Monday, October 16, 2006

ஆம்ஸ்டெர்டாம்: ஒரு பயணக்குறிப்பு - I


பெல்ஜியத்தை ஐரோப்பாவின் இதயம் என்று சொல்வார்கள். காரணம், மற்ற ஐரோப்பிய நாடுகளான, ஜெர்மனி, ப்ரான்ஸ், ஸ்விட்சர்லாந்து, ப்ரிட்டன், நெதர்லாந்த், லக்சம்பர்க் மற்றும் பல நாடுகளையும் இணைக்கும் இருப்புப் பாதைகள், பெல்ஜியத்தை மையமாக கொண்டு இயங்குகின்றன. அதோடு, ப்ரஸ்ஸல்ஸ், ஐரோப்பாவின் மிக முக்கிய நகரங்களான ஆர்ம்ஸ்டெர்டாம், லக்சம்பர்க், பாரிஸ், லண்டன், ஸ்ட்ராஸ்பர்க், ஷுரிக், பெசில், கொலன், ஃப்ராங்க்பர்ட் போன்ற நகரங்களை மிக எளிதாக விரைவு ரயில்கள் மூலம் இணைக்கிறது.

இப்பொழுது ஆம்ஸ்டெர்டாம் நோக்கிப் போவதற்கு முன், ஐரோப்பாவில் ரயில் போக்குவரத்து பற்றி சில முக்கியமான விசயங்களைப் பார்ப்போம். ப்ரஸ்ஸல்ஸிலிருந்து, பாரிஸ் 336 கி மீ தூரத்தில் இருக்கிறது. இதைக் கடப்பதற்கு, தாலிஸ் என்ற விரைவு ரயில் எடுத்துக்கொள்ளும் நேரம் 1 மணி 27 நிமிடங்கள் மட்டுமே. அதாவது, 237 கிமீ/மணி என்ற வேகத்தில் பயணிக்கிறது அந்த ரயில். இன்னொரு தகவல. ப்ரஸ்ஸல்ஸிலிருந்து, லண்டன் செல்வதற்கு ஆகும் நேரம் 2 மணி 20 நிமிடங்களே! உங்கள் பயணத்தை, நீங்கள் லில்லியிலிருந்து (ஃப்ரான்ஸ்) தொடங்குவீர்கள் என்றால், நீங்கள் புறப்படும் நேரத்திற்கு முன்பே ஆஸ்போடில் (இன்கிலாந்து) இருப்பீர்கள்!! அது எப்படி?

அடுத்த படியாக பட்ஜெட் விசயத்திற்கு வருவோம். இங்கே வார இறுதியில் ஊர் சுற்றி வருவது ரொம்பவும் மலிவானது. மற்ற நாட்களில் பயணப்படுவதைக் காட்டிலும் 10 - 20 சதவீதம் பயணச்சீட்டு விலை குறைவு. இது எல்லா நாடுகளுக்குச் சென்று வரவும் பொருந்தாது. (உதாரணமாக பாரிசிற்கு, வாரத்தின் வேலை நாட்களில் சென்று வருவது மிகவும் மலிவானது.) ஆனால், ஹாலந்துக்கோ, லகஸம்பர்க்கிற்கோ இது பொருந்தும். அதோடு, வார இறுதிச் சலுகைப் பயணம் வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்குத் தொடங்கி, ஞாயிறு நள்ளிரவு வரை பொருந்தும். நாங்கள் வாங்கியிருந்த பயணச்சீட்டின் விலை 40 யுரோ!!! (Rs 2220)





விடியற்காலை 4 மணிக்கே எழுந்து, நூடுல்ஸ் மற்றும் புளியோதரை செய்து, பாத்திரங்களில் நிரப்பிக்கொண்டு, 7.20 மணிக்கான ரயிலைப் பிடித்து, ஆம்ஸ்டெர்டாமை நோக்கிச் சென்றோம். ஒருகாலத்தில் எனது சிறு வயதில், குடும்பத்தோடு திருச்செந்தூர், இராமேஸ்வரம் அல்லது கன்னியாகுமரி சுற்றுலா செல்ல, இப்படித் தான் புளியோதரை, துவையல் தயார் செய்துகொண்டு சென்றுவந்தது ஞாபகத்திற்கு வருகிறது. இப்பொழுது குளிர்காலம் தொடங்க ஒரு சில வாரங்களே இருக்கின்றன. அதனால், குளிரின் கடுமை அந்த காலை நேரத்தில் உணரும் அளவிற்கு இருந்தது. உங்களுக்கு ஒரு அறிவுரை! ஐரோப்பாவில், உங்கள் ஊர் சுற்றும்
படலத்தை, முடிந்த அளவிற்கு, கோடை முடிவதற்குள்ளாகவே வைத்துக்கொள்ளுங்கள்.


பயண நேரம் மூன்று மணி நேரம். இடையில், ஐந்தாறு நிலையங்களில் ரயில் நின்றது. இந்த தடத்தில் உள்ள முக்கியமான இடங்களாக ஆன்ட்வெர்பன் (பெல்ஜியம்), ரோஸெந்தால் (ஹாலந்து), தி ஹேக் (ஹாலந்து) போன்ற இடங்களைச் சொல்லலாம். ஆண்ட்வெர்பன் மற்றும் ஆம்ஸ்டெர்டாம் வைர நகைகளுக்கு பெயர் போனவை. ஒருவர் விரும்பினால், ஆண்ட்வெர்பன் வைரத் தொழிற்சாலையைப் பார்த்துவிட்டு வரலாம். தூய்மையான வைரம் வேண்டுமென்றால், இந்த இடங்களில் வாங்கிக்கொள்வது நல்லது.




சில தொழிற்சாலைகளில், வைர கற்களை எப்படி தூய்மைப் படுத்துவது என்பது பற்றிய நேரடியான செய்முறை விளக்கம் கொடுக்கிறார்கள். நீங்கள் மேலே பார்க்கும் படங்களில் இரண்டுமே வைரக்கற்கள் தான். இரண்டாவது, பாலிஸ் செய்யப்பட்டதற்குப் பின்!


இந்த இடத்தில் ஆண்ட்வெர்பனைப் பற்றி சில விசயங்களைச் சொல்வது நல்லது என்று நினைக்கிறேன். ஆண்ட்வெர்பன், பெல்ஜியத்தின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்று. இதுவே உலக வைர வரத்தக மையம் என்று அழைக்கப்படுகிறது. இன்னொரு அதிசயமான, இந்தியன் என்ற முறையில் பெருமை கொள்ளத்தக்க தகவல், இங்கே 400க்கும் மேலான, இந்திய (குஜராத்தி) குடும்பங்கள் இருக்கின்றனவாம். இங்கே நடைபெறுகிற வைர வியாபாரத்தின் தூண்கள் என்று இவர்களைச் சொன்னால் மிகையாகாது. இவர்களுக்கென்று, ஒரு கிரிக்கெட் விளையாடும் மைதானம், திரையரங்கம் மற்றும் ஜைன் கோயில் என்று எல்லாம் உண்டு. ஆச்சரியப்படவேண்டிய விசயம் தான்!!! அதை விட இன்னொரு
சந்தோசப்படவேண்டிய தகவல், இங்கே நடைபெறும் வைர வணிகத்தில் இந்தியர்களின் பங்கு கடந்த 20 வருடங்களில் 25 சதவீதத்திலிருந்து 65 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. அதோடு, இவர்களுக்கு போட்டியாளர்களான யூதர்களின் பங்கு 70 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக வீழ்ந்திருக்கிறது. இதற்குக் காரணம் யூதர்களின் மதம் தான் என்றால் நீங்கள் நம்புவீர்களா? சூரியன்
உதித்தபின் கடையைத் திறப்பதும், சூரியன் மறைந்த பின் கடையை மூடிவிடும் யூதர்களால், எப்பொழுது வேன்டுமென்றாலும், கடையைத் திறந்து வைத்திருக்கும் இந்தியர்களோடு போட்டி போட முடியாமல் போனது ஆச்சர்யமில்லை தான்.

அடடா! ஆண்ட்வெர்பனிலேயே அதிக நேரம் செலவழித்துவிட்டோம். மீண்டும், நமது ஆம்ஸ்டெர்டாம் நோக்கிய பயணத்தைத் தொடர்வோமா?





