Friday, August 25, 2006

Probability theory தவறு என்று சொல்லும் micro-psychokinesis ஆராய்ச்சிகள்

முதலில் psychokinesis என்றால் என்னவென்று சொல்லிவிடுகிறேன். ஏழு அல்லது எட்டு வருடங்களுக்கு முன் மோகன்லால் நடித்து, தமிழில் வெளிவந்த படம் அது. அசோகன் என்று நினைக்கிறேன். அதில் ஒரு சிறுவன் ஒருவன் புத்த துறவியாக நடித்திருப்பான். அவனுக்கு சில அமானுஷ்ய சக்திகள்(psychic power) உண்டு. அதாவது, சில பொருள்களை பார்வை மூலமாகவே நகர வைப்பது. அதாவது மனோசக்தியின் மூலம் பொருட்களை நகர்த்துவது அல்லது இயக்குவது. இதையே ஆங்கிலத்தில் psychokinesis என்று சொல்வார்கள். இந்த மாதிரி அமானுஷ்ய சக்தியுள்ள ஒரு லட்சம் சிறுவர்களை கண்டெடுத்து, சைனா செய்து வரும் psychic research ரொம்ப பிரபலம். அது பற்றி தனியே ஒரு இடுகையில் பேசலாம். இது மாதிரி மனோசக்தியைப் பயன்படுத்தி காசு சுண்டி விடுதலில், சீட்டு விளையாடுதலில் அல்லது தாயம் விளையாடுதலில் தான் விரும்பும் விளைவை வரவைப்பது, micro-psychokinesis என்று அழைக்கப்படுகிறது. அதிக தடவையாக தலை வரவைத்தல், அல்லது ஜோக்கர் சீட்டை வரவைத்தல் அல்லது தாயம் விழவைத்தல் போன்ற சிலவற்றை எடுத்துக்காட்டுகளாக கூறலாம்.


probability theoryபடி தலை வருவதற்கு 50 சதவீத வாய்ப்புகளும், தாயம் விழவைப்பதற்கு, 12.5 சதவித வாய்ப்புகளும் உள்ளன. ஆனால், ராடின் மற்றும் நெல்சன் 1984களில் செய்த micro-psychokinesis ஆராய்ச்சிகள், probability theory தவறாகக்கூடும் வாய்ப்புகளை முன்வைக்கின்றன. அதாவது சில மனிதர்களால், இயற்கைக்கு வினோதமாக, அதிகப்படியான முறை தாங்கள் விரும்பிய ஒன்றை, (தலை அல்லது தாயம்) விழவைக்க முடிந்ததை இவர்களின் ஆராய்ச்சிகள் வெளிக்கொண்டுவந்தன. மேலும், மனிதன் தன் மனோசக்தியால், random gamesகளில் தான் விரும்பிய விளைவுகளை ஏற்படுத்த முடியும் என்பதை இவர்களின் கண்டுபிடிப்புகள் உறுதி செய்தன. அவர்களின் முடிவுகள், Foundations of physics என்ற இயற்பியல் பத்திரிக்கையில் 'Evidence for consciousness-related anomalies in random physical systems' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டன.இது ஒன்றும் ஆச்சரியமான விசயமாக எனக்குத்தெரியவில்லை. எனது 10 வயது அக்கா பெண்ணுடன், நிறைய முறை தாயம் விளையாடியிருக்கிறேன். அவள் பெரும்பாலான தடவைகள், தான் விரும்பிய எண்ணை, தாயக்கட்டையில் வரவைத்து காட்டியதுண்டு. அதனால், முடிந்த வரை அவளுடன் கூட்டு சேர்ந்து விளையாடி தாயத்தில் வெல்வதற்கு முயற்சி செய்வேன். (இது இன்னொரு விசயத்தையும், இங்கெ குறிப்பிட வைக்கிறது. அது என்னவென்றால், சீனாவின் psychic research, 9-13 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளிடம் இந்த விளையாட்டுகளில் விரும்பிய விளைவை ஏற்படுத்தும் அமானுஷ்ய சக்தி அதிகமிருப்பதாக தெரிவிக்கின்றன.)


இந்த கண்டு பிடிப்புகள், புதிதாக ஒன்றையும் சொல்லிவிடவில்லை. அதாவது, பொருட்களின் மீதான, அல்லது செயல்களைத் தொடர்ந்து வரும் விளைவுகளின் மீதான, மனோசக்தியின் தாக்கத்தினை நாம் தலைமுறை தலைமுறையாக கேள்விப்பட்டு வருகிறோம். இந்த அறிவியல் ஆராச்சிகள், இதன் இருப்பினை உண்மை என்று நிரூபித்திருக்கின்றன. ஆனால், எவ்விதம் இந்த தாக்கம் நடக்கிறது என்பது, இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது.

முடிவாக, கேள்வி ஒன்றைக் கேட்காமல் விட்டு விட்டால், நீங்கள் பின்னூட்டமாக எதை எழுதுவீர்கள்? அதற்காக ஒரு கேள்வி.

இந்து மதத்தில் இருக்கிற யாகம் வளர்த்தல் என்ற ஒன்றை psychokinesis முயற்சியாக பார்க்கலாமா?

