமென்று விட்டதனால், இந்த நோய் வந்தது என்று சொன்னார்கள். அவருக்கு, இந்த நோய் இரண்டு வருடங்களுக்கும் மேலாக இருந்தது. அது மறக்கமுடியாத அநுபவம். இப்பொழுது அவர் மிக நன்றாக இருக்கிறார்.//

இந்த வித மன நோய திடீரென்று ஒரு முன்னிரவில் தோன்றுவது கிடையாதே, புதுமை விரும்பி. இது மனோதத்துவியலில் படிப்படியாக ஒரு வண்ணத்துப் பூச்சி வளர்சிதை மாற்றமுறுவது போல படிப்படியாக தொடங்கி அவ் நிலையின் உச்சத்தை அடைவதாக கூறுகிறது.

8:49 AM  
Blogger Muse (# 01429798200730556938) said...

இப்பொழுது பேரானந்த நிலை பற்றி நரம்பியல் (Nueroscience) என்ன சொல்கிறது என்று படித்துக்கொண்டிருக்கிறேன். கொஞ்சம் புரிந்ததும், உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

என் அன்பு புதுமைவிரும்பி,

திண்ணையில் அரவிந்தன் நீலகண்டன் இதுகுறித்து மிக அருமையான கட்டுரைகள் எழுதியுள்ளார். இப்போது எனக்கு தூக்கம் வருகிறது (11.30 இரவு). இல்லாவிட்டால் தேவைப்படும் லிங்குகளை இங்கே கொடுத்துவிடுவேன். திண்ணையில் அவை கிடைக்காவிட்டால் அரவிந்தன் நீலகண்டனிடமே கேட்கலாம். நல்ல மனிதர். கண்டிப்பாக அனுப்புவார்.

அப்புறம் இந்த பரிமாற்றங்களுக்கு ஒரு முடிவுரை எழுதி விடலாம். சரி தானே?

ஐயோ. வேண்டாமே. அதற்குள் என்ன அவசரம்?

இந்த மாதிரியான நல்ல பதிவுகள் தொடர்ந்த கற்றலை தரவேண்டும்.

11:09 AM  
Blogger புதுமை விரும்பி said...

முதல் வருகைக்கு நன்றி குமரன்.

//மிக ஆரோக்கியமான நல்ல விவாதம் ம்யூஸ் அவர்களின் பின்னூட்டங்கள் மிகவும் அருமையாகவும் ரசிக்கத் தக்க வகையில் உள்ளன. மிகவும் ரசித்தேன்.//

நிச்சயம் உங்கள் கருத்துக்களுக்கு என்னிடம் மாற்றுக்கருத்துகள் இல்லை.

//இந்த விவாதங்களில் ஒரு பரிமாணம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது. அது இந்த ஞானிகள் வாழ்ந்த காலகட்டம் பற்றி அப்பொழுது இருந்த சிந்தனைகள், அறிவியல் வளர்ச்சி போன்றவை கணக்கில் எடுத்துக் கொள்ளப் படவில்லையோ என்று தோன்றுகிறது. இது பற்றி என் சிந்தனைகளை நான் நாளை இங்கு பதிகிறேன்.//

உங்கள் கருத்துக்கள் கூடுதல் புரிதலைத் தரும் என்று நம்புகின்றேன்.

12:42 AM  
Blogger புதுமை விரும்பி said...

தெகா,

//இந்த வித மன நோய திடீரென்று ஒரு முன்னிரவில் தோன்றுவது கிடையாதே, புதுமை விரும்பி. இது மனோதத்துவியலில் படிப்படியாக ஒரு வண்ணத்துப் பூச்சி வளர்சிதை மாற்றமுறுவது போல படிப்படியாக தொடங்கி அவ் நிலையின் உச்சத்தை அடைவதாக கூறுகிறது.//

உங்கள் கருத்துக்களோடு முழுவதும் ஒத்துப்போகிறேன். அதாவது குடிப்பழக்கத்தை அல்லது போதைப்பழக்கத்தை முறைப்படி நிறுத்தவேண்டும். அப்படியில்லாமல், திடுமென்று நிறுத்தும்போது தொடர்ந்த depressed மன நிலை ஏற்படுகிறது. இதைக் கவனித்து சரிசெய்யாமல் விட்டு விட்டால், மன நோயாக மாறிவிடுகிறது. இப்படித் தான் என் சொந்தக் காரருக்கு schizophrenia நோய் ஏற்பட்டது. அவர் வயல்புரங்களில் இரவில் கேட்கும், சந்தங்களை எல்லாம் தனக்கு எதிரான மனிதர்களின் சதி என்று சந்தேகப்படுமளவிற்கு, வீட்டிலுள்ள குத்தீட்டியை எடுத்துக்கொண்டு வெளியில் பாயுமளவிற்கு, அந்த நோயின் கொடூரம் இருந்தது.

1:04 AM  
Blogger புதுமை விரும்பி said...

தெகா,

//கீழ் காணும் சுட்டியில் பயணித்து கார்ல் ஜங்குடன் சிறிது உரையாடி வாருங்கள்...

கார்ல் ஜங் //

தகவலுக்கு நன்றி.

2:49 AM  
Blogger புதுமை விரும்பி said...

