Thursday, September 14, 2006

அபரிமித தகவல்சுமை (information overload)

இந்த நிமிடத்தின் (20:59 GMT ஸெப் 14, 2006) உலக மக்கள் தொகையாக, 6,544,087,075 என்ற மிகப்பெரிய எண்ணை உலக மக்கள் தொகைக் கடிகாரம் (world population clock) காட்டி பயமுறுத்துகிறது. இத்தனை மக்களுக்கும் பொதுவான, செய்தி தரும் ஊடகமான இணையத்தில் மொத்தம் எத்தனை பக்கங்கள் என்று பார்த்தால், தலை சுற்றுகிறது. கூகுலின் தகவல் தொகுப்பில் அதன் தொடுப்புச்சொல் தேடலுக்கு (for searching key-words), உபயோகிக்கும் பக்கங்களின் எண்ணிக்கை 8,058,044,651. இதைத் தவிர, கூகுலின் தொகுப்பில், சேர்க்கப்படாத எத்தனையோ, இணைய தளத்தின் பக்கங்கள், அங்குமிங்குமாய் சிதறிக்கிடக்கின்றன. அடுத்த இன்னொரு பயமுறுத்தக்கூடிய தகவல் என்னவென்றால், உலகில் 50 மில்லியன் வலைப்பூக்கள் இருக்கின்றன என்று டெக்னோரட்டியின் முகப்புப்பக்கம் சொல்கிறது. ஒவ்வொரு வலைப்பூ அன்பரும், வாரத்திற்கு இருமுறை பதிவு செய்கிறார் என்றால், ஆறு மாதத்தில் உருவாக்கப்படும் மொத்த பக்கங்களின் எண்ணிக்கையை நீங்களே கணக்கு போட்டுய்பாருங்கள். ஒரே ஒரு ஆறுதலான விசயம், இந்த வலைப்பூக்கள், எல்லா மொழிகளிலும் எழுதப்படுகின்றன. ஆனபோதிலும், எல்லா தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ள இணையங்கள் மற்றும் வலைப்பூக்கள் ஒரு மனிதனின் வாசிப்பிற்கு மிக மிக அப்பாற்பட்டவை. இப்படி அபரிமித தகவல்களால் வரும் மனச்சோர்வைத் தான் information anxiety என்று சொல்வார்கள். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் அபரிமித தகவல்களின் காலத்தை, age of information-overload என்று சொல்லலாம்.


இந்த information anxiety என்பது பற்றி ஒரு சிறிய உதாரணம் மூலம் விளக்க விரும்புகின்றேன். உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு இடத்திலிருந்து, இன்னொரு இடத்தை அடைய விரும்புகிறீர்கள். இரண்டு அல்லது மூன்று சாத்தியமான வழிகள் மட்டும் இருந்துவிட்டால், ஓரளவிற்கு, எந்த வழியில் செல்வது என்று முடிவு செய்வது எளிது. அப்படியில்லாமல்,
நூற்றுக்கும் மேலான சாத்தியமான வழிகள் இருந்துவிட்டால், உங்கள் நிலைமை என்னவாகும்? இந்த அபரிமித தகவல்களின் காலகட்டத்தில், அதே கஷ்டங்களைத் தான், ஒவ்வொரு மனிதனும், வெவ்வேறு விதத்தில் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். ஒரு கேமிரா வாங்கும் போது அல்லது ஒரு பல்கலைகழகத்தில் சேரும்போது என்று ஒவ்வொரு இடத்திலும் முடிவெடுக்க அதிகமாய் யோசிக்க வேண்டியிருக்கிறது.


ஆனால், சந்தோசமான விசயம் என்னவென்றால், இந்த 8 பில்லியன் இணைய பக்கங்களிலும், நாம் விரும்பும் தகவல்களைக் கண்டெடுத்து கொடுப்பதற்கான இயந்திரங்களான (search-engines) கூகுல், யாகூ, ஏ.ஒ.எல் போன்றவற்றால், நாம் ஓரளவு, தப்பித்துள்ளோம்.
ஆனால், ஒரே ஒரு அச்சுறுத்தலை மட்டும் முன்வைத்து, இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.


