Probability theory தவறு என்று சொல்லும் micro-psychokinesis ஆராய்ச்சிகள்
probability theoryபடி தலை வருவதற்கு 50 சதவீத வாய்ப்புகளும், தாயம் விழவைப்பதற்கு, 12.5 சதவித வாய்ப்புகளும் உள்ளன. ஆனால், ராடின் மற்றும் நெல்சன் 1984களில் செய்த micro-psychokinesis ஆராய்ச்சிகள், probability theory தவறாகக்கூடும் வாய்ப்புகளை முன்வைக்கின்றன. அதாவது சில மனிதர்களால், இயற்கைக்கு வினோதமாக, அதிகப்படியான முறை தாங்கள் விரும்பிய ஒன்றை, (தலை அல்லது தாயம்) விழவைக்க முடிந்ததை இவர்களின் ஆராய்ச்சிகள் வெளிக்கொண்டுவந்தன. மேலும், மனிதன் தன் மனோசக்தியால், random gamesகளில் தான் விரும்பிய விளைவுகளை ஏற்படுத்த முடியும் என்பதை இவர்களின் கண்டுபிடிப்புகள் உறுதி செய்தன. அவர்களின் முடிவுகள், Foundations of physics என்ற இயற்பியல் பத்திரிக்கையில் 'Evidence for consciousness-related anomalies in random physical systems' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டன.
இது ஒன்றும் ஆச்சரியமான விசயமாக எனக்குத்தெரியவில்லை. எனது 10 வயது அக்கா பெண்ணுடன், நிறைய முறை தாயம் விளையாடியிருக்கிறேன். அவள் பெரும்பாலான தடவைகள், தான் விரும்பிய எண்ணை, தாயக்கட்டையில் வரவைத்து காட்டியதுண்டு. அதனால், முடிந்த வரை அவளுடன் கூட்டு சேர்ந்து விளையாடி தாயத்தில் வெல்வதற்கு முயற்சி செய்வேன். (இது இன்னொரு விசயத்தையும், இங்கெ குறிப்பிட வைக்கிறது. அது என்னவென்றால், சீனாவின் psychic research, 9-13 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளிடம் இந்த விளையாட்டுகளில் விரும்பிய விளைவை ஏற்படுத்தும் அமானுஷ்ய சக்தி அதிகமிருப்பதாக தெரிவிக்கின்றன.)
இந்த கண்டு பிடிப்புகள், புதிதாக ஒன்றையும் சொல்லிவிடவில்லை. அதாவது, பொருட்களின் மீதான, அல்லது செயல்களைத் தொடர்ந்து வரும் விளைவுகளின் மீதான, மனோசக்தியின் தாக்கத்தினை நாம் தலைமுறை தலைமுறையாக கேள்விப்பட்டு வருகிறோம். இந்த அறிவியல் ஆராச்சிகள், இதன் இருப்பினை உண்மை என்று நிரூபித்திருக்கின்றன. ஆனால், எவ்விதம் இந்த தாக்கம் நடக்கிறது என்பது, இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது.
முடிவாக, கேள்வி ஒன்றைக் கேட்காமல் விட்டு விட்டால், நீங்கள் பின்னூட்டமாக எதை எழுதுவீர்கள்? அதற்காக ஒரு கேள்வி.
இந்து மதத்தில் இருக்கிற யாகம் வளர்த்தல் என்ற ஒன்றை psychokinesis முயற்சியாக பார்க்கலாமா?