சகோதர ம்யூஸ்,

அரவிந்தன் நீலகண்டன் மற்றும் நேசகுமாரின் பதிவுகளைப்படிக்கிறேன். தகவலுக்கு நன்றி. நீங்கள் விரும்பியபடியே, இந்த விவாதத்திற்கு, நிறைய நண்பர்கள் கருத்துச் சொல்லியிருப்பது மிகவும் சந்தோசமாயிருக்கிறது.

4:38 AM  
Blogger Thekkikattan|தெகா said...

//அப்புறம் இந்த பரிமாற்றங்களுக்கு ஒரு முடிவுரை எழுதி விடலாம். சரி தானே?

ஐயோ. வேண்டாமே. அதற்குள் என்ன அவசரம்?

இந்த மாதிரியான நல்ல பதிவுகள் தொடர்ந்த கற்றலை தரவேண்டும்.//

புதுமை விரும்பி, ம்யூஸ் சொல்வதுதான் சரி, இருப்பினும் தாங்களின் புரிதல் என்ற கோணத்தில் இந்த கருத்து பரிமாற்றத்தில் என்ன கிட்டியது என்பதனை வேண்டுமானல் இங்கு நீங்கள் கொணரலாம். என்பது எனது கருத்து.

8:02 AM  
Blogger Thekkikattan|தெகா said...

//அவர் வயல்புரங்களில் இரவில் கேட்கும், சந்தங்களை எல்லாம் தனக்கு எதிரான மனிதர்களின் சதி என்று சந்தேகப்படுமளவிற்கு, வீட்டிலுள்ள குத்தீட்டியை எடுத்துக்கொண்டு வெளியில் பாயுமளவிற்கு, அந்த நோயின் கொடூரம் இருந்தது.//

இப்பொழுது அவர் எவ்வாறு இருக்கிறார், எது போன்ற சிகிச்சை அவருக்கு பயனளித்தது? அவ்வாறு அவர் மனம் குன்றிய நிலையில் இருந்த பொழுது தாங்கள் அவரிடத்தில் சம்பாஷனை செய்ததுண்டா? அவ்வாறு பேசியிருந்தால் இது போன்ற கடவுள் இருப்பு, இறையாண்மை பற்றியெல்லாம் பேசியதுண்ட்டா?

முடிந்தால் இங்கு பகிர்ந்து கொள்ளலாமே...

Only if you want to... :-)

8:52 AM  
Blogger புதுமை விரும்பி said...

தெகா அவர்களே,

//இப்பொழுது அவர் எவ்வாறு இருக்கிறார், எது போன்ற சிகிச்சை அவருக்கு பயனளித்தது? அவ்வாறு அவர் மனம் குன்றிய நிலையில் இருந்த பொழுது தாங்கள் அவரிடத்தில் சம்பாஷனை செய்ததுண்டா? அவ்வாறு பேசியிருந்தால் இது போன்ற கடவுள் இருப்பு, இறையாண்மை பற்றியெல்லாம் பேசியதுண்ட்டா?

முடிந்தால் இங்கு பகிர்ந்து கொள்ளலாமே...

Only if you want to... :-)//

கொஞ்சம் ஊர் சுற்றி விட்டு வந்ததால், தங்களுக்கு உரிய நேரத்தில் பதில் சொல்ல இயலவில்லை. விரைவில், தனிமடலில் உங்களுக்கு இது பற்றிய விவரங்களைக் கொடுக்கிறேன்.

12:29 AM  
Blogger KARMA said...

Hello Pudhumai Virumbi,

Thanks for the amazing post and the follow ups.

I like to know about the treatment details of your relative also. Pls forward those to me in email.

Thanks
Thirumoolan.

6:44 AM  
Blogger புதுமை விரும்பி said...

வருக திருமூலன் அவர்களே,

//Thanks for the amazing post and the follow ups.//

உங்கள் ஊக்கமூட்டும் வார்த்தைகளுக்கு நன்றி.

//I like to know about the treatment details of your relative also. Pls forward those to me in email.//

நிச்சயமாக உங்களுக்கும் மடலில் தெரியப்படுத்துகிறேன்.

8:07 AM  
Blogger நாடோடி said...

திறம்பட எழுதியுள்ளிர்கள்.

ராம கிருஷ்ண பரமகம்சர், ஓஷோ - Are these spiritual masters schizophrenic? என்று நீங்கள் கேள்வி கேட்கீறிர்கள்.

நான் ஒன்று கேட்கிறேன்..

நீரில் மேல் நட்ந்த இயேசு நாதர், அற்புத வித்தைகள் செய்த முகமது நபி இவர்களை இந்த listல் சேர்க்கமுடியுமா?..

தற்போதைய அறிவியலின்படி இது எல்லாம் கண்கட்டு வித்தைகளே.

இதை நான் சல்மான் அவர்களுக்கு
கேட்கிறேன்.
ஒவ்வருத்தருக்கும் ஒரு நம்பிக்கை ...

நான் ஒரு நாத்திகன் தான். எனக்கு நாம் எல்லோரும் வணங்கும் கடவுகளின் மீது நம்பிக்கை கிடையாது.
ஆனால் அடுத்தவர்கள் நம்பிக்கையை நான் பொய் என்று சொன்னால் நான் ஒரு முட்டாள்.

8:35 AM  
Blogger தருமி said...