கடல் போன்ற தகவல்தொகுப்பிற்கும், மனிதர்களுக்கும் இடையே இந்த இயந்திரங்கள் மட்டுமே சர்வாதிகாரத்தனத்தோடு பணிபுரியப்போகின்றன. தங்கள் விருப்பப்படி ஒரு முக்கியமான தகவலை பின்னுக்குத்தள்ளி, இன்னொரு தகவலை முன் வைக்க வாய்ப்பு இருக்கின்றது. இன்னொரு விதமாக சொல்ல வேண்டுமென்றால், காசு கொடுக்கும் கம்பெனிகளை, தேடுதலில் முதன்மையாக வரவைக்க வாய்பிருக்கின்றது.



அடுத்த படியாக கருத்தியல் ரீதியான சர்வாதிகாரம். இந்திய பாட புத்தகங்களில் நடந்த கோல்மால் வேலைகளைப் பற்றி நீங்கள் கேள்விப் பட்டிருப்பீர்கள். இதேமாதிரியான கருத்தியல் ரீதியான திரிபுகளை, புறட்டுகளை இணையத்தில் தேடுபவரின் முன், வைக்க மிகவும் வாய்ப்பிருக்கிறது. இதை ஒரு உதாரணத்தின் மூலம் விளக்குவது அவசியம் என்று நினைக்கிறேன். நீங்கள் கூகுலில் மகரிஷி விளைவு (Maharishi effect) என்ற வார்த்தையைப்போட்டு தேடுங்கள். முதலில் வரும் சில பக்கங்கள், இந்த விளைவை உண்மையென்றும், அதன் பின் வரும் சில பக்கங்கள், இந்த விளைவைப் பொய் என்றும் சொல்லியிருப்பதைப் பார்ப்பீர்கள். இந்த விளைவிற்கு ஆதாரமான தகவல்கள், உலகின் முக்கிய அறிவியல் பத்திரிக்கைகளில் (international scientific journals) விரிவாக எழுதப்பட்டவை. அதனால், இந்த விளாவை பொய் என்று முழுவதுமாக ஒதுக்கிவிட முடியாது. இருந்த போதிலும், பின்னால் வரும் மாற்றுக்கருத்துக்களைச் சொல்லும் பக்கங்கள் (அதை எழுதியர் உண்மையில் எந்த அளவிற்கு நம்பகமானவர் என்று நமக்குத் தெரியாது) நிச்சயம், இந்த கருத்துக்களின் மீது ஒரு சந்தேகப் பார்வையை விதைத்துவிடுவதில் வெற்றியடைகின்றன. இதே மாதிரியான இன்னும் சில பக்கங்களை படிப்பவர் முன் வைத்தால், ஒரு கால கட்டத்தில் அவர் இந்த விளைவின் மீது முழுவதும் நம்பிக்கை இல்லாதவறாய் மாறிவிடக் கூடும்.


அதனால், இந்த தொடுப்புச்சொல் தேடும் இயந்திரங்களைப் பயன்படுத்தும் போது. இந்த அபாயத்தைப் பற்றி அறிந்தவராய் நாம் இருக்க வேண்டும். அதோடு, இந்த இயந்திரங்களும், தாம் வரிசைப்படுத்திதரும் தகவல்களின் நம்பகத்தன்மை மற்றும் வலைப்பூவிற்கு அல்லது இணையத்தின் உரிமையாளரின், அவர் எழுதிய விசயங்கள் பற்றிய அறிவு ஆகிய தகவல்கள் நமக்கு கிடைக்கக்கூடியவையாய்ச் செய்ய வேண்டும்.

3 Comments:

Blogger புதுமை விரும்பி said...

testing ....

1:14 AM  
Blogger வஜ்ரா said...

முன் குறிப்பு: பதிவுக்கு சம்பந்தமில்லாதது. உங்கள் ஈ மெயில் விலாசம் கிடைக்காதனால் இங்கு பின்னூட்டமிடுகின்றேன்.