Thursday, September 14, 2006

அபரிமித தகவல்சுமை (information overload)

இந்த நிமிடத்தின் (20:59 GMT ஸெப் 14, 2006) உலக மக்கள் தொகையாக, 6,544,087,075 என்ற மிகப்பெரிய எண்ணை உலக மக்கள் தொகைக் கடிகாரம் (world population clock) காட்டி பயமுறுத்துகிறது. இத்தனை மக்களுக்கும் பொதுவான, செய்தி தரும் ஊடகமான இணையத்தில் மொத்தம் எத்தனை பக்கங்கள் என்று பார்த்தால், தலை சுற்றுகிறது. கூகுலின் தகவல் தொகுப்பில் அதன் தொடுப்புச்சொல் தேடலுக்கு (for searching key-words), உபயோகிக்கும் பக்கங்களின் எண்ணிக்கை 8,058,044,651. இதைத் தவிர, கூகுலின் தொகுப்பில், சேர்க்கப்படாத எத்தனையோ, இணைய தளத்தின் பக்கங்கள், அங்குமிங்குமாய் சிதறிக்கிடக்கின்றன. அடுத்த இன்னொரு பயமுறுத்தக்கூடிய தகவல் என்னவென்றால், உலகில் 50 மில்லியன் வலைப்பூக்கள் இருக்கின்றன என்று டெக்னோரட்டியின் முகப்புப்பக்கம் சொல்கிறது. ஒவ்வொரு வலைப்பூ அன்பரும், வாரத்திற்கு இருமுறை பதிவு செய்கிறார் என்றால், ஆறு மாதத்தில் உருவாக்கப்படும் மொத்த பக்கங்களின் எண்ணிக்கையை நீங்களே கணக்கு போட்டுய்பாருங்கள். ஒரே ஒரு ஆறுதலான விசயம், இந்த வலைப்பூக்கள், எல்லா மொழிகளிலும் எழுதப்படுகின்றன. ஆனபோதிலும், எல்லா தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ள இணையங்கள் மற்றும் வலைப்பூக்கள் ஒரு மனிதனின் வாசிப்பிற்கு மிக மிக அப்பாற்பட்டவை. இப்படி அபரிமித தகவல்களால் வரும் மனச்சோர்வைத் தான் information anxiety என்று சொல்வார்கள். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் அபரிமித தகவல்களின் காலத்தை, age of information-overload என்று சொல்லலாம்.


இந்த information anxiety என்பது பற்றி ஒரு சிறிய உதாரணம் மூலம் விளக்க விரும்புகின்றேன். உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு இடத்திலிருந்து, இன்னொரு இடத்தை அடைய விரும்புகிறீர்கள். இரண்டு அல்லது மூன்று சாத்தியமான வழிகள் மட்டும் இருந்துவிட்டால், ஓரளவிற்கு, எந்த வழியில் செல்வது என்று முடிவு செய்வது எளிது. அப்படியில்லாமல்,
நூற்றுக்கும் மேலான சாத்தியமான வழிகள் இருந்துவிட்டால், உங்கள் நிலைமை என்னவாகும்? இந்த அபரிமித தகவல்களின் காலகட்டத்தில், அதே கஷ்டங்களைத் தான், ஒவ்வொரு மனிதனும், வெவ்வேறு விதத்தில் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். ஒரு கேமிரா வாங்கும் போது அல்லது ஒரு பல்கலைகழகத்தில் சேரும்போது என்று ஒவ்வொரு இடத்திலும் முடிவெடுக்க அதிகமாய் யோசிக்க வேண்டியிருக்கிறது.


ஆனால், சந்தோசமான விசயம் என்னவென்றால், இந்த 8 பில்லியன் இணைய பக்கங்களிலும், நாம் விரும்பும் தகவல்களைக் கண்டெடுத்து கொடுப்பதற்கான இயந்திரங்களான (search-engines) கூகுல், யாகூ, ஏ.ஒ.எல் போன்றவற்றால், நாம் ஓரளவு, தப்பித்துள்ளோம்.
ஆனால், ஒரே ஒரு அச்சுறுத்தலை மட்டும் முன்வைத்து, இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.


கடல் போன்ற தகவல்தொகுப்பிற்கும், மனிதர்களுக்கும் இடையே இந்த இயந்திரங்கள் மட்டுமே சர்வாதிகாரத்தனத்தோடு பணிபுரியப்போகின்றன. தங்கள் விருப்பப்படி ஒரு முக்கியமான தகவலை பின்னுக்குத்தள்ளி, இன்னொரு தகவலை முன் வைக்க வாய்ப்பு இருக்கின்றது. இன்னொரு விதமாக சொல்ல வேண்டுமென்றால், காசு கொடுக்கும் கம்பெனிகளை, தேடுதலில் முதன்மையாக வரவைக்க வாய்பிருக்கின்றது.



அடுத்த படியாக கருத்தியல் ரீதியான சர்வாதிகாரம். இந்திய பாட புத்தகங்களில் நடந்த கோல்மால் வேலைகளைப் பற்றி நீங்கள் கேள்விப் பட்டிருப்பீர்கள். இதேமாதிரியான கருத்தியல் ரீதியான திரிபுகளை, புறட்டுகளை இணையத்தில் தேடுபவரின் முன், வைக்க மிகவும் வாய்ப்பிருக்கிறது. இதை ஒரு உதாரணத்தின் மூலம் விளக்குவது அவசியம் என்று நினைக்கிறேன். நீங்கள் கூகுலில் மகரிஷி விளைவு (Maharishi effect) என்ற வார்த்தையைப்போட்டு தேடுங்கள். முதலில் வரும் சில பக்கங்கள், இந்த விளைவை உண்மையென்றும், அதன் பின் வரும் சில பக்கங்கள், இந்த விளைவைப் பொய் என்றும் சொல்லியிருப்பதைப் பார்ப்பீர்கள். இந்த விளைவிற்கு ஆதாரமான தகவல்கள், உலகின் முக்கிய அறிவியல் பத்திரிக்கைகளில் (international scientific journals) விரிவாக எழுதப்பட்டவை. அதனால், இந்த விளாவை பொய் என்று முழுவதுமாக ஒதுக்கிவிட முடியாது. இருந்த போதிலும், பின்னால் வரும் மாற்றுக்கருத்துக்களைச் சொல்லும் பக்கங்கள் (அதை எழுதியர் உண்மையில் எந்த அளவிற்கு நம்பகமானவர் என்று நமக்குத் தெரியாது) நிச்சயம், இந்த கருத்துக்களின் மீது ஒரு சந்தேகப் பார்வையை விதைத்துவிடுவதில் வெற்றியடைகின்றன. இதே மாதிரியான இன்னும் சில பக்கங்களை படிப்பவர் முன் வைத்தால், ஒரு கால கட்டத்தில் அவர் இந்த விளைவின் மீது முழுவதும் நம்பிக்கை இல்லாதவறாய் மாறிவிடக் கூடும்.


அதனால், இந்த தொடுப்புச்சொல் தேடும் இயந்திரங்களைப் பயன்படுத்தும் போது. இந்த அபாயத்தைப் பற்றி அறிந்தவராய் நாம் இருக்க வேண்டும். அதோடு, இந்த இயந்திரங்களும், தாம் வரிசைப்படுத்திதரும் தகவல்களின் நம்பகத்தன்மை மற்றும் வலைப்பூவிற்கு அல்லது இணையத்தின் உரிமையாளரின், அவர் எழுதிய விசயங்கள் பற்றிய அறிவு ஆகிய தகவல்கள் நமக்கு கிடைக்கக்கூடியவையாய்ச் செய்ய வேண்டும்.

Monday, September 11, 2006

சாத்தானின் சதுரம்; நடுவில் நாம் - I

செய்தித்தாள்கள், வானொலி மற்றும் தொலைக்காட்சி என்ற மூன்றையும் சாத்தானின் முக்கோணம் (Devil's Triangle) என்று சொல்வார்கள். காரணம், ஒரு மனிதனுக்கு இவைகள் மூன்றும் முதனிலை செய்தி தரும் ஊடகங்களாக இருக்கும் போது, எது உலகத்தில் உண்மை என்று அவனுக்குத் தெரியாமல் போய்விடுகிறது (அதாவது, இந்த ஊடகங்கள் சார்பற்ற பொது நிலையில் இல்லாமல் போகும்போது). இந்த ஆபத்தான முதனிலை ஊடகங்களில், இப்பொழுது தாராளமாக வலைப்பூக்களையும் (blogs), தொடுப்புச்சொல் தேடும் தளங்களையும் (search engines) சேர்த்துக்கொள்ளலாம். அதனால், இந்த ஆபத்தான முதனிலை ஊடகங்களின் தொகுப்பை இணையத்தையும் சேர்த்து, சாத்தானின் சதுரம் (Devil's square/rectangle) என்று இனிமேல் அன்பாக அழைக்கலாமே!!! மேற்குறிப்பிட்ட மற்ற ஊடகங்களை விட, கடைசியாக குறிப்பிட்ட இணைய தளங்கள் மிகவும் ஆபத்தானவை. எனது கருத்துக்கு ஆதாரமான சில செய்திகளை உங்களிடம் இப்பொழுது பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.