உங்கள் பதிவும், அதற்கென வந்துள்ள பின்னூட்டங்களும் ஆழமான விஷயங்கள், அகலமான பார்வைகள் கொண்டவைகளாக அமைந்துள்ளன. நீங்கள் அனைவரும் காட்டும் மனிதர்களுள் ஓஷோவின் நூல்கள் மட்டுமே கொஞ்சம் எனக்குப் பரிச்சயம்.

வியந்து ஒதுங்கிச் செல்கிறேன். i am very much humbled.
வாழ்த்துக்கள்.

11:05 AM  
Blogger புதுமை விரும்பி said...

வருகைக்கு நன்றி மணியன் அவர்களே,

//ராம கிருஷ்ண பரமகம்சர், ஓஷோ - Are these spiritual masters schizophrenic? என்று நீங்கள் கேள்வி கேட்கீறிர்கள்.
நான் ஒன்று கேட்கிறேன்..
நீரில் மேல் நட்ந்த இயேசு நாதர், அற்புத வித்தைகள் செய்த முகமது நபி இவர்களை இந்த listல் சேர்க்கமுடியுமா?..//

நிச்சயம், உங்கள் கேள்வி நியாயமானதே. அதாவது, ராம கிருஷ்ண பரமகம்சர், ஓஷோவை மட்டும் listல் ஏற்றியதற்குக்
காரணம், இவர்கள் சமீப காலமாய் வாழ்ந்தவர்கள். இவர்களின், வாழ்வு பற்றி, அநுபவம் பற்றிய தெளிவான
குறிப்புகள் நமக்குக் கிடைக்கின்றன. அதோடு, ஆன்மிக அநுபவங்கள் பற்றிய புரிதலை வளர்த்துக்கொள்ளவே,
நான் இந்த கேள்வியை எழுப்பியிருந்தேன். மற்றபடி, மதங்களுக்கு எதிரான கருத்துக்களை முன்வைப்பது, என்
எண்ணமல்ல. மற்றபடி, இந்த ஆன்மிக அநுபவங்கள் பற்றிய கேள்விகள் எல்லா மதத்திலும் உள்ளவர்களுக்கும்
தான்.

//இதை நான் சல்மான் அவர்களுக்கு
கேட்கிறேன்.
ஒவ்வருத்தருக்கும் ஒரு நம்பிக்கை ...

நான் ஒரு நாத்திகன் தான். எனக்கு நாம் எல்லோரும் வணங்கும் கடவுகளின் மீது நம்பிக்கை கிடையாது.
ஆனால் அடுத்தவர்கள் நம்பிக்கையை நான் பொய் என்று சொன்னால் நான் ஒரு முட்டாள்.//

இராமர் பிள்ளை மூலிகையிலிருந்து, பெட்ரோல் எடுத்தார் என்பது (உண்மையாய் இருந்திருக்கும் பட்சத்தில்)
நமக்கு எல்லோருக்கும் பெருமையளிக்கிற விசயமே. அப்படியில்லாமல், அவரை இந்தியாவின் சார்பாக உலக அரங்கில்
ஏற்றிவிட்ட பின், அவர் ஒரு ஏமாற்றுக்காரர் என்று நிரூபிக்கப்பட்டுவிட்டால், நமக்கு எத்தனை பெரிய அவமானம்!?
அதே போலத்தான், நாம் பெருமையாக சொல்லிக்கொண்டு திரியும் விசயங்கள், உண்மையில் அத்தகைய
தகுதியுடையவை தானா என்று ஆராய நாம் கடமைப்பட்டுள்ளோம். இதில் யாரின் நம்பிக்கைகளும் காயம்
படுமேயானால், அது வருந்தத்தக்கதே. ஆனாலும், எனது அளவில், நாட்டிற்கு பின்னால் தான் மதங்கள். மற்றபடி உங்கள் கருத்துக்களோடு முற்றிலும் உடன்படுகிறேன்.

4:30 PM  
Blogger புதுமை விரும்பி said...

வாருங்கள் தருமி அவர்களே,

// உங்கள் பதிவும், அதற்கென வந்துள்ள பின்னூட்டங்களும் ஆழமான விஷயங்கள், அகலமான பார்வைகள் கொண்டவைகளாக அமைந்துள்ளன.//

விஸ்வாமித்திரர் கையால் ப்ரம்ம ரிஷி பட்டம் என்ற பழமொழி தான் எனக்கு நினைவிற்கு வருகிறது. உங்கள்
உற்சாகமூட்டும் வார்த்தைகளுக்கு நன்றி.

UPSC தேர்வில் நடக்கும் முறைகேடுகள் பற்றிய உங்களின் விரிவான பதிவு என்னைத்
திடுக்கிடவைத்தது. இன்னும் விரிவாக உங்கள் எழுத்துக்களைப் படிக்க வேண்டும்.

//வியந்து ஒதுங்கிச் செல்கிறேன். i am very much humbled.//

இதை நீங்கள் நகைச்சுவையாக சொன்னதாக எடுத்துக்கொள்கிறேன்.

4:44 PM  
Blogger துளசி கோபால் said...

ஹம்சரைக் கம்சனாக்கியது ஏன்னு புரியலைங்களே?

4:57 PM  
Blogger சல்மான் said...