28 Comments:

Blogger கார்திக்வேலு said...

let me see if my understanding is correct
tossing a coin for 100 times in exactly similar manner under similar situations will not guarentee 50 times head and 50 times tail right ?
(Well it could be close but we cant guarentee 50 / 50 exact ).

In other words it could be 49 heads / 51 tails ..and the person calling tails, could he be called the one with psychokinesis skills?.

The idea that we could wish the results we want is interesting .
In such a case we need to consider our "thought" itself as a physical force/energy to act on something.

More questions for me ....

Is randomness ...an extremely complex determined quality ?
Is thought a physical force/energy ?
If yes, was it caused/created by another "force"?

9:26 PM  
Blogger nagoreismail said...

பதிவு நன்றாகவும் உபயோகமாகவும் உள்ளது, நீங்கள் நாகூர் ரூமி எ௯ழுதிய கிழக்கு பதிப்பகத்தாரின் 'அடுத்த விநாடி' என்ற நூலை படித்து விட்டீர்களா?
அ.முஹம்மது இஸ்மாயில்

10:37 PM  
Blogger Vajra said...

சகுனி - சைகோ கை னி!! :D

12:18 AM  
Blogger புதுமை விரும்பி said...

வருகைக்கு நன்றி கார்த்திக்வேலு அவர்களே,

//In other words it could be 49 heads / 51 tails ..and the person calling tails, could he be called the one with psychokinesis skills?.//

உங்களின் இந்த கேள்வி, நிச்சயம் எல்லோருக்கும் தோன்றுகிற ஒரு கேள்வி. இது பற்றிய விரிவான விளக்கத்தை இன்று இரவு அளிக்கிறேன். இப்பொழுதைக்கு விடையை மட்டும் சொல்லிவிடுகிறேன்.

No; This cannot be called as psychokinesis. But this can be called as an experimental error arising from (less) number of trials.

உங்கள் மற்ற கேள்விகளுக்கும், விரிவான விளக்கத்தைக் கொடுக்க கடமைப்பட்டுள்ளேன். மீண்டும் வாருங்கள்.

12:43 AM  
Blogger புதுமை விரும்பி said...

வருகைக்கு நன்றி இஸ்மாயில் அவர்களே,

// பதிவு நன்றாகவும் உபயோகமாகவும் உள்ளது,
//

நன்றி.

//நீங்கள் நாகூர் ரூமி எ௯ழுதிய கிழக்கு பதிப்பகத்தாரின் 'அடுத்த விநாடி' என்ற நூலை படித்து விட்டீர்களா?//

படித்திருக்கிறேன் - ஒரு சில வருடங்களுக்கு முன்பு.

1:17 AM  
Blogger புதுமை விரும்பி said...

வருகைக்கு நன்றி வஜ்ரா,

// சகுனி - சைகோ கை னி!! :D//

:-)

2:06 AM  
Blogger G.Ragavan said...

நல்லதொரு ஆய்வுதான். எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை.

இந்த நிகழ்வை நான் வாழ்வில் சிலபல பொழுதுகளில் அனுபவித்திருக்கிறேன். ஒரு சிறிய எடு. குறிப்பிட்ட பாடல் எப்படியோ மூளைக்குள் வந்து மனது பாடிக்கொண்டிருக்கும். விரைவிலேயே அந்தப் பாட்டு ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் காணக்கிடைக்கும். புதுப்பாட்டுகள் அல்ல. கொஞ்சம் அரிய நல்ல பாட்டுகள்.

இந்த மாதிரி நிகழ்வுகள் சைக்கோகெனிசிஸ்சில் வருமா?

2:34 AM  
Blogger Muse (# 5279076) said...

இந்து மதத்தில் இருக்கிற யாகம் வளர்த்தல் என்ற ஒன்றை psychokinesis முயற்சியாக பார்க்கலாமா?

அன்பே உருவான புதுமைவிரும்பி,

அந்தணர்களின் தினசரி கடமையான அக்னிஹோத்திரம் பற்றி விதவிதமான கதைகள் உண்டு.

ஆதி ஷங்கரர் காலத்தில் புத்த, ஜைன மதங்கள் பெரும்பாலும் ஒழிந்துவிட்டன. அவற்றை ஒழித்து பெரும் ஆதிக்கத்துடன் இருந்த சில தத்துவங்களில் "கர்ம காண்டிகள்" என்று அழைக்கப்படுபவர்களின் கருத்துக்கள் முக்கியமானவை.

மழைக்கான ஹோமம் செய்தால் மழை பெய்யும், உடல் நலத்திற்கான ஹோமம் செய்தால் உடல் நலம் கிடைக்கும். இதில் கடவுள் எதற்கு? என்று வாதிட்டவர்கள் அவர்கள்.

என்னதான் ஷங்கராச்சாரியார் இவர்களை வென்றுவிட்டதாகக் கூறப்பட்டாலும் இன்னும் நடைமுறை ஹிந்து பழக்கங்களில் இவர்களின் ஆதிக்கமே நிலவுகின்றது.

புதுமைவிரும்பி, தங்களின் கேள்வி மேலும் சில கேள்விகளுக்கு வழிவகுக்கின்றது.