இந்த இணைய ஊடகங்கள், எல்லோராலும், மிக எளிதில் அடையக்கூடிய ஒன்றாக இருப்பது, அதற்கு ஒரு காரணம். யார் வேண்டுமென்றாலும், தனக்கென ஒரு வலைப்பூவை உருவாக்கிக்கொண்டு, முதல் பதிப்பிலேயே "மகாத்மா காந்தி உண்மையில் தேசபக்தரா?", "மகாகவி பாரதியின் கருப்புப்பக்கம்", என்று கேள்விகளைக் கேட்டுவிடலாம். இல்லை என்றால், யாரையாவது வம்புக்கிழுத்து ஒரு பதிவைப் போட்டுவிடலாம். வலைப்பூக்களில், ஒரு மனிதனுக்கு முகம் காட்டவேண்டிய அல்லது தான் யாரென்று அறிவிக்க வேண்டிய அவசியமில்லை. அதனால், அவன் திரையரங்குகளில் இருட்டில், மிக மோசமாக அசிங்க வார்த்தைகளுடன் comment அடிக்கும் அதே நடவடிக்கைகளைச் செய்வதற்கு இன்னுமொரு இடமாக
வலைப்பூ மாறி வருகிறது. ஆனால், மற்ற ஊடகங்களில், இந்த மாதிரி இருட்டில் கருப்புத்தத்துவம் உதிர்க்க வாய்ப்புகள் இல்லை. அதோடு கருத்துகள் சொல்வதற்கு, ஒரு குறைந்தபட்ச தகுதிகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

அடுத்தபடியாக, வலைப்பூக்களில் பதிக்கப்படும் ஒரு தலைபட்சமான செய்திகள் பற்றி குறிப்பிட விரும்புகின்றேன். சமீப காலமாக, தமிழ் மணம் என்ற வலைப்பூ திரட்டியில் நடந்த முக்கியமான விவாதங்களாக உயர் கல்வி நிலையங்களில் (ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம் மற்றும் ஐ.ஐ.எஸ்.சி) இட ஒதுக்கீடு அவசியமா? இஸ்ரேலின் லெபனான் மீதான தாக்குதல் நியாயமானதா? போன்றவைகளைக் கொள்ளலாம். நடு நிலை வாசகர்களுக்கு, கடைசி வரை எது சரியானது என்பது புலப்படாமலேயே இருந்திருக்கும். கடைசியாக நாம் இது பற்றி, எந்த வலைப்பதிவைப் படித்தோமோ அந்த கருத்துக்கள் சரியானவை என்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும். வழக்காடு மன்றத்தில், இதே மாதிரியான ஒரு நிகழ்வினை நாம் எல்லாம் உணர்ந்திருப்போம். ஒரு அணியின் பேச்சாளர் பேசிக்கொண்டிருக்கும் போது, அவரது அணி தான் வெற்றி பெறும் என்ற எண்ணம் தோன்றும். ஆனால், வலைப்பூக்களிலும் இது மாதிரியான ஒரு தோற்றம் ஏற்படுவது வருந்தத்தக்கதே. அதாவது உண்மை அல்லது சரியானது என்பது எது என்று கண்டுபிடிப்பதற்கு கடினமான ஒரு யுகத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எந்த யுகத்திலும், உண்மை இத்தனை வலிமையற்றதாய் இருந்திருக்குமா என்பது சந்தேகமாய் இருக்கிறது. உண்மையின் ஒடிந்துவிழும், திறனற்ற, தன்னை காத்துக்கொள்ள முடியாத நிலை மறுக்கமுடியாத ஒன்று. ஆனால், அதற்கான சில காரணங்கள் என்ன என்று இங்கே ஆராய்வோம்.

(1) பதிவாளர், முன்பாகவே தான் ஆதரவு அளிக்கிற கொள்கைகளுக்கு எதிரான கருத்துக்களை முழுவதும் ஒதுக்கிவிடுவது

(2) பிரச்னையின் ஆரம்பம் என்பது, இந்த முடிவெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உதாரணமாக, இஸ்ரலிய வீரர்களை ஹிஸ்பொல்லா இயக்கத்தினர் கடத்தியதை இந்த இஸ்ரல்-லெபனான் பிரச்னையின் ஆரம்பமாக வைத்துக்கொண்டால், இஸ்ரலின் நடவடிக்கை என்பது சரியானது போலத் தோன்றும். மாறாக, இஸ்ரல் விசாரணையின் பேரில் கடத்திவைத்திருக்கும் எண்ணற்ற பிணைக்கைதிகளை விடுவிக்கும் பொருட்டாக ஹிஸ்பொல்லா இயக்கம் எடுத்த நடவடிக்கையாக இதைப் பார்த்தால், இஸ்ரலின் நடவடிக்கை தவறு என்பது போலத்தோன்றும். அதோடு ஒரு பிரச்னையின் ஆரம்பம் என்று எதை வைத்துக்கொள்வது என்பது அவரவரின் சொந்த அபிப்பிராயம் சம்பந்தப்பட்டது.

அடுத்தபடியாக, சொற்தொடுப்பு தேடும் இணையங்களால் நேரும், ஒரு நிகழ்வு பற்றிய குழப்பமான தகவல்களை உங்களுடன் என் அடுத்த பதிவில் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். (அப்புறம் எப்படி, எனது பதிவுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது?)

அதுவரை, நீங்கள், வலைப்பூவை எப்படி சாத்தானின் சதுரத்திலிருந்து வெளியில் எடுப்பது என்பது பற்றி யோசித்து உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்களேன்.

நூலின் நீளம் தாண்டி விரியுமா பட்டங்கள்?

தலைப்பைப் பார்த்துவிட்டு, கவிதையாய் இருக்குமோ என்று தலை தெறிக்க ஓடிவிடாதீர்கள் நண்பர்களே. இந்த பதிவில், எண்ணங்களுக்கும் (thoughts) அநுபவங்களுக்கும் (experiences), நமது தகவல்களின் தொகுப்பிற்கும் (information database) உள்ள தொடர்பைப் பார்க்கலாம். (இந்த பதிவு ராமகிருஷ்ணர் பற்றிய என் பதிவில் அன்பு சகோதரர் ம்யூஸ் அவர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு பதிலாக எழுதப்பட்டது. ) அவரின் கேள்விகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


//கேள்வி என்னவென்றால் முஹம்மதுவின் முன்னால் முருகப்பெருமானோ, அருணகிரிநாதருக்கு அல்லாவோ, ஃப்ரான்ஸிஸ் ஆஃப் அஸிஸிக்கு மாரியம்மனோ ஏன் காட்ஷி தரவில்லை?

ஏனென்றால் இவர்கள் தங்கள் மன பிம்பங்களில் மற்ற தெய்வங்களை அறிந்திருக்கவில்லை. வேறு வகையில் சொன்னால் உங்கள் மனத்திற்கு தெரியாத ஒன்றை தாங்கள் காண முடியாதது ஏன்?

உங்களது தெய்வங்கள் உங்களின் மன கற்பனைக்கு உட்பட்டவராகவே இருப்பது ஏன்?

இந்த அனுபவங்கள் மனத்தின் கற்பனைகளா? //

அன்பான ம்யூஸ்,

மிக முக்கியமான கேள்விகளை எழுப்பியிருக்கிறீர்கள்.

உங்களின் கேள்விகளுக்கு நேரடியான விளக்கம் தருவதை விட, நமது அநுபவங்கள் மற்றும் எண்ணங்களுக்கும், நமது தகவல்களின் தொகுப்பிற்கும் உள்ள நேரடியான தொடர்பு பற்றிய விரிவான செய்தி இன்னும் உபயோகமாய் இருக்கும் என்பதால், இந்த முயற்சி.