// இதை நான் சல்மான் அவர்களுக்கு
கேட்கிறேன்.
//

மணியன் அவர்கள் என்ன கேட்கிறார் என பிடிபடவில்லை. இஸ்லாமிய தத்துவங்களையும் கேள்வி கேக்க இயலுமா என்பதா? என் அறிவுக்கு உட்பட்டு, சில விஷயங்களை தவிர பொதுவாக எல்லாவற்றைப் பற்றியும் கேள்வி எழுப்ப இஸ்லாம் அனுமதிக்கிறது என நினைக்கிறேன். இந்த குரானை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டாமா என குரானே அழைக்கிறது. ஆனால், முழுவதுமாக முஸ்லிம்கள் சூழ்ந்துள்ள நிலையில் விவாதத்துக்குரிய ஒரு கேள்வியை ஒரு முஸ்லிமாக நான் எழுப்புவது ஆதரவாக பார்க்கப்படுவதில்லை எனும் வருத்தம் எனக்கு உண்டு. முழு நம்பிக்கை வந்த பின் கேள்விகளுக்கு அங்கு இடமிருக்க கூடாது என்று எண்ணுகிறார்கள் போல.

// அற்புத வித்தைகள் செய்த முகமது நபி //

பெரும்பான்மையான முஸ்லிம்கள் முகமது நபியை வாழ்க்கை வழிமுறையை காட்டும் கருத்துக்களின் மீது கட்டப்பட்ட ரோல் மாடலாக பார்க்கிறார்களே தவிர அற்புத வித்தைகள் புரிந்தவர் என பார்ப்பதாக தெரியவில்லை. வெகுசில சந்தர்ப்பங்களை தவிர அவர் வித்தைகளால் சூழப்பட்டவராக இல்லை.
இறைவனிடம் இருந்து வந்த வாக்குகள் என அவர் சொல்லியவை குரான் என தொகுத்து அழைக்கப்படுகிறது. இது Schizophrenia வின் விழைவா என ஆராய முழு குரானுமே இன்று உங்களுக்கு கிடைக்கிறது. அதை நீங்களே படித்து உங்கள் மதியூகம் மூலம் முடிவு செய்யலாம். இன்னும் சிறப்பாக இந்த துறைகளில் (Schizophrenia) சிறந்தவர்களின் ஆய்வுக்கு விடலாம்.

5:31 PM  
Blogger Muse (# 01429798200730556938) said...

நண்பர்காள்,

இந்த கருத்துப்பரிமாறலை நாம் ஒரு குறிப்பிட்ட குழு, மனிதர் என்கிற அடிப்படையில் பார்த்தால் ஏனைய அரசியல் ஜல்லிகள் இங்கே கொட்டப்படும் அபாயம் இருக்கிறது. எனவே, நாம் பொதுவாக ஆன்மீக அனுபவங்கள் உண்மையிலேயே உண்மையானவைகள்தானா, இல்லை மனத்தின் சூழ்ச்சியா என்பதை பற்றி பேசுவோமே.

12:17 AM  
Blogger புதுமை விரும்பி said...

மன்னித்துவிடுங்கள் துளசியாரே,

// ஹம்சரைக் கம்சனாக்கியது ஏன்னு புரியலைங்களே?//

எல்லாம் என் தமிழ் தட்டச்சு செய்கிற வேலை!! எத்தனை முறை தேடியும் இந்த "ஹ"வை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், பொதுவாக "ha" என்பது "ஹ"வைக்கொடுக்கவேண்டும். (பின்குறிப்பு: என் பின்னோட்டத்தில் உள்ள "ஹ" உங்களின் கேள்வியிலிருந்து காப்பியடிக்கப்பட்டுள்ளது.)

12:41 AM  
Blogger புதுமை விரும்பி said...

அன்பான ம்யூஸ்,

//எனவே, நாம் பொதுவாக ஆன்மீக அனுபவங்கள் உண்மையிலேயே உண்மையானவைகள்தானா, இல்லை மனத்தின் சூழ்ச்சியா என்பதை பற்றி பேசுவோமே.//

விவாதங்களை, கருத்துப் பரிமாற்றத்தை சரியான திசைக்கு எடுத்துச் செல்லும் தங்கள் முயற்சிக்கும், ஆதரவுக்கும் நன்றி.

12:49 AM  
Blogger senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

இந்த விஷயத்தில பார்த்தீர்களானால் ராம கிருஷ்ண பரமஹம்சர் இருந்த கால கட்டத்தில் ஒரு பெண்ணுக்கு மனநிலை சரி இல்லை என்று வைத்துக் கொள்வோம் உடனே என்ன சொல்வார்கள் பேய் பிடித்து விட்டது என்று உடனே பூசாரியிடம் சென்று வேப்பிலை அடித்து அமர்களப் படுத்தி விடுவார்கள்.

மேலும் இந்த கால கட்டம் என்பது அறிவியல் வளர்ச்சி குறைவாக இருந்த காலம் எல்லாமே Deity தான். சூரியன் முதற் கொண்டு அனைத்தயுமே மக்கள் கடவுளாக வழி பட்டு வந்த காலம். சூரியன் என்பது ஒரு நட்சத்திரம் அதுவும் ஒரு பெரிய நட்சத்திரம் இல்லை மத்திய சைஸ் நட்சத்திரம் என்று தெரிந்திருக்கவில்லை.

இது போன்ற சூழ்நிலையில் மக்கள் தங்களால் விளக்க முடியாத அனைத்து விஷயங்களுடனும் ஒன்று பயத்துடனோ இல்லை மரியாதையுடனோ பார்த்து வந்த கால கட்டம் அது.