1. விளைவுகள் ஏற்படுவதற்கு மனோஷக்தி காரணமா?

2. மனோஷக்தியையும் தாண்டி, இது போன்ற சடங்குகள், செயல்கள் பலனளிக்கக்கூடியவையா?

3:21 AM  
Blogger புதுமை விரும்பி said...

வருகைக்கு நன்றி இராகவன்,

// நல்லதொரு ஆய்வுதான். எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை.//

ஆராய்ச்சி முடிவுகளை சந்தேகப்பட வேண்டியதில்லை. ஏனென்றால், வெளியிடப்படும் முடிவுகளை, யார் வேண்டுமென்றாலும், திரும்ப செய்து உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.


//இந்த நிகழ்வை நான் வாழ்வில் சிலபல பொழுதுகளில் அனுபவித்திருக்கிறேன். ஒரு சிறிய எடு. குறிப்பிட்ட பாடல் எப்படியோ மூளைக்குள் வந்து மனது பாடிக்கொண்டிருக்கும். விரைவிலேயே அந்தப் பாட்டு ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் காணக்கிடைக்கும். புதுப்பாட்டுகள் அல்ல. கொஞ்சம் அரிய நல்ல பாட்டுகள்.
இந்த மாதிரி நிகழ்வுகள் சைக்கோகெனிசிஸ்சில் வருமா? //

அட ஆச்சரியமான அநுபவம் தான்!!! இதை psychokinesis உடன் தொடர்பு படுத்த முடியாது. மாறாக, Clairvoyance என்ற ஒன்றுடன் தொடர்பு படுத்தலாம். இது எதிர்காலத்தில் நடக்க இருக்கிற, சில விசயங்களை முன்னதாக, காணக்கூடிய அநுபவத்தைக் குறிக்கிற வார்த்தையாகும். நீங்கள் இந்தியாவின் psychic researchக்கு மிகப்பொருத்தமான ஆளாக இருப்பீர்கள் போலும். விரைவில், இந்தியாவும் இது மாதிரி ஆராய்ச்சிகளில் ஆர்வம் காட்டும் என்று நம்புவோமாக.

7:56 AM  
Blogger புதுமை விரும்பி said...

This comment has been removed by a blog administrator.

7:56 AM  
Blogger புதுமை விரும்பி said...

This comment has been removed by a blog administrator.

7:57 AM  
Blogger Thekkikattan said...

புதுமை விரும்பி,

அருமையான 'சிந்தனையூட்டு' கேள்விகளை முன் வைத்திருக்கிறீர்கள்.

பின்னூட்டத்தில் 'கார்த்திக் வேலுவும்' சில நல்ல கேள்விகளை முன் வைத்திருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்பு நான் என்னை புதைக்கிறதா இல்லெ எரிக்கிறதா...? இப்படி ஒரு பதிவு இட்டிருந்தேன், அதில் நிறைய பின்னூட்டங்கள் இதனையொட்டி உரையாடி இருக்கிறோம்.

அதிலும் குறிப்பாக 'நாமக்கல் சிபி"க்கு அளிந்த பின்னூட்டங்களுக்கு... சாம்பிலுக்கு ஒன்று இங்கே...

சிபி, நீங்க உண்மையிலேயே நம்புறீங்களா நாமதான் முதன்முதல ஒரு விசயத்தை கண்டுபிடிச்சோம் அல்லது அது மாதிரி சிறப்பா யோசிச்சோம் அப்படின்னு. எனக்கு அதில கொஞ்சம் கூட உடன்பாடு கிடையாது, ஏன்னா, எல்லமே எப்பவுமே எதெல்லாம் நாம புதுசா கண்டுபிடிச்சாதவோ, அல்லது யோசிக்கிறதவோ நம்புற விசயங்கள் எல்லாம், நம்மை சுத்தி எப்பொழுதுமே இருந்து கொண்டுதான் இருக்கிறது.

உதாரணத்துக்கு நீங்க சொன்ன அந்த படப் பாடலின் வரிகள் என்னுடைய தலைப்புடன் ஒத்துப் போன விசயத்தை வைத்துக்கொள்வோம். அந்த பாடல் ஆசிரியருக்கு எனக்கு முன்பே அவரது விழிப்புணர்வின் உச்சத்தில் எட்டியிருக்கிறது, எனக்கு கொஞ்சம் தாமதமாக இப்பொழுதுதான் எட்டியது, எனவே எனக்கு இது புதிய அனுபவம், அதன் மூலமாக நாம் ஒரு உண்மையை தாமதமாக உணர்கிறோம் அவ்ளோதான். இது போலத்தான், எல்லா உண்மைகளுமே, எப்பொழுதும் இப் ப்ரபஞ்சத்தில் நிரம்பிக் கிடக்கிறது, நாமதான் நேரம் எடுத்துக் கொள்கிறோம், அவைகளை உணர்வதற்கு!

என்ன கொன்னுபுட்டேனா...ஒரு பதிவில் இதனைப் பற்றி எழுதியிருக்கிறேன், நேசி என்ற பெயரில்...ஆபூர்வக் காதல் என்ற தலைப்பில் வந்து கொண்டே இருக்கிறது.