நாம் பிறந்த பொழுது, நம்மிடம் உள்ள தகவல்களின் அளவை பூஜ்யம் என கொள்ளலாம். அதன் பின், பார்த்தல், கேட்டல், தொடுதல், முகர்தல், பேசுதல் மூலம் நமது தகவல்களின் அளவை விஸ்தாரப்படுத்துகிறோம். நம்மிடம் உள்ள தகவல்களின் தொகுப்பை, நூலின் நீளமாகவும், எண்ணங்களை பட்டமாகவும் உருவகிக்கலாம். நம்மிடம் உள்ள தகவல்களைப் பொருத்தே எண்ணங்களின் விரிவும், உயர்வும் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த தகவல்களின் தொகுப்பில் இல்லாத பொருட்களைக் காணும்போது, மனது பயந்து விடுகிறது. அதை கடவுள் அல்லது பேய் என்ற ஒன்றொடு தொடர்பு படுத்தி திருப்தியடைகிறது. இந்த தொடர்பு படுத்துதல் மூலம், அந்த பொருள் பற்றிய புரிதல் கிடைத்துவிட்டதாய் நமது ஈகோ சாந்தமடைகிறது. அதனால் தான் கற்காலத்து மனிதன் காற்று, மரம், தீ எல்லாவற்றையும், கடவுளின் உருவமாக பார்த்தான். இதே மாதிரியே புரியாத அநுபவங்களை கடவுளுடன் அல்லது சாத்தானுடன் தொடர்புபடுத்துவது மனதிற்கு மிக எளிதான வேலையாக இருக்கிறது. இங்கே ஒரு குறிப்பிட்ட நிகழ்வைக் குறிப்பிட விரும்புகின்றேன். நகரத்தில் படிக்கிற ஒரு பெண் பேயாடி நான் பார்த்ததில்லை. காரணம், திடுமென்று இரவில் நடக்கிற சில மாற்றங்களை, அவள் காற்றின் அசைவுடன் சம்பந்தப்படுத்திக்கொள்வதாலேயே பேய்பிடித்தலிலிருந்து அவளுக்கு தப்பித்தல் நடக்கிறது. அதே நேரம், ஒரு கிராமத்துப் பெண், இதே மாற்றத்தை பேய் அல்லது சாத்தானுடன் சம்பந்தப்படுத்திக்கொண்டு ஒரு வித மன நோய்க்கு ஆளாகிறாள். அதனால், ஒரு மனிதனின் பகுத்தறிவு விசயத்தில், நமது இந்த தகவல்களின் தொகுப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த விசயங்களின் பின்னணியில் உங்கள் கேள்விகளை ஆராய்வோம்.

ஒரு குளத்தில் இல்லாத மீன் ஒன்றை, நாம் எப்படி அந்த குளத்தில் வீசப்படுகிற தூண்டிலில் எதிர் பார்க்க முடியாதோ, அதே மாதிரி தான், நமது தகவல்கள் தொகுப்பில் இல்லாத ஒன்றை நம்மால் கற்பனை செய்ய முடியாது. இதை நமது மனதின் வரம்பு அல்லது எல்லை என்று குறிப்பிடலாம்.

இந்த மனதின் வரம்பு பற்றிய மூன்று செய்திகளைச் சொல்லிவிட்டு, இந்த பதிவை நிறைவு செய்ய விரும்புகின்றேன். முதலில், மிக்சியோ ககுவின் Hypersurface:
A Scientific Odyssey Through Parallel Universes, Time Warps, and the Tenth Dimension என்ற புத்தகத்தில் படித்த சில விசயங்களைத் தங்களுடன் முதலில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நீரில் மட்டும் வாழ்கிற மீன் குஞ்சுகளுக்கு, நமது நில உலகம் அல்லது அவற்றின் அறிவுக்கு புரிந்துகொள்ள முடியாத பொருட்கள் எத்தனை அமானுஷ்யமானதாக இருக்கக்கூடும் என்பதை இந்த புத்தகத்தில் மிக அழகாக எழுதியிருப்பார். அந்த புத்தகத்தின், ஒரு சிறு பகுதியின் மொழிபெயர்ப்பு கீழே.

"ஒரு மழைக்காலத்து நாளில், அந்த குளத்தின் மேற்பரப்பு, எண்ணற்ற மழைத்துளிகளால் மோதப்படுவதைக் கண்டேன். அதனால், குளத்தின் மேற்பரப்பு, சலனமுடையதாய் மாறிப்போயிருந்ததுடன் மேலேயிருந்தத அல்லி மலர்கள் எல்லா திசைகளிலும் நீர் அலைகளால் சிதரடிக்கப்பட்டன. இது அங்கே வாழ்கிற மீன் குஞ்சுகளுக்கு எப்படியாக தோன்றும் என்று யோசித்துப் பார்த்தேன். அந்த மீன்குஞ்சுகளுக்கு, அந்த அல்லி மலர்கள் தாமாகவே அசைவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தக்கூடும். இதற்குக் காரணம், மீன்கள் அந்த நீர்ப்பரப்பின் மேலுள்ள அலைகளைப் பற்றி அறியாததே காரணம். இந்த அறியாமையினால், அல்லி மலர்களின் இயக்கம், மீன்களுக்கு அமானுஷ்யமான ஒரு விசயமாகத் தெரியலாம். மீன் குஞ்சுகளின் உலகம் அவற்றின் பார்த்தல் மற்றும் தொடுதலுக்கு உட்பட்ட பொருட்களால் ஆனது. அந்த சாதாரணமான மலர்களின் இயக்கம் பற்றி மீன்குஞ்சுகளின் உலகத்தில் ஏகப்பட்ட அமனுஷ்ய கதைகள் புலக்கத்தில் இருக்கலாம். நான் அடிக்கடி நினைத்துக்கொள்வதுண்டு. நாமும் அந்த மீன் குஞ்சுகளைப் போன்று எல்லைகளுடனான ஒரு உலகத்தில் வாழ்கின்றோம். நமது வாழ்க்கை முழுவதையும், தொடுதல் மற்றும் பார்த்தலாலான நமது ஒரு உலகத்தில் வாழ்ந்து முடித்து விடுகிறோம். நமது அறிவிற்கு அப்பாற்பட்ட பரிமாணங்கள் மற்றும் உலகங்கள் இருக்கக்கூடும் என்பதை அந்த மீன்குஞ்சுகளைப்போன்றே மறுத்து விடுகிறோம்."

இப்படியாக நிகழ்வுகள் பற்றிய போதிய அறிவின்மை, அந்த நிகழ்வுகளை, அமானுஷ்ய அல்லது கடவுள் மற்றும் சாத்தான்களோடு தொடர்புபடுத்துகிற வாய்ப்பை ஏற்படுத்துகிறது.

அடுத்த படியாக, எட்வர்ட் டி போனோவின், The mechanism of mind என்ற புத்தகத்தின் ஒரு தகவலைப் பார்ப்போம். இந்த புத்தகத்தில், ஜெல்லியின் மேற்பரப்பு மற்றும் அதில் ஊற்றப்படும் நீர் என்ற உருவகத்தின் மூலம் மூளை இயங்கும் விதத்தை விளக்குகிறார், ஆசிரியர்். அதாவது, ஜெல்லியின் மேற்பரப்பை நமது தகவல் சேமிப்பிடமாக கொள்ளலாம். ஐம்புலன்கள் மூலமாகவும், நமக்கு வரும் புதிய செய்திகளை ஜேல்லியின் மேற்பரப்பில் ஊற்றப்படும், நீராகக் கொள்ளலாம். முதன் முதலாக ஊற்றப்படும் நீர், அதற்கென ஒரு பாதையை எதேச்சையாக (randomly) நிர்ணயித்துக்கொள்கிறது. அப்பொழுது, அது ஜெல்லியின் மேற்பரப்பில், சில அரிப்புகளை ஏற்படுத்துகிறது. இப்பொழுது, இரண்டாவது முறை நீர் ஊற்றப்படும்போது, அது ஏற்கனவே நீர் தேங்கிய பாதையில் பயணிக்கிறது. அதேமாதிரியாக புதிய விசயங்கள், நமது தகவல் சேமிப்பு பரப்பில், அரிப்பை அல்லது அடையாளத்தை ஏற்படுத்திவிடுகின்றன. இப்படியாக ஏற்படுத்தப்பட அரிப்புகள், புதிதாய் நம்மை அடையும் தகவல்களின் உண்மையான புரிதலில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த உருவகத்தால் விளக்கப்படும் செய்தியை இப்படியாக புரிந்துகொள்ளலாம். அதாவது, தகவல்கள் (ஜெல்லி பரப்பு) எண்ண ஓட்டங்களை (நீர் ஒட்டம்) வெகுவாகப் பாதிக்கின்றன. அதோடு, புதிய தகவல்கள், சேர்க்கப்படுதலும், வகைப்படுத்தப்படலும், ஏற்கனவே இருக்கிற தகவல் தொகுப்பால் நிர்ணயிக்கப்படுகின்றன. அதாவது, ஒரு கவிஞனோ, எழுத்தாளனோ, ஓவியனோ, அல்லது இசைக்கலைஞனோ அவன்அவ்வாறு ஆவதற்கான விதைகள், அவன் சிறு பிள்ளைப் பருவத்திலேயே விதைக்கப்படவேண்டும்.