இது போன்ற சூழ்நிலையில் ராம கிருஷ்ண பரமஹம்ஷர் schizophrenic ஆக இருந்து அதனை மக்கள் பேரானந்தம் என்று எடுத்துக் கொள்ள வாய்ப்பிருந்திருக்கிறதா என்றால் கண்டிப்பாக இருந்திருக்கிறது.

ஆனால் நம்மால் அதனை உறுதி படுத்தவோ இல்லை இல்லை என்று மறுக்கவோ இயலாது. அப்படி உறுதி செய்வதும் தவறாகி விடும், மறுப்பதும் தவறாகி விடும்.

இங்குதான் ம்யூஸ் அவர்களின் இந்தக் கருத்தை நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

///
இவர்களை தெய்வமாகக் காண்பவர்களுக்கு அந்த நம்பிக்கையின்மூலம் கிடைக்கின்ற மன ஆறுதல், பாதுகாப்பு உணர்வு, பாஸிட்டிவ் உணர்வுகள், பயங்களிலிருந்து தப்புதல் போன்றவை நம்பாதவர்களுக்கு நம்பாமலிருப்பதன் மூலம் ஏற்படுகின்றது. எனவே இரண்டிற்கும் அதிக வித்யாசமில்லை.
///

Muse has put it beautifully here.எனக்கும் இது போன்ற நம்பிக்கைகள் உண்டு கடவுளை நம்புவதன் மூலம், ராம கிருஷ்ண பரமஹம்சர் பேரானந்த நிலையை அடைந்தார் என நம்புவதன் மூலம் ஒருவனுக்கு மன தைரியம், நம்பிக்கை போன்ற பாஸிடிவ் விஷயங்கள் மட்டும் கிடைக்கிறது என்றால் we shouldnt have discussed this at all.

ஆனால் பாஸிடிவ் விஷயங்கள் மட்டும் தான் கிடைக்கிறதா என்றால் இல்லை.

மதங்களால் நன்மைகள் மட்டுமே இல்லை அதனால் பல பிரச்சனைகளும் வருகின்றன. (என்னைப் பொறுத்த வரை மதங்கள் தான் மனித குலத்துக்கு மிகப் பெரிய பிரச்சனை என்னுடன் பலர் வேறுபடுவர் மேலும் இது இங்கு விவாதிக்கப் படவில்லை ஆனால் மதங்களால் மனிதர்களுக்கு தொல்லைகள் உண்டு என்பதை எல்லோரும் ஒப்புக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்).

மேலும்

டாவின்ஸி கோட் நாவலில் ஒரு வரி வரும். we worship the gods of our fathers. என்னடா கடவுள் அன்றைக்கும் ஒன்றுதான் இன்றைக்கும் ஒன்றுதான் ஆகவே என்ன பெரிய ஸ்டேட்மெண்ட் என்று நினைகாதீர்கள். நாம் செய்வது நம் fore-fathers கடவுளை என்றால் அவர்கள் தவறாக எதையோ கடவுள் என்று நினைத்து தவறாக செய்து workship கொண்டிருந்தால்?

இது போன்ற ஒரு சூழ்நிலையில் இந்த விவாதம் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகத் எனக்கு தோன்றுகிறது.

உங்களின் முக்கியமான கேள்விக்கே நான் வரவில்லை என்று நினைக்கிறேன் அதற்குள் என்ன இவ்வளவு பெரிய பதில் என்று எண்ண வேண்டாம். உங்களின் கேள்விக்கு பதிலை அளிக்கும் விதமாக என்னுள் இருக்கும் ஆன்மீகம் குறித்த சிந்தனைகளை அப்படியே வெளிப்படுத்தியும் உள்ளேன்.

இப்பொழுது உங்களின் கேள்விக்கு செல்கிறேன்.

இப்பொழுது உங்களின் கேள்விக்கான விஷயத்திற்கு வந்து விட்டேன்.

அதாவது இது போன்ற சந்தர்ப்பங்களில் நாம் அந்த கால கட்டத்தில் வாழ்ந்த சிலருடைய கருத்துக்களை கணக்கில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ம்யூஸ் அவர்கள் விவேகானந்தரே ராம கிருஷ்ண பரமஹம்சரை பைத்தியமாக இருக்க வாய்ப்புள்ளது என்று ஒரு காலகட்டத்தில் கருதினார் என்று கூறியுள்ளார், பின் அவருடைய கருத்துக்களை நம்பி அவருடைய கொள்கைகளைப் பின்பற்றினார் என்றும் கூறியுள்ளார்.

ஆனால் விவேகானந்தரினால் மட்டுமே Influence ஆகி ஒரு முடிவுக்கு வருவதும் தவறாகும்.

மேலும் தெ.கா. அவர்களின் கருத்துக்களையும் இங்கு நாம் நினைவில் கொள்ள வேண்டும் எந்த அடிப்படையில் நாம் ஒருவரை மனநிலை சரியில்லாதவர், மனநிலை சரியுள்ளவர் என்று பிரிக்க முடியும்? எதோ ஒரு படத்தில் வரும் வசனம் போலத்தான் சென்று விடும் அவன் பணப் பைத்தியம், அவன் பெண் பைத்தியம் என்று எல்லோருமே ஒரு வகைப் பைத்தியம்தான்.