8:21 AM  
Blogger Thekkikattan said...

புதுமை விரும்பி,

சில கார்த்திக் அவர்களின் கேள்விகளுக்கு எனக்குத் தெரிந்த புரிந்துணர்களை பகிர்ந்து கொள்ளலாமென நினைக்கிறேன்...

//Is thought a physical force/energy ?//

என்னைப் பொருத்த மட்டில் எண்ணங்கள் என்பது ஒரு சக்தியே அதன் திறன் மெருகூட்டப் படலாம், நமது எண்ணங்களின் குவிக்கும் திறனையும் அதன் பொருட்டு நாம் ஈடுபட்டிருக்கும் சீரியஸ்னெஸ்யும் கணக்கில் கொண்டு.

அவ்வாறு கைபெறப் பெற்ற எண்ண சக்தியை, உருவக சக்தியாக ஆக்கிக் காட்டலாம்.

நம் வாழ்வு இன்று எந்த நிலையில் இருக்கிறது என்பதனே நமது ஆழ் நிலை ஆவாக்களின் வெளிப்பாடுதானே, கார்த்திக், புதுமை விரும்பி.

ஒரு கட்டடம் எழும்பி நிற்கிறது என்றால் அது ஒரு தனிமனிதரின் சிந்தனையில் தானே முதலில் தோன்றி பிறகு அதுவே Physical Form எடுத்துக் கொள்கிறது. அது நம் கண் கூடாக காணும் பொழுது, ஏன் நமது ஆழ் நிலை சிந்தனையில் இது போன்ற நல் எண்ணங்கள் "நான் இதுவாக" வேண்டுமென்றோ அல்லது இந்த "இலக்கை" அடைய வேண்டுமென்றோ நீண்ட நாட்களாக அதன் பொருட்டு நம் எண்ணத்தை நிலை நிறுத்தும் பொழுது அதுவும் ஒரு சூழ்நிலையில் Physical Form எடுக்க முடியாது.

சாத்தியமே என்பது எனது நிலைப்பாடு. ஒரு முறை நான் "டைம்ஸ்" வார இதழில் எண்ணங்கள், பிரார்த்தனைகள் எப்படி உடல் வியாதிகளை குணப்படுத்துவதில் முக்கியத்துவம் பெறுகிறது என்பதனை உடலில் நடைபெறும் உயிரிய-வேதி மாற்றங்களை ஆராய்ந்து வெளியிட்டுருந்தார்கள்.

இப்பொழுதுதான் நமது முன்னோர்களின், மனத்திற்கு உள்ள பவர் கொஞ்சம் கொஞ்சமாக அறிவியலின் உள்ளே நுழைய ஆரம்பித்திருக்கிறது.

எனக்கு இதனைப் பற்றிக் கூட இங்க பேச ஆட்கள் இருக்கிறார்களே என்று காணும் பொழுது ரொம்ப்பவம் மகிழ்சியாக இருக்கிறது.

8:37 AM  
Blogger G.Ragavan said...

// புதுமை விரும்பி said...
வருகைக்கு நன்றி இராகவன்,

// நல்லதொரு ஆய்வுதான். எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை.//

ஆராய்ச்சி முடிவுகளை சந்தேகப்பட வேண்டியதில்லை. ஏனென்றால், வெளியிடப்படும் முடிவுகளை, யார் வேண்டுமென்றாலும், திரும்ப செய்து உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.


//இந்த நிகழ்வை நான் வாழ்வில் சிலபல பொழுதுகளில் அனுபவித்திருக்கிறேன். ஒரு சிறிய எடு. குறிப்பிட்ட பாடல் எப்படியோ மூளைக்குள் வந்து மனது பாடிக்கொண்டிருக்கும். விரைவிலேயே அந்தப் பாட்டு ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் காணக்கிடைக்கும். புதுப்பாட்டுகள் அல்ல. கொஞ்சம் அரிய நல்ல பாட்டுகள்.
இந்த மாதிரி நிகழ்வுகள் சைக்கோகெனிசிஸ்சில் வருமா? //

அட ஆச்சரியமான அநுபவம் தான்!!! இதை psychokinesis உடன் தொடர்பு படுத்த முடியாது. மாறாக, Clairvoyance என்ற ஒன்றுடன் தொடர்பு படுத்தலாம். இது எதிர்காலத்தில் நடக்க இருக்கிற, சில விசயங்களை முன்னதாக, காணக்கூடிய அநுபவத்தைக் குறிக்கிற வார்த்தையாகும். நீங்கள் இந்தியாவின் psychic researchக்கு மிகப்பொருத்தமான ஆளாக இருப்பீர்கள் போலும். விரைவில், இந்தியாவும் இது மாதிரி ஆராய்ச்சிகளில் ஆர்வம் காட்டும் என்று நம்புவோமாக. //


நன்றி புதுமை விரும்பி. சிறுவயதில் உடல்கடிகாரச் சோதனை பற்றிப் படித்துள்ளேன். biological clock பற்றிய ஆய்வில் தனியறையில் அல்லது வெறொரு நபருடன்....வெளியுலகத் தொடர்பின்றி ஒரு மாதம் இருப்பதை வைத்து ஆய்வு செய்வார்கள் என்று கேள்விப் பட்டுள்ளேன். அந்த ஆராய்ச்சி மிகப் புதுமையானதாக அப்பொழுது தோன்றியது. அதில் ஈடுபடுத்திக் கொள்ளும் ஆர்வம் இருந்தது. அதுபோல இந்த ஆய்வும் நடந்தால் கலந்து கொள்ள நான் ஆயத்தமாகவே இருக்கிறேன். :-)

8:51 AM  
Blogger புதுமை விரும்பி said...