கடைசியாக யானையும் ஆறு குருடர்களும் என்ற ஒரு கதையைப் பார்ப்போம். இதில், யானை என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள விரும்பிய, ஆறு குருடர்களுக்கு முன்பாக ஒரு யானை நிறுத்தப்படுகிறது. ஒவ்வொரு குருடராக சென்று அதை தடவிப்பார்த்துவிட்டு, தங்கள் தொடுதல் மூலம் யானை என்றால் என்ன என்று வரையறுத்துக்கொள்கிறார்கள். யானையின் அகன்ற மார்பைத் தடவிப்பார்த்த மனிதன், யானையை ஒரு பெரிய சுவர் என்று சொல்கிறான். அதன் தந்தத்தைத் தடவிப்பார்த்த மனிதன், அதை ஒரு கூர்மையான் ஈட்டி என்று சொல்கிறான். அதன், தும்பிக்கைப் பகுதியைத் தடவிப்பார்த்த மனிதன் அதை ஒரு பாம்பு என்று சொல்கிறான். அதன் கால் பகுதியைத் தடவிப்பார்த்த மனிதன், அதை தூண் என்று வர்ணிக்கிறான். அதன் காது பகுதியைத் தடவிப்பார்த்த மனிதன், யானையை முறம் என்று வர்ணிக்கிறான். கடைசியாக, அதன் வால் பகுதியைத் தடவிப்பார்க்கும் மனிதன், அதை ஒரு கயிறு என்று வர்ணிக்கிறான். எல்லோருடைய யானை பற்றிய புரிதல்களும், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் சரியே. ஆனால், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தகவல்களின் முழுமையின்மையே, அவர்களின் யானை் பற்றிய வரையறைகள் தவறாகிப் போனதற்குக் காரணம்.

இங்கே பதிந்திருக்கிற தகவல்களின் மூலம், நான் சொல்லவருகிற சில விசயங்கள்:

(1) ஒரு நிகழ்வுக்கு காரணி என்ற ஒன்று பற்றிய புரிதல் இல்லாத வரை தான், அமானுஷ்யம் என்ற ஒன்று இருக்கிறது. ஒரு காலகட்டத்தில், தாமாகவே ஆடிய மரங்கள் ஒரு அமானுஷ்ய விசயமாக இருந்திருக்கலாம். காலப்போக்கில், காற்று என்ற கண்ணுக்குப் புலப்படாத ஒன்று பற்றிய உணர்தல், இந்த நிகழ்வை ஒரு இயற்கையான, சாதாரண நிகழ்வாக மாற்றிவிட்டது.

(2) நம் இளவயதில், நாம் எந்த மாதிரியான தகவல்களை எப்படி சேர்க்கிறோம் என்பது, மிக முக்கியமான விசயம். முதல் கோணல் முற்றும் கோணல் என்பது மிகவும் பொருத்தமான பழமொழி இந்த இடத்தில்.

(3) ஒரு விசயம் பற்றிய மிகச் சரியான முடிவு எடுப்பதற்கு, அது பற்றிய முழு தகவலும் அவசியம். ஆனால், ஒன்று பற்றிய முழு தகவல் என்பது எந்த அளவிற்கு சாத்தியம் என்று தெரியவில்லை. அதாவது, ஒரு குருடனுக்கு, யானை பற்றிய முழு அறிவையும் கொடுக்க இயலுமா?

Friday, August 25, 2006

Probability theory தவறு என்று சொல்லும் micro-psychokinesis ஆராய்ச்சிகள்

முதலில் psychokinesis என்றால் என்னவென்று சொல்லிவிடுகிறேன். ஏழு அல்லது எட்டு வருடங்களுக்கு முன் மோகன்லால் நடித்து, தமிழில் வெளிவந்த படம் அது. அசோகன் என்று நினைக்கிறேன். அதில் ஒரு சிறுவன் ஒருவன் புத்த துறவியாக நடித்திருப்பான். அவனுக்கு சில அமானுஷ்ய சக்திகள்(psychic power) உண்டு. அதாவது, சில பொருள்களை பார்வை மூலமாகவே நகர வைப்பது. அதாவது மனோசக்தியின் மூலம் பொருட்களை நகர்த்துவது அல்லது இயக்குவது. இதையே ஆங்கிலத்தில் psychokinesis என்று சொல்வார்கள். இந்த மாதிரி அமானுஷ்ய சக்தியுள்ள ஒரு லட்சம் சிறுவர்களை கண்டெடுத்து, சைனா செய்து வரும் psychic research ரொம்ப பிரபலம். அது பற்றி தனியே ஒரு இடுகையில் பேசலாம். இது மாதிரி மனோசக்தியைப் பயன்படுத்தி காசு சுண்டி விடுதலில், சீட்டு விளையாடுதலில் அல்லது தாயம் விளையாடுதலில் தான் விரும்பும் விளைவை வரவைப்பது, micro-psychokinesis என்று அழைக்கப்படுகிறது. அதிக தடவையாக தலை வரவைத்தல், அல்லது ஜோக்கர் சீட்டை வரவைத்தல் அல்லது தாயம் விழவைத்தல் போன்ற சிலவற்றை எடுத்துக்காட்டுகளாக கூறலாம்.


probability theoryபடி தலை வருவதற்கு 50 சதவீத வாய்ப்புகளும், தாயம் விழவைப்பதற்கு, 12.5 சதவித வாய்ப்புகளும் உள்ளன. ஆனால், ராடின் மற்றும் நெல்சன் 1984களில் செய்த micro-psychokinesis ஆராய்ச்சிகள், probability theory தவறாகக்கூடும் வாய்ப்புகளை முன்வைக்கின்றன. அதாவது சில மனிதர்களால், இயற்கைக்கு வினோதமாக, அதிகப்படியான முறை தாங்கள் விரும்பிய ஒன்றை, (தலை அல்லது தாயம்) விழவைக்க முடிந்ததை இவர்களின் ஆராய்ச்சிகள் வெளிக்கொண்டுவந்தன. மேலும், மனிதன் தன் மனோசக்தியால், random gamesகளில் தான் விரும்பிய விளைவுகளை ஏற்படுத்த முடியும் என்பதை இவர்களின் கண்டுபிடிப்புகள் உறுதி செய்தன. அவர்களின் முடிவுகள், Foundations of physics என்ற இயற்பியல் பத்திரிக்கையில் 'Evidence for consciousness-related anomalies in random physical systems' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டன.



இது ஒன்றும் ஆச்சரியமான விசயமாக எனக்குத்தெரியவில்லை. எனது 10 வயது அக்கா பெண்ணுடன், நிறைய முறை தாயம் விளையாடியிருக்கிறேன். அவள் பெரும்பாலான தடவைகள், தான் விரும்பிய எண்ணை, தாயக்கட்டையில் வரவைத்து காட்டியதுண்டு. அதனால், முடிந்த வரை அவளுடன் கூட்டு சேர்ந்து விளையாடி தாயத்தில் வெல்வதற்கு முயற்சி செய்வேன். (இது இன்னொரு விசயத்தையும், இங்கெ குறிப்பிட வைக்கிறது. அது என்னவென்றால், சீனாவின் psychic research, 9-13 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளிடம் இந்த விளையாட்டுகளில் விரும்பிய விளைவை ஏற்படுத்தும் அமானுஷ்ய சக்தி அதிகமிருப்பதாக தெரிவிக்கின்றன.)


இந்த கண்டு பிடிப்புகள், புதிதாக ஒன்றையும் சொல்லிவிடவில்லை. அதாவது, பொருட்களின் மீதான, அல்லது செயல்களைத் தொடர்ந்து வரும் விளைவுகளின் மீதான, மனோசக்தியின் தாக்கத்தினை நாம் தலைமுறை தலைமுறையாக கேள்விப்பட்டு வருகிறோம். இந்த அறிவியல் ஆராச்சிகள், இதன் இருப்பினை உண்மை என்று நிரூபித்திருக்கின்றன. ஆனால், எவ்விதம் இந்த தாக்கம் நடக்கிறது என்பது, இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது.

முடிவாக, கேள்வி ஒன்றைக் கேட்காமல் விட்டு விட்டால், நீங்கள் பின்னூட்டமாக எதை எழுதுவீர்கள்? அதற்காக ஒரு கேள்வி.

இந்து மதத்தில் இருக்கிற யாகம் வளர்த்தல் என்ற ஒன்றை psychokinesis முயற்சியாக பார்க்கலாமா?

Thursday, August 17, 2006

ராம கிருஷ்ண பரமஹம்சர், ஓஷோ - Are these spiritual masters schizophrenic?