இவையெல்லாம் வைத்துப் பார்க்கும் பொழுது மிக மிக குழப்பமாகத்தான் இருக்கிறது. இது போன்ற சந்தர்ப்பங்களில் எதுவும் முடிவு செய்ய முடியாத நிலையில் conclusion என்பது ஒவ்வொரு மனிதர்களிடமும் விட்டு விடுவது தான் சரி என்று தோன்றுகிறது கடவுள் என்று நினைத்தால் கடவுள் இல்லையென்றால் கல் என்பது போல. ஆனால் இது போன்றும் இருக்கலாம் என்ற மாற்று சிந்தனைகளையும் கண்டிப்பாக போதனை செய்ய வேண்டும். ராமர் என்பவர் ஒருவருடைய கற்பனையில் மட்டுமே வாழ்ந்து வந்திருக்கிறார், அவர் உண்மையல்ல என்று எல்லோரும் நம்பாவிட்டாலும் அந்த மாற்று சிந்தனை போதிக்கப் பட்டிருந்தால் நமக்கு சகிப்புத் தன்மை என்பது அதிகரித்திருக்கலாம் என்று நினைப்பதுண்டு அது போல தான் இந்த விஷயமும்.

இந்த பின்னூட்டத்தை என்னுடைய பதிவிலும் இட்டிருக்கிறேன். என்னுடைய இந்தப் பின்னூட்டம் கருப் பொருளில் இருந்து மிகவும் விலகி இருந்தால் அது என் தவறே.

12:52 AM  
Blogger புதுமை விரும்பி said...

சல்மான்,

தங்கள் வருகைக்கும், விளக்கங்களுக்கும் மிக்க நன்றி.

12:53 AM  
Blogger புதுமை விரும்பி said...

குமரன்,

தங்கள் விரிவான விளக்கங்களுக்கு நன்றி. உங்கள் பதில் நிச்சயம் இது பற்றிய அதிகப்படியான புரிதலைக் கொடுத்திருக்கிறது. மீண்டும் பேசலாம், விரிவாக.

1:03 AM  
Blogger நாடோடி said...

//யதார்த்தமான, ஆனால் சிலருக்கு வலிக்கும் வார்த்தைகள். வலித்ததின் அடையாளம் காண்பிக்கும், 'இருப்பதை காப்பாற்றிக்' கொள்ளும் பின்னூட்டங்கள். கேள்விகள் கேட்பதை பெரும்பாலான தத்துவங்கள் விரும்புவதில்லை என்பதை நிரூபிக்கும் வாதங்கள்.//

என்று கூறிய சல்மான் அவர்களுக்குதான் கேட்டேன் கீழே உள்ள கேள்வியை
"நீரில் மேல் நட்ந்த இயேசு நாதர், அற்புத வித்தைகள் செய்த முகமது நபி இவர்களை இந்த listல் சேர்க்கமுடியுமா?"

அதற்குதான் நீங்கள் கூறிய பதில் கீழே

//பெரும்பான்மையான முஸ்லிம்கள் முகமது நபியை வாழ்க்கை வழிமுறையை காட்டும் கருத்துக்களின் மீது கட்டப்பட்ட ரோல் மாடலாக பார்க்கிறார்களே தவிர அற்புத வித்தைகள் புரிந்தவர் என பார்ப்பதாக தெரியவில்லை. வெகுசில சந்தர்ப்பங்களை தவிர அவர் வித்தைகளால் சூழப்பட்டவராக இல்லை.
இறைவனிடம் இருந்து வந்த வாக்குகள் என அவர் சொல்லியவை குரான் என தொகுத்து அழைக்கப்படுகிறது. இது Schizophrenia வின் விழைவா என ஆராய முழு குரானுமே இன்று உங்களுக்கு கிடைக்கிறது. அதை நீங்களே படித்து உங்கள் மதியூகம் மூலம் முடிவு செய்யலாம். இன்னும் சிறப்பாக இந்த துறைகளில் (Schizophrenia) சிறந்தவர்களின் ஆய்வுக்கு விடலாம்.
//

அடுத்தவர்கள் மதத்தை,மதத்தை சார்ந்தவர்களை குறை கூறும் போது எல்லோருக்கும் இனிக்கும் அவர் தன் மதத்தை,மதத்தை, தன்னை சார்ந்தவர்களை குறை கூறாதவரை.

நமக்கு தவறு என்று தெறிவதால்.. அது தவறு என்று அர்தமல்ல

//இராமர் பிள்ளை மூலிகையிலிருந்து, பெட்ரோல் எடுத்தார் என்பது (உண்மையாய் இருந்திருக்கும் பட்சத்தில்)
நமக்கு எல்லோருக்கும் பெருமையளிக்கிற விசயமே. அப்படியில்லாமல், அவரை இந்தியாவின் சார்பாக உலக அரங்கில்
ஏற்றிவிட்ட பின், அவர் ஒரு ஏமாற்றுக்காரர் என்று நிரூபிக்கப்பட்டுவிட்டால், நமக்கு எத்தனை பெரிய அவமானம்!?
அதே போலத்தான், நாம் பெருமையாக சொல்லிக்கொண்டு திரியும் விசயங்கள், உண்மையில் அத்தகைய
தகுதியுடையவை தானா என்று ஆராய நாம் கடமைப்பட்டுள்ளோம். இதில் யாரின் நம்பிக்கைகளும் காயம்
படுமேயானால், அது வருந்தத்தக்கதே. ஆனாலும், எனது அளவில், நாட்டிற்கு பின்னால் தான் மதங்கள். மற்றபடி உங்கள் கருத்துக்களோடு முற்றிலும் உடன்படுகிறேன்.//

கலீலியோக்கு முன் சூரியன் பூமியை சுற்றிவருவதாக நம்பப்பட்டது. பின் புதிய எற்பாட்டில் மாற்றம் செய்யபட்டது.