அன்பான ம்யூஸ் அவர்களே,உங்கள் வருகைக்கு நன்றி.

நல்ல வேளை. இந்த கேள்வியைப்பற்றி யாரும் கவலைப்படாமல் போய்விடுவார்களோ என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அதை விவாதத்திற்குள் கொண்டு வந்ததற்கு நன்றி. யாகம் வளர்த்தலின் வியாபார நோக்கு பற்றி, இங்கே கவலைப்படாமல், அதன் அறிவியலை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். அதாவது, செயல்களின் விளைவுகள் மீதான, மனோசக்தியின் தாக்கம் ஒரு நிரூபிக்கப்பட்ட உண்மை. வேண்டிய விளைவுகளை ஏற்படுத்த (உதாரணமாக மழை வரவழைத்தல், நோயைச் சரிசெய்தல்) அந்த மனோசக்தியை குவிப்பதற்காகவே, இது மாதிரி சடங்குகள் நடத்தப்பட்டன. இதில் அதிக விலையுள்ள நெய் போன்ற பொருட்கள் பயன்படுத்தப்படுவதற்கும், அதைச் செய்பவரின் நம்பிக்கையை அதிகப்படுத்துவதற்கேயாகும். ஆனால், இந்த சடங்குகள் எந்த அளவிற்கு, வெற்றியை அல்லது சாதகமான விளைவுகளை ஏற்படுத்தின என்று நம்மிடம் கோப்புகள் ஏதுமில்லை.

இப்பொழுது உங்கள் மற்ற கேள்விகளுக்கு விடைகள்.

//1. விளைவுகள் ஏற்படுவதற்கு மனோஷக்தி காரணமா? //

நிச்சயமாக. இதற்கான விரிவான அறிவியல் விளக்கத்தை கார்த்திக் வேலுவிற்கான பதிலில் கொடுக்க இருக்கிறேன்.

//2. மனோஷக்தியையும் தாண்டி, இது போன்ற சடங்குகள், செயல்கள் பலனளிக்கக்கூடியவையா?//

நிச்சயமாக இல்லை (எனது சொந்த அபிப்பிராயப்படி). நம்பிக்கையில்லாமல் செய்யப்படும் சடங்குகள் எந்த விளைவையும் ஏற்படுத்துவதில்லை. மனிதனின் நம்பிக்கை அல்லது மனோசக்தியே எல்லா விளைவுகளுக்கும் காரணி. தண்ணீரை inject செய்து சில நோய்களைக் குணப்படுத்தும் செய்திகளைப் பற்றி படித்திருக்கிறேன். இங்கே சடங்குகள் என்பது வெறும் தண்ணீர் போலத்தான். உண்மையான மருத்துவன், நோயாளியிடம் உள்ள "டாக்டரைப் பார்த்துவிட்டு வந்தால் எல்லாம் சரியாகிவிடும்" என்ற நம்பிக்கையே.(இதைத்தான் placebo effect என்று சொல்வார்கள்)

9:35 AM  
Blogger dondu(#4800161) said...

சாத்தியக்கூறுகள் பற்றிய கோட்பாடு எவ்வாறு பொய்யாக்கப்படுவதாககக் கூற முடியும். ஒன்றை ஒன்று சார்ந்திராத, வெளி உந்துதல் ஏதும் இல்லாத நிகழ்வுகளுக்குத்தான் (independent, random events) இந்தக் கோட்பாடு பொருந்தும். டெலிகினெஸிஸ் வந்த உடனேயே அந்தச் சூழ்நிலை மாறி விடுகிறதே?

அன்புடன்,
டோண்டு ராகவன்

10:17 AM  
Blogger புதுமை விரும்பி said...

தெகா அவர்களே,

//அருமையான 'சிந்தனையூட்டு' கேள்விகளை முன் வைத்திருக்கிறீர்கள்.
பின்னூட்டத்தில் 'கார்த்திக் வேலுவும்' சில நல்ல கேள்விகளை முன் வைத்திருக்கிறார். //

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

//சில மாதங்களுக்கு முன்பு நான் என்னை புதைக்கிறதா இல்லெ எரிக்கிறதா...? இப்படி ஒரு பதிவு இட்டிருந்தேன், அதில் நிறைய பின்னூட்டங்கள் இதனையொட்டி உரையாடி இருக்கிறோம்.//

உங்கள் இடுகைக்கு சென்று படித்துவிட்டு, என் கருத்துக்களை சொல்கிறேன்.

2:10 PM  
Blogger புதுமை விரும்பி said...