ராம கிருஷ்ண பரமஹம்சர், ஓஷோ - Are these spiritual masters schizophrenic? இந்த கேள்வியோடு நான் இன்று வந்திருப்பது, யாரின் மனதையும் சத்தியமாய் காயப்படுத்துவதற்காக அல்ல. என்னைப் பொருத்தவரை எந்த கேள்விகளும் ஆபத்தானவை அல்ல. நமது, கணித அறிவு மற்றும் கோள்கள் பற்றிய, மருந்துகள் பற்றிய, இசை, மொழி பற்றிய அறிவு 2000 வருடங்களுக்கும் மேலான பழமையானது. நாம் மிகவும் பாரம்பரியம் மிக்க, பழமையான வாழ்வியல் முறையை, கலாச்சாரத்தை கொண்டிருந்தவர்களாய் இருந்தாலும், அறிவியல் தொழில் நுட்பத்தில் நாம் பின் தள்ளப்பட்டு மேற்கத்திய நாடுகள் முன்னேறிப் போனதற்கு, நாம் கேள்வி கேட்காமல் விட்டதே முக்கியமான காரணம் என்பேன். இதனால் தானோ என்னவோ, சில நுணுக்கமான, விலை மதிக்கமுடியாத தகவல்கள் நம்மை அடையாமலேயே புதைந்து போய்விட்டன. தலைப்பு சம்பந்தப்பட்ட பத்திக்குப்போவதற்கு முன், எனது சுய வரலாறிலிருந்து ஒரு பகுதி.


எனது தாத்தாவை ஊரில் உள்ள எல்லோரும் வைத்தியர் என்றே அழைப்பார்கள். எந்த பூச்சிக்கடி என்றாலும், எலும்பு முறிவு என்றாலும், தோல் வியாதி என்றாலும் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்த எனது தாத்தாவைப் பார்க்க வருவார்கள்.அவர் கொஞ்சம் மஞ்சள், மற்றும் சில வஸ்துகள் வைத்து கட்டிவிட்டு, கொஞ்சம் வேப்பிலை ஒடித்து கட்டின் மீது வைத்து ஏதோ முனகிக்கொண்டிருப்பார் (ஓம் ... ரீம் ... மந்திரகாளி..!!!!). இது மாதிரி சில நாட்கள் செய்தவுடன், வந்தவர்களின் நோய் சரியாகி இருக்கிறது. இப்பொழுது, அவர் இறந்து பல வருடங்கள் ஆகின்றன. ஆனால், அவர் செய்த மருத்துவம் என்ன? எப்படி நோயை சரியாக்கினார் என்பது எனக்கு இன்றுவரை பிடிபடாத ஆச்சரியங்களில் ஒன்று. அதைக் கேட்டுத்தெரிந்து கொள்ளாமல் விட்டதற்கு இன்றளவும், என் வீட்டில் உள்ளவர்களை நான் வைவதுன்டு.



இப்பொழுது தலைப்பிற்கு வருவோம்.

முதலில் ராமகிருஷ்ணர் பற்றி ஒரு சிறு குறிப்பு.
ராமகிருஷ்ணர் 19 ம் நூற்றாண்டில், மேற்கு வங்காளத்தில் உள்ள கமர்புகுர் என்ற கிராமத்தில் பிறந்தார். சிறு வயதில் பள்ளிப்படிப்பில் அக்கறை இல்லாவிட்டாலும், கலைகளில் ஆர்வமுடையவராய்த் திகழ்ந்தார். பணம் சேர்ப்பதில் ஆர்வமில்லாதவறாய்த் திகழ்ந்தார். பிற்காலத்தில் கல்கத்தாவில் ஒரு காளி கோவிலில், இவர் அர்ச்சகரானார். அந்த கால கட்டங்களில், அவரிடம் கடவுள் பற்றிய நிறைய கேள்விகள் எழ ஆரம்பித்தன. தான் வணங்குவது, ஆராதனை செய்வது எல்லாம் வெறும் கற்சிலை தானா? அல்லது அதற்குள் அரூவமாய் கடவுள் என்ற சக்தி இருக்கிறதா? இது மாதிரியான கேள்விகளுக்கு விடை தெரியாமல் தடுமாறினார். வழிபாட்டின் போது பல நேரங்களில் அவர் சத்தமாக அழுதிருக்கிறார். இரவு நேரங்களில் அருகிலுள்ள காட்டிற்குச் சென்று, இரவு முழுவதும் வழிபாடு செய்திருக்கிறார். தனது கேள்விகளூக்கு விடை கிடைக்காமல் அதிருப்தியால், ஒரு நான் தன் வாழ்வினை முடித்துக்கொள்ளும் பொருட்டு, வாள் ஒன்றை எடுத்து தன் கழுத்தை வெட்டிக்கொள்ள துணிந்த போது, காளியின் உடம்பிலிருந்து ஒளி வெள்ளம் இவரை நோக்கி பாயத்தொடங்கியது. அதன் சக்தியின், வலிமை தாங்காமல், அவர் அங்கேயே மயங்கி விழுகிறார். அதன் பின்னும் காளியிடம் மதங்கள் சொல்கிற உன்னத நிலையை வேண்டி பிரார்த்தனை செய்தார். பல மத சன்னியாசிகளுடன் கருத்துப் பறிமாற்றம் செய்யும் வாய்ப்புகள் அவருக்கு அமைந்தன. அதோடு, இந்து மதத்தின் பல கடினமான சாதகங்களை, பல மாதங்கள் பயிற்சி செய்து வெற்றியும் பெற்றார். அதிகப்படியான இந்துமத சாதகத்தினால், அவரின் மன நிலை பிறழ்ந்துவிட்டதாக ஊரில் வதந்திகள் பரவ ஆரம்பித்தன. அவரது அன்னையார் உடனடியாக, இவருக்கு திருமணம் செய்து வைப்பதென்று முடிவு செய்தார். ராமகிருஷ்னரும், ஏதும் எதிர்ப்பு தெரிவிக்காமல், ஆறு வயது சாரதாவை மனைவியாக ஏற்றுக்கொண்டார். அவர், சாரதாவை காளியின் வடிவமாகவே பார்க்க ஆரம்பித்தார். அவருக்கு மற்ற சன்னியாசிகளிடம் தான் கற்ற பாடங்களை சொல்லித்தர ஆரம்பித்தார். அவர் விரைவில், கடவுளைத் தேடும் அனைவருக்கும் ஒரு வழிகாட்டியானார். அவர் தொண்டைப் புற்று நோயால் பாதிக்கப்பட்டு, மகாசமாதி நிலையில் இருந்து உயிர் விடும் வரையில், இந்து மதக்கருத்துக்களையும், தனது அனுபவத்தையும் அவரது சீடர்களோடு பகிர்ந்துகொண்டிருந்தார்.


இப்பொழுது, இந்த கட்டுரையின் முக்கியமான பகுதிக்கு வருவோம். இராமகிருஷ்
ரின் இறைதேடல் அநுபவங்களை (spiritual experiences) உற்று நோக்கினோமானால், அவரின் பிதற்றல்கள், திடீர் அழுகை, அவர் கேட்ட அசரீரிச் சத்தம், காளியுடன் உறவாடியது எல்லாமே, schizophrenia என்ற மன நோய் உள்ளவருக்கு இருக்கும் அநுபவங்களைப் போன்றதாகும். இராமகிருஷ்ரின் அசரீரி கேட்டலை auditory hallucination என்ற குறைபாட்டுடனும், காளியுடன் பேசுவதை visual hallucination என்ற schizophreniaவின் குறைபாட்டுடனும் நேரடியாக தொடர்பு படுத்திவிடலாம்.

(இடைக்குறிப்பு: நான் பாட்டிற்கு,
schizophrenia என்றால் என்னவென்று உங்களுக்கு தெரிந்திருக்கும் என்ற எண்ணத்தில் பாதிக்கட்டுரை வரை வந்துவிட்டேன். இருந்தாலும் திடீரென்று ஒரு சந்தேகம். இது பற்றி தெரியாதவர்களுக்கு இடையில் ஒரு சிறு விளக்கம். இது ஒரு மன நோய். தொடர்ந்த மன அழுத்தத்தாலும், திடீரென்று நிறுத்திவிடுகிற போதை, மதுப் பழக்கங்களாலும் வருகிறது. இதைப் பற்றி தெரிந்துகொள்ள நீங்கள் ஆளவந்தான் படத்தையும், குடைக்குள் மழை படத்தையும் இன்னொரு முறை பார்க்கலாம்.)