புதுமை விரும்பி,

தமிழ் சர்கிள் பதிவில் உங்கள் பின்னூட்டம் கண்டேன்...iit பற்றியது.

அந்த கட்டுரை தவறான கருத்து தான் முன்வைக்கிறது. தமிழ் சர்கிள் என்பது ஒருவர் நடத்தும் பதிவு அல்ல. ஒரு கூட்டு முயற்சி.
அதில் contribute செய்பவர்கள் பெரும்பாலும் கம்யூனிச கொள்கையால் பீடிக்கப்பட்டவர்கள்.

IIT க்களில் இட ஒதுக்கீடுக்கு எதிராக கோஷங்கள் வலுத்த நிலையில் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவுக் கொழுந்துகள் (usual suspects - commies) ஏகத்துக்கு பிரச்சாரம் செய்கின்றனர். அதில் அந்த ஜாதி வெறி தேச துரோக institute என்றெல்லாம் கூப்பாடு போடுகின்றனர்.

ஒரு விஷயமும் தெரியாமல் இப்படி கத்தும் இந்த கூட்டத்தை சொல்லி ஒரு பிரயோசனமும் இல்லை.

திருமாவளவன் IITல் லெக்ச்சர் கூட அடித்திருக்கிறார். ஜாதி வெறி பிடித்தவர்கள் இப்படி ஒரு சாதிக் கட்சியின் தலைவரை iitக்குள் விட்டு lecture அடிக்கச் சொல்வார்களா...?

ஜனநாயகத்தில் எதிர் கருத்தை கேட்டுக் கொள்ளும், சொல்லும் உரிமை எல்லோருக்கும் உண்டு. at the same time we agree to disagree.

இதை இந்த கம்யூனிசச் சிந்தனையாளர்கள் உணரவே மாட்டார்கள். இந்த கம்யூனிச வைரசுக்கு மருந்து effective immunization மட்டுமே. அமேரிக்கா போல் கம்யூனிச சிந்தனைகள் தேச விரோதம் என்று சிறு பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்து அதன் பரவலைத் தடுக்காவிடில் ஒரு ரஷ்யா, ஒரு க்யூபா, அல்லது ஒரு வெனிசூலா போல் இந்தியா என்றாகிவிடும்.

iit, iim போன்ற கல்விக்கூடங்கள் நேரு அவர்கள் தூரப்பார்வை கொண்டு சிந்தித்ததன் விளைவுகள். நம்முடன் சேர்ந்து நம் நாட்டை பிரித்து நாடு உருவாக்கிக் கொண்ட பாகிஸ்தானோ வங்கதேசமோ நம்மளவிற்கு IT, engineering, மேலாண்மை போன்ற துரைகளில் சாதிக்காமல் தீவிரவாதத்தில் ஈடுபட்டு நாட்டின் வருங்காலத்தைத் தொலைக்கின்றனர் என்றால் அங்கே இது போல் சிந்திக்கத் தக்க தலைவர்கள் வரவில்லை என்பதே அர்த்தம்.

இவ்வளவு பேசி IIT, IIM ஐ ஏசும் இந்த தமிழ்வட்டம் குளுவில் எத்தனை பேர் சைன்ஸ் பேப்பரில் கோட்டடித்திருப்பார்கள் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.

இதை மனதில் வைத்துக் கொண்டு உங்கள் பதிவு iit, iim பற்றி தெளிவு படுத்தட்டும். திரு. ரவிஸ்ரீநிவாஸ் சீக்கிரமே ஒரு பதில் பதிவும் போடுவார் என்று நம்புகின்றேன்.

ஷங்கர்.

2:32 AM  
Blogger புதுமை விரும்பி said...

வருகைக்கு நன்றி வஜ்ரா. தங்கள் ஊக்கமுட்டும் வார்த்தைகளுக்கு நன்றி.

3:23 AM  

Post a Comment

<< Home

Free Hit Counter
Google PageRank

Your Ad Here