தெகா அவர்களே,

//என்னைப் பொருத்த மட்டில் எண்ணங்கள் என்பது ஒரு சக்தியே அதன் திறன் மெருகூட்டப் படலாம், நமது எண்ணங்களின் குவிக்கும் திறனையும் அதன் பொருட்டு நாம் ஈடுபட்டிருக்கும் சீரியஸ்னெஸ்யும் கணக்கில் கொண்டு.

அவ்வாறு கைபெறப் பெற்ற எண்ண சக்தியை, உருவக சக்தியாக ஆக்கிக் காட்டலாம்.//

எண்ணங்கள் பற்றிய தங்கள் ஆழ்ந்த கருத்துக்களுக்கு நன்றி.

//நம் வாழ்வு இன்று எந்த நிலையில் இருக்கிறது என்பதனே நமது ஆழ் நிலை ஆவாக்களின் வெளிப்பாடுதானே, கார்த்திக், புதுமை விரும்பி.//

இதையே தான் தத்வமஸி (You are that) என்று ஏதோ ஒரு இந்து தத்துவம் சொல்கிறது. நண்பர் ம்யூஸ் அவர்கள் இது பற்றிய விவரமான விளக்கம்கொடுக்கக்கூடும்.
உங்களது, இந்த வாக்கியங்கள், எல்லோரும் புரிந்து உள்வாங்க வேண்டிய
மிக முக்கியமான வார்த்தைகள். இதையே, வேறு ஒரு விதமாக சொல்லவிரும்புகிறேன் (அல்லது ஏற்கனவே
யாரோ சொன்னதை, நான் என்னுடையதைப்போன்று உள்வாங்கியிருக்கலாம்)
The world is like a mirror and it just reflects what or who you are.

// ஒரு கட்டடம் எழும்பி நிற்கிறது என்றால் அது ஒரு தனிமனிதரின் சிந்தனையில் தானே முதலில் தோன்றி பிறகு அதுவே Physical Form எடுத்துக் கொள்கிறது. அது நம் கண் கூடாக காணும் பொழுது, ஏன் நமது ஆழ் நிலை சிந்தனையில் இது போன்ற நல் எண்ணங்கள் "நான் இதுவாக" வேண்டுமென்றோ அல்லது இந்த "இலக்கை" அடைய வேண்டுமென்றோ நீண்ட நாட்களாக அதன் பொருட்டு நம் எண்ணத்தை நிலை நிறுத்தும் பொழுது அதுவும் ஒரு சூழ்நிலையில் Physical Form எடுக்க முடியாது.//

If the thoughts are so intense, it will be materialised. பாலோ கொயெலொவின்(Paulo Coelho) ஆல்கெமிஸ்ட், (alchemist)
புத்தகத்தில் வருகிற இந்த விளக்கத்தை நினைவு படுத்துகின்றன உங்கள் வரிகள்.

//சாத்தியமே என்பது எனது நிலைப்பாடு. ஒரு முறை நான் "டைம்ஸ்" வார இதழில் எண்ணங்கள், பிரார்த்தனைகள் எப்படி உடல் வியாதிகளை குணப்படுத்துவதில் முக்கியத்துவம் பெறுகிறது என்பதனை உடலில் நடைபெறும் உயிரிய-வேதி மாற்றங்களை ஆராய்ந்து வெளியிட்டுருந்தார்கள்.//

இது பற்றி விரிவாக எழுதினீர்கள் என்றால் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

//இப்பொழுதுதான் நமது முன்னோர்களின், மனத்திற்கு உள்ள பவர் கொஞ்சம் கொஞ்சமாக அறிவியலின் உள்ளே நுழைய ஆரம்பித்திருக்கிறது.//

உண்மையான வலிமையான கருத்துக்கள், தங்களை எப்பொழுதும் நிறுவிக்கொள்ளும்.

//எனக்கு இதனைப் பற்றிக் கூட இங்க பேச ஆட்கள் இருக்கிறார்களே என்று காணும் பொழுது ரொம்ப்பவம் மகிழ்சியாக இருக்கிறது.//

எனக்கும் அப்படியே. தொடர்ந்து தங்கள் கருத்துக்களை விவாதங்களை முன்வையுங்கள். சேர்ந்தே புது
விசயங்களை அறிந்துகொள்வோம்.

2:40 PM  
Blogger புதுமை விரும்பி said...

//The idea that we could wish the results we want is interesting .
In such a case we need to consider our "thought" itself as a physical force/energy to act on something.//

The classical theories on measurements do not explicitly consider the presence of an observer. It means that the results are not affected by the observer.

But the recent theories (based on quantum mechanical description of the univserse) say that the observer is a part of an observation or measurement. Before the observer makes an obsrvation or measurement, the Schrodinger cat is in a mixed dead+alive state. So, indeed observer has considerable effect on the result. The mathematical formulation for the quantification is not developed so far. (Or may be I am not yet aware of)

Of course. We have to consider the thought as a form of energy. (See also Thekas explanations) But so far, the effect of thoughts on result (in an action) only has been reported. It has to be quantified and how actually it happens has to be still investigated.

3:23 PM  
Blogger புதுமை விரும்பி said...

In the net, I could locate some useful information about the observer-system interaction. It may be useful here.An observer is a person who makes measurements (observations) on a system to gain information about it. This information can be communicated to other people in the form of a description.