இதே மாதிரியாக பெரும்பாலான spiritual masterகளின் அனுபவங்களுக்கும், ஒரு schizophrenia நோயாளியின் அனுபவங்களுக்கும் அதிகம் வித்தியாசம் இல்லை என்றே சொல்லிவிடலாம். இந்த கருத்தைத் தவறென்று சொல்ல வரும் இந்த ஆன்மிகவாதிகளின் ஆதரவாளர்கள், இவ்விருவரின் அனுபவத்தில்/உணர்தலில் உள்ள அடிப்படை வித்தியாசம் என்ன என்று சொல்ல கடமைப்பட்டிருக்கிறார்கள்.


தாங்கள் மன நோயாளிகள் என்பது தெரியாமலேயே இந்த ஆன்மிகவாதிகள் இறந்து போய்விட்டார்களா என்பது மிகப்பெரிய கேள்வியாகவே எனக்கு தொக்கி நிற்கிறது.



ஓஷோவின்
என் இளமைக்கால நினைவுகள் என்ற புத்தகத்தையும் சென்ற வருடம் எனக்கு படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஓசோவை சிறு வயதில் புத்தர், தன் வயப்படுத்த அல்லது ஆக்கிரமிப்பு செய்ய விரும்புவதும், அதை ஓசோ மறுத்து தன் கலப்பற்ற இருப்பை நிறுவுவதுமான நிகழ்ச்சியை, ஓசோ அந்த புத்தகத்தில் சொல்லியிருப்பார். என்னை இது ஓசோவின் ஆரோக்கியமான மன நிலையைச் சந்தேகப்படவைத்தது. இந்த ஒன்றும் கூட மேல் குறிப்பிட்ட எ
ன் எண்ணத்தை வலுப்படுத்தியது. இதே கேள்விகள் உங்களில் சிலருக்கும் இருக்கலாம். சிலர் இதற்கு பதிலும் கண்டுபிடித்து வைத்திருப்பீர்கள். கொஞ்சம் எனக்கும் சொல்லுங்களேன்.

Tuesday, August 15, 2006

Google Search- என்றொரு உளவாளி?


கடந்து இரண்டு வருடங்களாய், நான் அதிகமாய் சென்றுவந்து இணைய தளம் Google Search தான். ஒரு நாளைக்கு, குறைந்தது 20 சொற்கள் அல்லது வார்த்தைகளைத் தேடுவது எனக்கு வழக்கமாகும். இது பெரும்பாலும், நான் விரும்பிய புத்தகங்கள், படங்கள், இசைகள், தலைவர்கள் பற்றிய ஓசி விமர்சனங்களைப் படிப்பதற்காக இருக்கும். அபூர்வமாக, அது எனது தொழில் முன்னேற்ற விசயங்களைத் தெரிந்து கொள்வதற்காகவும் இருந்து விடுவதுண்டு! இதே மாதிரி, மனதுக்கு படுகிற விசயங்களையெல்லாம், Google Searchல் தேடுகிற நோய் சில வருடங்களாய் எல்லோருக்கும் தொற்றி வருகிறது. நீங்கள் அப்படிப்பட்ட நோயுள்ளவராயிருந்தால், உங்களுக்கும், எனக்கும் சேர்த்து, இப்பொழுது ஒரு திடுக்கிடும் செய்தி.

உங்களின் விருப்பங்களை, கனவுகளை, வினோதமான ஆசைகளைப் பற்றி அறிந்த, உங்கள் அந்தரங்க கட்டிடத்தின் மூலை-முடுக்குகளைப் பற்றி துல்லியமாய் அறிந்த இன்னொரு ஐந்து இருக்கின்றதென்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆனால், அது தான் உண்மை. அது வேறு யாருமில்லை- Google Search தான். இப்பொழுது எனது குற்றச்சாட்டுக்கு அடிப்படையான சில செய்திகளை சொல்லயிருக்கிறேன்.

சில வாரங்களுக்கு முன்பாக, AOL என்ற தேடும் இணையம் (search-engine என்பதற்கு எவ்வளவு மோசமான மொழிபெயர்ப்புடா சாமி! என்று நீங்கள் புலம்புவது எனக்குக் கேட்கிறது) , 658, 000 பேர்களின் Search Key-words (30 million சொற் தொடுப்புகள் (queries)) தொகுப்பை பொது ஆராய்ச்சிக்காக வெளியிட்டிருந்தது. இது இந்த இணையத்தைப் பயன்படுத்தியவர்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. உபயோகிப்பவர்களின் பலத்த எதிர்ப்புகளுக்குப் பிறகு, இதைத் திரும்பப்பெற்றுக்கொண்டதுடன், மன்னிப்பும் கேட்டுக்கொண்டது இந்த நிறுவனம். ஆனாலும், இந்த நிகழ்ச்சி search-keywords தொகுப்பின் முக்கியத்துவத்தை உணர உதவியாய் இருந்தது.

இந்த தேடுதல்கள் மூலம் ஒருவர் தன்னைப் பற்றிய எல்லா தகவல்களையும், வெளியிட்டு விடுகிறார். உதாரணமாக அவரது பெயர் (எல்லோரும் google searchல் அவரவர் பெயரை தேடிப்பார்ப்பது ஒரு இயல்பான விசயம்), இப்பொழுதைய தொழில் (எந்த மாதிரியான தொழில் சம்பந்தமான வார்த்தைகளைத் தேடுகிறார் என்பதை வைத்து சொல்ல முடியும்), அவரது விருப்பங்கள் (இசை, திரைப்படங்கள் , கவிதைகள், புத்தகங்கள்) போன்றவற்றை போதுமான search-keywords database கொண்டு சொல்லிவிடமுடியும். மற்றபடி, அவரின் இருப்பிடம் (geographical location) கண்டுபிடிப்பது மிகமிக சுலபம். உதாரணமாக, IP (internet protocol) எண்ணை வைத்துக்கொண்டு, நீங்கள் எந்த ஊரில் இருந்து, எந்த இடத்தில் இருந்து இதைப் படித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று சொல்லிவிடமுடியும். அதற்கும் மேலாக, நீங்கள் இயலபான மன நிலையில் உள்ளவரா என்பதைக் கூட கண்டுபிடித்துவிட முடியும். உதாரணமாக, kill, murder, torture, child-porno, suicide, போன்ற வார்த்தைகளை இணையத்தில் ஒருவர் அடிக்கடி தேடுகிறார் என்றால், நிச்சயம் அவரது சில நட்டுகள் கழன்றுவிட்டன என்று சொல்லிவிடலாம்.

இப்பொழுது ஒத்துக்கொள்கிறீர்களா? Google-search உங்களைப் பற்றி எல்லாமும் அறிந்த ஒரு உளவாளி என்று.

கொசுறு தகவல்கள் :

US நீதித் துறை (US justice department), Search-engine பயன்படுத்துபவர்களின் சொற்தொடுப்புகளை இரண்டு வருடங்களாவது அந்தந்த நிறுவனங்கள் சேமித்துவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறது. அதோடு, US அரசு இந்த சொற்தொடுப்பு தகவல்களை, Google, Microsoft நிறுவனங்களிடமிருந்து கேட்டிருப்பதும் அதை இந்த நிறுவனங்கள் தர மறுத்திருப்பதும் முன்பு வெளியான செய்திகள்.

உங்களிடம் உள்ள ஒரே பாதுகாப்பு, நீங்கள் 65 பில்லியன் மனிதர்களில் ஒருவர் என்ற உண்மை தான். அதனால், இந்த தேடல் இணையங்கள் கையாளவேண்டிய தொகுப்பின் (database) அளவு அபரிமிதமானது. ஆனால், data-mining துறையில் நடக்கும் முன்னேற்றம் கூடிய விரைவில் இந்த database கையாளும் திறனை அதிகப்படுத்திவிடும்.


Monday, August 14, 2006

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.

உலகின் எல்லா இந்தியர்களுக்கும் என் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.

இந்த நேரத்தில் இந்தியா பற்றி பெருமையாய் நினைப்பதற்கு சில அதிகப்படியான காரணங்கள் என்ற தலைப்பில் இணையத்தில் உள்ள சில செய்திகளை பரிமாறிக்கொள்ள விரும்புகின்றேன். செய்தி ஆங்கிலத்தில் இருப்பதற்கு மன்னிக்கவும்.