தவறுகள் அற்ற உலகம் எங்கும் கிடையாது. தவறுகளை திருத்திகொள்ள முடியும் எனில் அதுதான் உலகத்தோடு
ஒத்திசைந்த வாழ்க்கை.

நேரமின்மை காரணமாகவும், எனக்கு அவ்வளவாக தமிழ்
typewriting தெரியாதால் சுருக்கமாக எழுதியுள்ளேன்.

யாரையும், எவருடைய நம்பிக்கையையும் புண்படுத்துவது என் நேக்கம் அல்ல.அப்படி இருப்பின் மன்னிகவும்.

1:09 AM  
Blogger dondu(#11168674346665545885) said...

"எத்தனை முறை தேடியும் இந்த "ஹ"வை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், பொதுவாக "ha" என்பது "ஹ"வைக்கொடுக்கவேண்டும். (பின்குறிப்பு: என் பின்னோட்டத்தில் உள்ள "ஹ" உங்களின் கேள்வியிலிருந்து காப்பியடிக்கப்பட்டுள்ளது.)"
இகலப்பையாக இருந்தால் ha என்பது ஹ கொடுக்கும். நீங்கள் சுரதா பெட்டியை பாவிப்பவராக இருக்கும் பட்சத்தில் -ha என்று அடித்தால் ஹ கிடைக்கும். பார்க்க: http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm

அன்புடன்,
டோண்டு ராகவன்

2:48 AM  
Blogger புதுமை விரும்பி said...

தகவலுக்கு நன்றி டோண்டு சார்,

இப்பொழுது, "ஹ" வேலை செய்கிறது. நீங்கள் சொன்னபடி "-ha"வைப் பயன்படுத்தினேன்.

3:03 AM  
Blogger தருமி said...

//வியந்து ஒதுங்கிச் செல்கிறேன். i am very much humbled.//
இதை நீங்கள் நகைச்சுவையாக சொன்னதாக எடுத்துக்கொள்கிறேன்//

no, i meant it; and i really do.

(என்னைப் பொறுத்த வரை மதங்கள் தான் மனித குலத்துக்கு மிகப் பெரிய பிரச்சனை என்னுடன் பலர் வேறுபடுவர் - குமரன் //

என் கருத்தும் இதுவே; அதை என் மதத்தைப்பற்றிய பதிவுகளில் எழுதியுள்ளேன். அப்படிப்பட்டக் கருத்துக் கொண்ட ஒருவனுக்கு உங்கள் பதிவின் உட்கருத்துக்கு (வேறு) என்ன பதில் இருக்கப் போகிறது.

ஓஷோ நான் வாசித்தவரையில் அவரை ஒரு ஆன்மீக வாதியாக என்னால் பார்க்கப் பட முடியவில்லை. ஒரு இடத்தில் கண்ணனை அவர் செய்யும் நைச்சியம் (கிண்டல் என்று தானே பொருள்?) செய்துவிட்டு, இன்னொரு இடத்தில் ஒரு அவதாரமாகச் சொல்வதுண்டு. நிரம்ப குறும்பு நிறைந்த, மிக மிக விசாலமான வாசிப்பும், நினைவாற்றலும் கொண்ட ஒரு தத்துவ (philogsophy)ஆசிரியராகவே நான் அவரைப் பார்க்கிறேன்.but he is used to contradict himself. i see him as a sensible, humourous orator on world philosophies.

3:36 AM  
Blogger Muse (# 01429798200730556938) said...

இப்படி பார்க்கலாமே. எல்லா மதங்களிலும் கடவுளை கண்டறிந்ததாக சொல்லிக்கொண்ட, சொல்லப்படுகின்ற ஞானிகள் உண்டு. உதாரணமாக இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் காப்ரியேலை கண்டதாகவும், அல்லாவையும் உணர்ந்தவராகவும் கூறப்படுகின்றது.

ஸெயின்ட் ஃப்ரான்ஸிஸ் ஆஃப் அஸிஸிக்கு ஏஸு பிரானின் தரிஸனம் கிடைத்தது.

அருணகிரினாதரின் முன் முருகப்பெருமான் ஸுப்பராக மயிலில் வந்திறங்கி கோடி சூரிய ஒளிக்கு நடுவில் பக்தியை மெச்சினாராம்.

கேள்வி என்னவென்றால் முஹம்மதுவின் முன்னால் முருகப்பெருமானோ, அருணகிரிநாதருக்கு அல்லாவோ, ஃப்ரான்ஸிஸ் ஆஃப் அஸிஸிக்கு மாரியம்மனோ ஏன் காட்ஷி தரவில்லை?

ஏனென்றால் இவர்கள் தங்கள் மன பிம்பங்களில் மற்ற தெய்வங்களை அறிந்திருக்கவில்லை. வேறு வகையில் சொன்னால் உங்கள் மனத்திற்கு தெரியாத ஒன்றை தாங்கள் காண முடியாதது ஏன்?