Our concept of an observer is based on considering a person with senses seeing, hearing, feeling or smelling something. Generally, scientific theories do not describe the properties of the observer because the subject of inquiry, that which is being described, is the observed rather than the observer.

The field of complex systems is interested in relationships. The observer and system are in a relationship. Thus, we are interested in developing a more precise notion of an observer, and the basic act of observation or measurement. The observer will then be in our theories. This work also connects with the problem of understanding how people sense and describe what they sense, which is part of the problem of understanding brain and mind.

Thus we need to start from a more general definition:

An observer is a system which, through interactions, retains a representation of another system (the observed system) within it.

The conventional view of an observer is of an objective observer. An objective observer is independent of both the system being observed and the rest of the environment. Implicitly there is an influence between the system and the observer. This influence is solely one-way through the effect of measurements that provide the observer with information about the system. Thus, the act of observation must cause an influence of the observed system on the observer.

Quantum mechanics modifies this because it says that the observer's measurements must also have an effect on the observed system. When the observed system is large this effect may be ignored, but when it is small enough it cannot be neglected in treating the time history of the observed system. The observed system has a discontinuity in its history at the time of measurement. This is described by wavefunction collapse. In the parallel universes picture, the observer and the observed have become entangled.

The importance of the objective observer to scientific studies is clear in the "double-blind" medical methodology which tries to eliminate effects of the observer on the outcome.

Additionally, it is generally assumed that the observer can construct an experiment in a controlled fashion subject only to limitations of physical law. This control is also an influence of the observer on the system.

Other approches to considering the observer and system interactions have been discussed in other contexts (e.g. cybernetics), and effective formulations of this relationship continue to be an ongoing area of research.

3:27 PM  
Blogger புதுமை விரும்பி said...

இராகவன்,

//சிறுவயதில் உடல்கடிகாரச் சோதனை பற்றிப் படித்துள்ளேன். biological clock பற்றிய ஆய்வில் தனியறையில் அல்லது வெறொரு நபருடன்....வெளியுலகத் தொடர்பின்றி ஒரு மாதம் இருப்பதை வைத்து ஆய்வு செய்வார்கள் என்று கேள்விப் பட்டுள்ளேன். அந்த ஆராய்ச்சி மிகப் புதுமையானதாக அப்பொழுது தோன்றியது. அதில் ஈடுபடுத்திக் கொள்ளும் ஆர்வம் இருந்தது. //


அட! உங்கள் அநுபவம் பற்றி விரிவாக அறிந்துகொள்ள மிக ஆவாலாயுள்ளது. நேரம் கிடைத்தால் இது பற்றி
எழுதுங்களேன்.

3:33 PM  
Blogger புதுமை விரும்பி said...

வாருங்கள் டோண்டு சார் அவர்களே,

//சாத்தியக்கூறுகள் பற்றிய கோட்பாடு எவ்வாறு பொய்யாக்கப்படுவதாககக் கூற முடியும். ஒன்றை ஒன்று சார்ந்திராத, வெளி உந்துதல் ஏதும் இல்லாத நிகழ்வுகளுக்குத்தான் (independent, random events) இந்தக் கோட்பாடு பொருந்தும். டெலிகினெஸிஸ் வந்த உடனேயே அந்தச் சூழ்நிலை மாறி விடுகிறதே?//

மிக முக்கியமான கேள்வியைக் கேட்டு இருக்கிறீர்கள். அதற்கான, என்னால் முடிந்த ஒரு பதில், இதோ.

அதாவது, இது வரை உள்ள கோட்பாடுகள்,
பார்வையாளனைப் பற்றி கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. ஆனால், பார்வையாளன், விளைவுகளை பாதிக்கிறான்,
தன் விருப்பத்திற்கிணங்க மாற்றிக்கொள்கிறான் என்பது சமீபத்திய ஆராய்ச்சிகளில் வெளிவந்துள்ள உண்மை.
அதோடு, பார்வையாளன் இல்லாத அளவிடுதல் என்று ஒன்று இல்லை. அப்படியென்றால், ஒன்றை ஒன்று சார்ந்திராத, வெளி உந்துதல் ஏதும்
இல்லாத நிகழ்வுகள் என்ற ஒன்றும் உலகத்தில் இல்லை. In other words, there are no such random events on the earth. If that is the case, what is the need for probability theory which talks about random events? So, it has to be rewritten such that the effect of observer has been included appropriately.

3:53 PM  
Blogger Thekkikattan said...

புதுமை விரும்பி,

//But so far, the effect of thoughts on result (in an action) only has been reported. It has to be quantified and how actually it happens has to be still investigated.//

எப்படி எண்ணங்களின் சக்தி வெளிப்பாட்டை அல்லது அதன் திறனை நாம் அளவுகோலிட்டு சொல்ல முடியும் என்பதற்கு பல அறிவியல் சார்ந்த சோதனைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக புத்த மாங்குகளின் மீது நடத்தப் பட்டிருக்கிறது.