Extra reasons to be proud of India

  1. India is the world's largest, oldest, continuous civilization.
  2. India never invaded any country in her last 10,000 years of history.
  3. India is the world's largest democracy.
  4. Varanasi, also known as Benares, was called "The Ancient City" when Lord Buddha visited it in 500 B.C.E, and is the oldest, continuously inhabited city in the world today.
  5. India invented the Number System. Aryabhatta invented the number zero.
  6. The World's first university was established in Takshashila in 700 B.C. More than 10,500 students from all over the world studied more than 60 subjects. The University of Nalanda built in the 4th century BC was one of the greatest achievements of ancient India in the field of education.
  7. Sanskrit is the mother of all European languages. Sanskrit is the most suitable language for computer software - a report in Forbes magazine, July 1987.
  8. Ayurveda is the earliest school of medicine known to humans. Charaka, the father of medicine consolidated Ayurveda 2,500 years ago.
  9. Although modern images of India often show poverty and lack of development, India was the richest country on earth until the time of British invasion in the early 17th Century. Christopher Columbus discovered America trying to find an alternative way to get to India.
  10. The art of Navigation was born in the river Sindhu 6,000 years ago. The very word Navigation is derived from the Sanskrit word NAVGATIH. The word navy is also derived from Sanskrit 'Nou'.
  11. Bhaskaracharya calculated the time taken by the earth to orbit the sun hundreds of years before the astronomer Smart. Time taken by earth to orbit the sun: (5th century) 365.258756484 days.
  12. Budhayana, was the first to calculate the value of ?pi?. He then went on to explain the concept of what today is known as the ?Pythagorean Theorem?. He discovered this in the 6th century long before the European mathematicians.
  13. Algebra, trigonometry and calculus came from India. Sridharacharya developed quadratic equations in the 11th century. The largest numbers the Greeks and the Romans used were 106, whereas Hindus were using numbers as big as 10 to the power of 53, as early as 5,000 BCE during the Vedic period. Even today, the largest used number is Tera (10 to the power of 12).
  14. IEEE has proved what has been a century old suspicion in the scientific community, that the pioneer of wireless communication was Prof. Jagdish Bose and not Marconi.
  15. The earliest reservoir and dam for irrigation was built in Saurashtra.
  16. According to Saka King Rudradaman I of 150 BCE, a beautiful lake called Sudarshana was constructed on the hills of Raivataka during Chandragupta Maurya's time.
  17. Chess (Shataranja or AshtaPada) was invented in India.
  18. Sushruta is the father of surgery. 2,600 years ago he and health scientists of his time conducted complicated surgeries like cesareans, cataract, artificial limbs, fractures, urinary stones, plastic surgery and brain surgery. Usage of anesthesia was well known in ancient India. Over 125 surgical tools were used. Deep knowledge of anatomy, physiology, etiology, embryology, digestion, metabolism, genetics and immunity is also found in many texts.
  19. When many cultures were only nomadic forest dwellers over 5,000 years ago, Indians established the Harappan culture in the Sindhu Valley (Indus Valley Civilization).
  20. The four religions born in India, Hinduism, Buddhism, Jainism, and Sikhism, are followed by 25% of the world's population.
  21. The place value system and the decimal system were developed in India in 100 BC.
  22. India is one of the few countries in the World, which gained independence without violence.
  23. India has the second largest pool of Scientists and Engineers in the World.
  24. India is the largest English-speaking nation in the world.
  25. India is the only country other than U.S. and Japan, to have built a super computer indigenously.


தீ மிதித்து thermodynamics பாடம் நடத்திய விரிவுரையாளர்

எனது ஊரில் "பூமிதித்தல்" என்பது பிரபலம். இந்த கட்டுரையின் அடுத்த பத்தியினைப் படிக்காமல் அதென்ன பெரிய பிரமாதம்! நான் கூட செய்வேனே என்று அவசரப்பட்டு சபதம் செய்துவிடாதீர்கள்.

அந்த திருவிழாக் காலங்களில், கோவிலுக்கு முன்னே நீளமாய் ஒரு குழி திருவிழாவிற்கு சில நாட்கள் முன்னதாகவே வெட்டப்பட்டு விடும். அடுத்த நாள் விறகு கட்டைகள் குழியின் முன்னதாக குவித்துவைக்கப்படும். திருவிழா தினத்தன்று சாயங்காலம் விறகுகட்டைகளை குழியினுள் இட்டு, தீவைத்துக் கொளுத்துவார்கள். அது தக தகவென்று எறிந்து முடிந்து கனன்று கொண்டிருக்கும். அந்த நேரத்தில் இரவும் வந்திருக்கும். கடவுளுக்கு தீபார
தனை முடிந்தபின், பக்தர்கள் ஒவ்வொருவராய், சாமி வந்த நிலையில் (?) திடு திடுவென்று, தீயின் மீது ஓடி மறு பக்கத்தை அடைவார்கள். நான் சிறுவனாய் இருந்த, அந்த சமயங்களில் என்னைக் கடவுள் நம்பிக்கை கொள்ள வைத்த சம்பவங்களில் இதுவும் ஒன்று. பிற்காலங்களில், கடவுள் உண்டு, இல்லை என்று வரும் வாக்குவாதங்களுக்கு கடவுள் அல்லது சக்தியிருப்பு கொள்கையை நிறுவுவதற்கு, நான் ஏகமாய் பயன்படுத்திக்கொண்ட சம்பவம் இது. அதன் பின் ஒருமுறை, ஒரு விவரமான நாத்திக நண்பரிடம் இந்த தீமிதித்தல்் நிகழ்ச்சியை கடவுள் இருப்பு கொள்கைக்கு, ஆதாரமாய் நான் பயன் படுத்தியபோது அவர் சொன்ன விசயம் என்னை ஆச்சரியப்படுத்தியது. அதாவது, திராவிட கழக நண்பர்கள் ´கடவுள் இல்லை´ என்று சொல்லிக்கொண்டே தீமிதித்ததாக அவர் கூறிய சம்பவம் தான் அது. இருந்த போதிலும், அது மாதிரியான சம்பவத்தை நான் நேரில் பார்த்ததில்லை. ஆனால், அவர் கூறியதை முழுவதும் பொய்யென்று எடுத்துக்கொள்ள முடியவில்லை.

தீ மிதித்தல் எல்லோராலும் சாத்தியப்படக்கூடிய ஒன்றென்றால், அதற்கான விளக்கம் என்ன? சாமி வருதல் என்றால் என்ன? அந்த நிலையில் இருக்கும் மனிதனுக்கு ஏன் தீ சுடுவதில்லை? அந்த கேள்விகள் மட்டும் விடை கிடைக்காமல் என்னிடம் நிரந்தரமாய் இருந்தன? ஆனால், இந்த செய்தியை இன்று படிக்கிற போது, ஏதோ கொஞ்சம் உண்மை இருப்பது மாதிரி, இந்த நிகழ்வின் பின்னணி புரிந்த மாதிரி தெரிகிறது. அதை உங்களிடம் பகிர்ந்துகொள்ளலாம் என்பதற்கே இந்த பதிவு. அந்த செய்தி கீழே தரப்படுகிறது:

Physics professor David Willey doesn't use chalk and formulas to spark his students' interest in thermodynamics.

Instead, he walks on fire.

"Nothing gets a student's attention like the possibility that I might kill myself," said Willey, this year's winner of the President's Award for Excellence in Teaching at the University of Pittsburgh at Johnstown.

அந்த செய்தியில் தீமிதித்தல் எப்படி சாத்தியமாகிறது என்பது பற்றிய விளக்கம் கொடுக்கப்படுகிறது. தீமிதித்தல் சாத்தியமாவது அறிவுக்கு புலப்படாத சக்தியானாலோ, மத நம்பிக்கையினாலோ இல்லை. உண்மையில், மரக்கட்டைகளை உபயோகப்படுத்தி நெருப்புப் படுகைகளை உருவாக்குவதினாலேயே இது சாத்தியமாகிறது. நெருப்புக்கட்டைகளின் வெப்பம் 1000 பாரன்கீட்டுக்கு மேலே போனாலும் கூட இது சாத்தியமாவது, கட்டை ஒரு அரிதில் கடத்தி (insulator) என்பதாலேயே. இது வெப்பம் கால்களை அடைந்துவிடாமல் அடக்கி வைத்துக் கொள்கிறது. மேலும், இதன் மேலாக உள்ள எறிந்த பட்டைகளின் சாம்பல் இன்னும் வெப்பத்தை கால்களுக்கு வரவிடாமல் தடுத்து விடுகின்றன. அதோடு மிக வேகமான நெருப்பின் மீதான நடை, தீமிதித்தலை முழுவதுமாய் சாத்தியப்படுத்துகிறது.

முடிவாக வைலே(willey) கூறுவதாவது:

It's a matter of stepping up to the start line with courage and training your brain to get your foot to take the first step.

"You could keep on going forever and ever," Willey told LiveScience. "It's just a question of how much wood you want to cut."


Free Hit Counter
Google PageRank

Your Ad Here