உங்களது தெய்வங்கள் உங்களின் மன கற்பனைக்கு உட்பட்டவராகவே இருப்பது ஏன்?

இந்த அனுபவங்கள் மனத்தின் கற்பனைகளா?

கேள்வி ஸரிதானே, என் அன்பிற்குரிய புதுமைவிரும்பி அவர்களே?

3:38 AM  
Blogger KARMA said...

Muse அவர்களுக்கு

ஒரே சக்தி, பிரபஞ்ச சக்தி... அது நீங்கள் எப்படி விரும்புகிரீர்களோ அப்படி உங்களுக்கு காட்சிதரும்.

இவ்வளவு ஏன்....பரமஹம்சருக்கு காளியாகவும், காரைக்காலமையாருக்கு சிவனாகவும், மீராவுக்கு கிருஷ்ணானதும் ஒன்றேயன்றிப் பிரிதொன்றில்லை.

இது மட்டுமல்ல, நீங்கள் இன்று புதிதாக ஒரு தெய்வம் உருவாக்கினாலும் அதுவும் இதுபோலவே பலன் தரும் ஏனென்றால் அது "தத்" எல்லாமுமாக இருக்கிறது....

ஆனால் உங்களால் நீங்கள் அறிந்திராத ஒரு பொருளை உங்கள் எண்ண ஓட்டத்தில் எடுத்துச் செல்ல இயலாத காரணத்தால் அதனை உங்கள் மனதிற்கு தெரியாத, தெரிந்தாலும் நம்பவியலா பிம்பங்களின் வாயிலாக அறியமுடிவதில்லை.

இது நமது Limitation, அன்றி அதனுடயது அல்ல.

--- திருமூலன்

7:52 PM  
Blogger Muse (# 01429798200730556938) said...

திருமூலன்,

கருத்துகளுக்கு நன்றிகள்.

உங்கள் மனதிற்கு தெரியாத, தெரிந்தாலும் நம்பவியலா பிம்பங்களின் வாயிலாக அறியமுடிவதில்லை.

உண்மைதான். என் கேள்வியும் இதை அடிப்படையாகக் கொண்டதுதான். கற்பனை செய்துகொள்கின்ற ஒன்றை நம் மனமானது நிஜ உலகிலும் காணலாமன்றோ? இஃது ப்ரமை என்பது மற்றவர்களுக்குத் தெரியும். ஆனால் நரம்பு கோளாறுகளின் காரணமாகவோ, அல்லது இடையறாது மனத்திற்கு ஊட்டப்பட்டு வந்த நம்பிக்கைகளின்மூலமாகவோ ஒருவர் புற உலகிலும் மனப்பிம்பங்களை காணலாமே.

அந்த வகையில் ஒரு குறிப்பிட்ட மனிதருக்கு அவரது நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்படும் தோற்றம் கற்பனையாக இருக்கலாமல்லவா?

புதுமை விரும்பி இந்த பதிவின் மூலம் இதுபோன்ற அனுபவங்கள் குறித்த ஒரு ஆப்ஜெக்டிவ்வான, பொதுப்படையான "அளவையை" ஏற்படுத்த விழைகிறார் என்று கருதுகிறேன்.

இந்த அளவையானது ஒரு தனிமனிதரின் நம்பிக்கையாக இருக்க முடியாது.

12:20 AM  
Blogger dondu(#11168674346665545885) said...

ஹ போட வந்து விட்டதல்லவா, பிறகு ஏன் பரமகம்சர் என்றே இருக்கிறது? பதிவை ஏற்றவாறு எடிட் செய்ய வேண்டியதுதானே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2:17 AM  
Blogger புதுமை விரும்பி said...

அன்பு ம்யூஸ்,

உங்களின் சில கேள்விகளுக்கு பதில் சொல்லும் விதத்தில், மனதின் எல்லை பற்றி தனி ஒரு பதிவு போட்டிருக்கிறேன். அதற்கான, சுட்டி இதோ.

http://pudhumaivirumpi.blogspot.com/2006/09/blog-post.html

12:41 AM  
Blogger புதுமை விரும்பி said...

வருகைக்கு நன்றி திருமூலன் அவர்களே,

/ஒரே சக்தி, பிரபஞ்ச சக்தி... அது நீங்கள் எப்படி விரும்புகிரீர்களோ அப்படி உங்களுக்கு காட்சிதரும்.

ஆனால் உங்களால் நீங்கள் அறிந்திராத ஒரு பொருளை உங்கள் எண்ண ஓட்டத்தில் எடுத்துச் செல்ல இயலாத காரணத்தால் அதனை உங்கள் மனதிற்கு தெரியாத, தெரிந்தாலும் நம்பவியலா பிம்பங்களின் வாயிலாக அறியமுடிவதில்லை.

இது நமது Limitation, அன்றி அதனுடயது அல்ல.//

மிக சரியாக சொல்லியிருக்கிறீர்கள். தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.

12:45 AM  
Blogger புதுமை விரும்பி said...

டோண்டு சார்,

நீங்கள் சொன்னமாதிரியே, மாற்றங்களைச் செய்துவிட்டேன். ஆனால், "comments" பகுதியில் என்னால் மாற்றம் செய்ய இயலவில்லை.

12:47 AM  

Post a Comment

<< Home

Free Hit Counter
Google PageRank

Your Ad Here