ஏன் நம்மூர் சில சுவாமிஜிகளின் மீது கூட அது நடத்தப்பட்டதாக அறிகிறேன். உதாரணத்திற்கு குறிப்பிட்ட உடம்பின் பகுதியை சூடேற்றிக் காண்பிப்பது, அல்லது விரும்பிய இலக்கில் இதய துடிப்பை அதீதப் படுத்தி அதற்குமேல் அதன் துடிப்பினை கணக்கீட முடியாத நிலையில் துடிப்பிக்க செய்வதென்று. எண்ணங்களின் சக்தி அறிவியல் பூர்வமாக அறியப்பட்டுள்ளது.

புத்த மாங்குகள் குளிப்பிரதேசங்களில் வாழும் பொருட்டும் எவ்வாறு போதுமான உடைகளின்றி அதனை பொருத்து வாழ்கிறார்கள் என்பதே பல அறிவியல் ஆய்வாளார்களின் பார்வைக்கு கொணரப்பட்டு அதிலும் ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு மீண்டும் எண்ணங்களின் திறன் நமது உடலில் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

இன்னும் நமது அறிவியல் கணக்கீட்டுப்படி இதனை சாதரண, தின வாழ்கையில் மனிதருகளுக்கிடையில் உள்ள எண்ண வேறுபாட்டை கண்டறிய வேண்டுமெனில், இருபாலரைக் கொண்டு கண்டறியாலாமே.

பொதுவாக நல்ல சுகாதாரமான எண்ணங்களை ஊட்டி வளர்க்கப் பெற்ற குழந்தைகளுக்கும், அவ்வாறு கிடைக்கப் பெறாத குழந்தைகளில் பின்னாலில் எவ்வாறு தனது வாழ்வை அமைத்துக் கொள்கிறது என்பதனை ஆராய்யும் பொருட்டும், அறிந்து கொள்ளலாமல்லவா.

4:33 PM  
Blogger Sivabalan said...

வித்தியாசமான பதிவு.. நல்ல பதிவும் கூட..

பார்போம் இதன் விளைவுகள் எவ்வாறு உள்ளன என்று.. அறிவியல் என்பது புது புது விசயங்கள் கண்டுபிடிப்புகள் என கொண்டதுதான்...

5:14 PM  
Blogger கார்திக்வேலு said...

what G.R is referring to is some form of premonition I guess..the feeling that "something is going to happen" and that thing actually happening.

PK is different in the sense ..it explains that we could wish something to happen the way we want it to be.

as TK said
//அவ்வாறு கைபெறப் பெற்ற எண்ண சக்தியை, உருவக சக்தியாக ஆக்கிக் காட்டலாம்.//

Yes, true first we need to identify and ascertain...by just thinking can we make something happen(no physical action what so ever) .If yes, can that process be "repeated" with any certainity under different circumstances?

சடங்கு என்பது ..தத்துவத்தின் வெளிப்பாடான ஒரு நிகழ்வே என்று எங்கேயோ படித்த ஞாபகம்.

யாகம் என்பது ஒரு நிகழ்வு ...அதற்கு கண்டிப்பாக ஒரு வெளியீடு இருக்கும் ..ஆனால் அந்த நிகழ்வு எது என்பதை அறுதியாகக் கூற முடியுமா?

சில குறிப்பிட்ட இயற்கை விதிகளுக்கு உட்பட்டு இயங்கும் நாம் , அந்த விதிகளுக்கு வெளியாக / புறம்பாக ஒரு
காரியத்தை நிகழ்த்த முடியுமா .
இல்லை அந்த நிகழ்வையும் இதுவரை நாம் கண்டு அறியாத ஒரு விதி இயக்குகிறதா.


----------------
//In other words, there are no such random events on the earth. If that is the case, what is the need for probability theory which talks//

Is randomness ...a mixture of chaos and order?
could it be like this , that we have order in a smaller scale ...and chaos
at larger scale , so that some events are predictable ..but not always i mean in absolute terms .

11:38 PM  
Blogger புதுமை விரும்பி said...

தெகா உங்களின் புதிய தகவல்களுக்கு நன்றி. நானும் சில ஆன்மிகவாதிகளின் மீதாக நடத்தப்பட்ட
மூளை அலைகள் (brain waves) பற்றிய ஆராய்ச்சிகளை அறிவேன். அது பற்றிய விரிவான செய்திகளை படித்துக்கொண்டிருக்கிறேன்.

12:55 PM  
Blogger புதுமை விரும்பி said...

சிவபாலன், உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

12:58 PM  
Blogger புதுமை விரும்பி said...

Hello Karthik,

//Is randomness ...a mixture of chaos and order?
could it be like this , that we have order in a smaller scale ...and chaos
at larger scale , so that some events are predictable ..but not always i mean in absolute terms .//

My feeling is that no event on the earth is predictable. My argument goes like this. To predict the evolution of a system we should atleast write down the phase-space of the system at a time, t.
But we have limitation in storing this information. With the present resources we may be able to write down upto a decimal place of 100 and after that we have to truncate the data anyway. So, even this much inaccuracy is enough to explode the system after sometime. The information I have given will not be surprising you if you are aware of BUTTERFLY EFFECT. May be you can add your comments on this.

1:16 PM  

Post a Comment

<< Home

Free Hit Counter
Google PageRank

Your Ad Here